போர்ன்மொழி
I was starving when I did it. I was desperate.You know when you're hungry, you do a lot of things you wouldn't ordinarily do!
-ஸில்வர்ஸ்டர் ஸ்டலோன்
செப்டம்பர் 1978, ப்ளேபாய் பத்திரிக்கை

Hays Code
 • ஷூ - சாக்ஸைத் தவிர வேறெதையும் கழற்றக் கூடாது
 • வயசான தாத்தா இருமினால் தவிர, கேமரா பெட்ரூம் பக்கமே போகக் கூடாது
 • வில்லன் ஹீரோயினை ரேப் செய்யலாம். ஆனால் ஒரு பட்டன் கூட ஓப்பன் பண்ணாமல். மிக முக்கியம் : ரேப் சீனில் காமெடி கூடாது.
 • ஹீரோ அஞ்சடி தூரத்தில் நின்னு வில்லனை போட்டுத் தள்ளலாம். ஆனா அதில் பழி வாங்கும் நோக்கம் இருக்கக் கூடாது
 • வில்லன் பண்ணக் கூடாத விசயங்கள் : திருட்டு, கொலை, கொள்ளை, போதை மருந்து, பாம் வைத்தல்! தேவையெனில் துப்பாக்கியில் சுடலாம், சத்தம் வராமல்
 • ஆர்ட் படம்? ஹீரோயின் ஒரு ப்ராஸ்டிட்யூட்? ஸாரி....!!! நெக்ஸ்ட்
 • தாராளமாக கருப்பர்களும் வெள்ளையர்களும் சங்கமிக்கலாம். ஆனால் 101% காட்சிகள் வெட்டப்படும்
 • உத்தம புத்திரர்களான, கடவுளின் தூதர்களை என்றும் தப்பாக காட்டக் கூடாது


செக்ஸ் வேண்டாமென சாமி என்றாவது சொல்லியிருக்கிறதா? ஆனால் ஆங்கில பூசாரிகள்... ”தனக்கு (பொதுவில்) கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக் கூடாது” என்ற நல்லெண்ணத்தில், கும்பிட வந்தவனை சொறிந்தார்கள். அரை லூசு அமெரிக்கர்கள் அரசாங்கத்தின் மீது பாய்ந்தார்கள். 

நாட்டாமையின் தீர்ப்பு
சிஷ்ய கோடிகளின் தொந்தரவு தாங்காமல், சில மாநிலங்களில் மட்டும் அரசாங்கமே ‘சென்சார்’ என்ற நடைமுறையை கொண்டு வர ஆரம்பித்தன. ஆனால் ஃப்ளோரிடாவில் கட் செய்யும் காட்சிகளுக்கு, நியூயார்க்கில் எந்தப் பிரச்சனையும் இல்லையென்ற அடுத்த குழப்பம் ஆரம்பித்தது. ஒருவேளை மத்திய அரசாங்கமே இதில் தலையிட்டு, நாடு தழுவிய ‘சென்சாரை’ ஆரம்பிக்குமோ என்ற ’பீதி’ ஹாலிவுட்டை தாக்கியது.

விழித்துக்கொண்ட ஹாலிவுட்டின் நாட்டாமைகள் (MGM, First National & Famous Players-Lasky), ஒரு முன்னாள் போஸ்ட் மாஸ்டரை நியமித்து ‘செய் / செய்யாதே / எச்சரிக்கை’ என்ற ஒரு லிஸ்டை தயாரித்தார்கள்.

1922-ல் ஆரம்பிக்கப் பட்ட MPPDA (Motion Picture Producers and Distributors of America) என்ற அமைப்பின் கீழ், வில் ஹேஸ் என்ற போஸ்ட்மாஸ்டர் உருவாக்கிய லிஸ்டின் ஸாம்பிளே மேலுள்ள 'Hays Code'.

ஆரம்பத்தில் ‘இப்படி செய்யலாம்..., அப்படி செய்யாமல் இருக்கலாம்’ என ஆலோசனை கூறிய MPPDA கொஞ்சம் கொஞ்சமாக, தன் ஆலமரத்தின் கிளைகளை அதிகரிக்க, சொம்பு வலுவேறியது. 1930-களில் ’இனிமேல் நீ இப்படி செய்...’ என அதிகாரம் செலுத்தியது. நாளடைவில் சென்ஸார் செய்யாத படங்களை தியேட்டரில் வெளியிட முடியாத நிலையை உருவாக, அமெரிக்கர்களின் ’எரோடிக் சினிமா’ அண்டர்க்ரவுண்டில் செயல்பட ஆரம்பித்தது.

எதோ அண்டர்க்ரவுண்ட் என்றதும், ஆஹா-ஓஹோ சீனெறெல்லாம் தோணலாம். ஆனால் காட்சிகள் என்னவோ முன்பே சொன்னது போல ஹூக்கை கழற்றுவது, சாமரம் வீசுவது போன்ற த்ராபைகள்தான்.  அதுவும்.. கிட்டத்தட்ட அடுத்த 40 ஆண்டுகளுக்கு!!
அமெரிக்கா இந்த சென்சார்ஷிப்பை ஆரம்பித்த நாட்களிலேயே ஐரோப்பாவில் ஒரு போர்ன் புரட்சியே ஆரம்பித்தது. அதன் விளைவே.. இன்றும் தமிழ் சினிமாவில் கூட இல்லாத ‘genre' என்ற விசயம், போர்னிலும் புகுந்தது. இந்த genre உதாரணத்திற்காக மட்டுமே சில ஆங்கில டைட்டில்களை தமிழ் படுத்தியிருக்கிறேன். உங்கள் ஆராய்ச்சிக்கும் இது உதவலாம்.
 • பெரியதையே ரசிக்கும் பெரிய பின்புறங்கள்
 • பேரிளம் பெண்களும் பெரிய கருப்பும்
 • சமகால குழு மனப்பான்மை
 • பெண்கள் காட்டிற்குள் சென்று விட்டார்கள்
 • புட்டங்களின் ஊர்வலம்
 • கட்டிற்கடங்காத சீருடைகள்
 • சவரம்
_____________________________________

அடங்க மறு
என்றுமே காலவதியான ஒரு விசயமென்றால், அது சமூகத்தின் கலாச்சார விதிகள்தாம். நாளுக்கு நாள் மாறும் அதன் கொள்கைகளின் வேகத்திற்கு, உருவாக்கப்பட்ட விதிகள் என்றுமே ஒத்துப் போனதில்லை. அதிலும் அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளில் இது சாத்தியமே இல்லை. கடல்/விமான போக்குவரத்து, இரண்டாம் உலகப் போர், ஐரோப்பிய திரைப்படங்கள், அனைத்து கண்டங்களிலிருந்தும் குடியேறும் மக்கள் என அமெரிக்கா தன் வெள்ளையடையாளத்தை இழந்தாலும்........

........ MPPDA மட்டும், Hays Code-ஐ விடுவதாக இல்லை. அதற்கு இன்னமும் வில்லன் ஐந்தடி தள்ளி நின்றே கற்பழிக்க வேண்டுமென்ற கலாச்சார கவலையிருந்தது. இதன் காரணமாகவே 1950-களில் ஹேஸ் கோட் - ஹேஸ் ஜோக், என்றானது.

யோகி ஸ்ரீராமானந்த குரு
எழுதிய ஆன்மீகப் பதிவு
நாளைடைவில் நாட்டமைகளின் தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுக்க, நாட்டாமைகளே தங்களுக்குள் காலை வாறிக் கொள்ள..., இன்றைய இந்திய சென்சாரைப் போன்றே அமெரிக்காவின் சென்சாரும் ஒரு செயல்படாத அமைப்பானது. 'ரெண்டு பட்டன் கழண்டதெய்ல்லாம் சென்சார் செய்ய முடியாது. முடிஞ்சதை பார்த்துக்க’ -என இண்டிபெண்டண்ட் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சென்சாரே செய்யாமல் சில படங்களை ரிலீஸ் செய்ததும், அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்ததும் ஹாலிவுடின் வயிற்றில் புளி, உப்பு, சர்க்கரை போன்றவைகளை கரைக்க............ நாட்டாமைகள் புதிய உத்தியை புகுத்தினார்கள். விளைவு?

MPAA!!!!  

அதாவது, படமெடுப்பவன் தான் சொல்வதை கேட்வில்லையென்றதால், படம் பார்ப்பவனை பார்த்து தனது ‘அட்வைஸை’ சொல்லும் அமைப்பு. ’இதோ பாருப்பா... படத்துல வில்லன் அஞ்சடி தள்ளி நின்னு கற்பழிச்சா அது PG, மூணடின்னா அது PG-13, ஒரடின்னா R, ஸீரோன்னா X (NC-17). உன்னோட கல்ச்சருக்கு ஏத்த மாறி.. உன் ஃபேமிலியை கூட்டிட்டு போய் படம் பாரு’  என்று நீங்கள் என்ன பார்க்க வேண்டும்/வேண்டாமென முடிவு செய்வதே MPAA-வின் வேலை.

இதைப் பற்றி ஏற்கனவே சமகால தமிழ் பதிவுலகின் தவிர்க்க முடியாத சக்தி, இங்கே எழுதியிருப்பதால், மேற்கொண்டு மேட்டர் வேண்டுபவர்கள் அதை படிக்கவும்.

________________________________

எவல்யூஸன் : எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. எந்த விசயமும் தன் ஆரம்பத்தில் உன்னதம் பெறுவதில்லை. அது உயிரியல் பரிணாம வளர்ச்சியிலிருந்து, தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள், நாமெழுதும் மொக்கை பதிவுகளென அனைத்திற்கும் பொருந்தும். 

போர்ன் மட்டும் இதில் விதிவிலக்கா?!!! பல ஆண்டுகளாக Church/MPPDA/MPAA வின் கட்டுப்பாட்டிலிருந்த அமெரிக்கர்களின் கலாச்சாரம், கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பிக்க, ஒரு வழியாக 1970-களில் அமெரிக்க அரசாங்கமே... ‘போர்னை’ சட்ட பூர்வமாக்க......

... போர்ன் பூதம் சிலிர்த்தது!
இவர் மேலும் கூறுகிறார் ...

10 கலந்துரையாடல்கள்

மீடியா வாய்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியின் முழு வடிவம்:

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா வாழ் தமிழர் ஒருவரிடம் இருந்து நம் எடிட்டோரியலுக்கு ஒரு ஈமெயில் வந்திருந்தது. அதன் சாராம்சம் இதுதான் :

தெய்வத் திருமகள் என்கிற படம் தமிழ்நாட்டில் ரிலீசான அன்றே அமெரிக்காவிலும் வெளியானது. தமிழ் மீடியாக்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் அந்தப் படத்தையும் அதன் இயக்குநர் விஜய்யையும் நடிகர் விக்ரமையும் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டு ஆர்வமிகுதியால் நானும் தெய்வத் திருமகளை தரிசிக்கச் சென்றேன். அதிர்ந்தேன்.  

இயக்குநர் விஜய், தனது சொந்தக் கற்பனையால் இது போன்ற ஒரு படத்தை எடுத்திருந்தால், விக்ரம் சுயமாக நடித்திருந்தால் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது சரி. ஆனால், ஐ ச்ட் ண்ச்ட் என்கிற ஆங்கிலப் படத்தை அப்பட்டமாகக் காப்பியடித்து படம் எடுத்திருப்பவருக்கும், அதில் ஹீரோவாக நடித்த சீன் பென்னை ஜெராக்ஸ் காப்பி எடுத்து நடித்திருப்பவருக்கும் இந்த அங்கீகாரமும் பாராட்டும் தகுமா? 

யாரோ பெற்ற குழந்தைக்கு நான் தான் அப்பா என்று உரிமை கொண்டாடுவதும் அதற்கான பாராட்டுதல்களைப் பெற்றுக்கொள்வதும் அசிங்கமில்லையா? சம்பந்தப்பட்டவர்களுக்கு வெட்கம் இருக்கிறதோ இல்லையோ, இப்படியொரு திருட்டு நடந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன்.

- என்று அமெரிக்க நண்பர் மிக மிகக் காட்டமாக தன் கருத்துக்களைக் கொட்டியிருந்தார் அந்த ஈ.. சாரி தீ-மெயிலில். அவரின் மெயிலில் இருந்த கோபமும் நியாயமும் நம்முள்ளும் பல கேள்விகளை எழுப்பியது. 

உலகத் திரைப்படங்களைக் காப்பியடிப்பது இன்றைக்கு ஒரு டிரெண்டாகவே கோலிவுட்டில் உருவாகிவிட்டதா? சொந்தமாக யோசிக்க முடியாமல் போனதற்குக் காரணம் நம்மவர்களின் சோம்பேறித்தனமா? அல்லது யாருக்கு இதெல்லாம் தெரியப்போகிறது என்கிற அலட்சியமா? கற்பனையும் படைப்புத்திறனும் கொண்ட கதாசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதேடி திரையுலகை ஒரு ரவுண்ட் அடித்தோம். நமக்குக் கிடைத்த பதில்கள் எதுவும் மகிழ்ச்சி தருவதாக இல்லை. 

கோலிவுட்டில் புதிதாக ஒரு படம் ரிலீசானால் எத்தனை காப்பி (பிரிண்ட்கள்) போடுகிறார்கள் என்று விசாரிப்பதுதான் மரபு. ஆனால், இப்போதெல்லாம் இந்தப் படம் எந்தப் படத்தின் காப்பி என்றுதான் விசாரிக்கிறார்கள். அந்த அளவுக்கு ணீடூச்ஞ்டிச்ணூடிண்ட் என்கிற விசித்திரமான வியாதி நம் தமிழ்த் திரையுலகினரை கடுமையாகத் தாக்கியிருக்கிறது.

இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், அடுத்தவரின் படைப்புகளை, சிந்தனைகளை, எண்ணங்களைத் திருடி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவார்கள்.  ஆனால், அதற்கான குற்றயுணர்ச்சி ஏதுமின்றி, கொஞ்சம் கூட வெட்கமோ, மனசாட்சியோ இல்லாமல், இந்தப் படைப்புக்காகவே மூன்று வருடங்கள் வாழ்ந்தேன், படுத்து உருண்டேன், பல் துலக்கினேன் என்றெல்லாம் பேட்டி தருவார்கள். 

உண்மையில் நடப்பது என்ன தெரியுமா? இன்றைய இளம் தலைமுறை இயக்குநர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்குக் கீழே ஒரு பெரிய அசிஸ்டெண்ட் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்கள். அந்த அசிஸ்டெண்ட்களுக்கு கொடுக்கப்படுகிற அசைன்மெண்ட் இதுதான்: 

உலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட அல்லது பெரிய அளவில் போற்றப்பட்ட அல்லது பெரும் சர்ச்சைகளை உருவாக்கிய படங்களை நெட்டில் வலை வீசி தேடவேண்டும். அவற்றின் பெயர்களைக் குறித்து வைத்துக்கொண்டு பர்மா பஜார், மவுண்ட் ரோட் என ஆளுக்கொரு திசையாக அலைந்து திரிய வேண்டும். இப்போது அந்தச் சிரமம் கூட இல்லை.

வெளிநாட்டுப் படங்களின் சிடிக்களை விற்பனை செய்யும் தொழில் இன்றைக்கு கத்திரிக்காய், வெண்டைக்காய் வியாபாரம் போல் ஆகிவிட்டது. தெருவுக்கு தெரு இத்தகைய கடைகள் முளைத்துவிட்டன. ஹாலிவுட் படங்கள் என்றில்லை. கொரியா, ஜப்பான், ஃபிரான்ஸ், இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, ஈரான் என பிற நாட்டு படங்களும் இங்கு சல்லிசான விலையில் கிடைக்கும். ஆனால் என்ன, நமக்குத் தேவையான சிடிக்கள் கிடைக்க கொஞ்சம் மெனக்கெட்டு தேட வேண்டும். அவ்வளவுதான்.

டிஸ்கஷன் என்ற பெயரில் இயக்குநரும் அவரது உதவியாளர்களும் ஒன்றாகச் சேர்ந்து தேடலில் கிடைத்த அத்தனை படங்களையும் பார்த்துவிடுவார்கள். அதில், தமிழ்ச் சமூகத்துக்கு பொருந்தி வரக்கூடிய கதை அல்லது யூனிவர்சல் சப்ஜெக்ட் என்ற தகுதியில் எந்த நாட்டில் எடுத்தாலும் எடுபடும் என்ற அடிப்படையில் அமைந்த கதை எது என்று விவாதிப்பார்கள். 

எந்தக் கதையை படமாக எடுப்பது சாரி, சுடுவது என்று முடிவானவுடன் அதில் இரண்டு மூன்று கேரக்டர்களை எக்ஸ்ட்ராவாக சேர்ப்பார்கள். காமெடி டிராக்கையும் பாடல்களுக்கான லீடையும் பிடிப்பார்கள். பின்னே, அவர்களின் பங்களிப்பும் அதில் இருக்க வேண்டுமல்லவா? அதற்குப் பின்னர், ஒன்லைனைப் போட்டு, நடிகர்களைத் தேர்வு செய்து ஷுட்டிங் போய்விடுவார்கள். 

ஐந்து அல்லது ஆறே மாதத்துக்குள் உலகத் திரைப்படங்களுக்குச் சவால் விடும் ஒரு தமிழ்ப்படம் ரெடி! 

கோலிவுட்டில் பல படங்கள் இப்படித்தான் உருவாகின்றனவா என்று விசாரித்தால் ஆமாம் பாஸ் என்று ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் முன்னணி இயக்குநர் ஒருவர். தெய்வத் திருமகள் ஆஹா ஓஹோவென்று புகழப்படுவது அவருக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. நாம் எவ்வளவோ வற்புறுத்தியும் தனது பெயரைக் கண்டிப்பாகப் போடக்கூடாது என்ற கண்டிஷனோடுதான் பேச ஆரம்பித்தார் அவர்.

விஜய் எடுத்த படத்தை காவியம் கீவியம்னு புகழறாங்க. அப்படி புகழறவங்க முதல்ல ஐம் சாம் படத்தைப் போய் பார்க்கட்டும். படத்தில இருந்து அப்படியே 80 சதவீதம் அடிச்சிருக்காங்க பாஸ். இதில என்ன ஒரிஜினாலிட்டி இருக்கு?

விக்ரமும் தன் பங்குக்கு நல்லா காப்பியடிச்சிருக்காரு. அவரோட ஹேர்ஸ்டைல், பாடி லாங்வேஜ், வாயைத் தொறந்து வச்சுக்கிட்டு பேசற விதம் எல்லாமே சீன் பென்கிட்ட இருந்து சுட்டதுதான். விக்ரம், சீன் பென்னைப் பார்த்து பார்த்து பிராக்டிஸ் பண்ணியிருக்க வேண்டிய அவசியமே இல்ல.

மன வளர்ச்சி குன்றியவரா ஒரு அப்நார்மல் கேரக்டர்ல நடிக்கறது ரொம்ப சுலபமான விஷயம். சேது, அந்நியன், பிதாமகன்ன்னு அவரே நெறைய அப்நார்மல் கேரக்டர்ஸை பண்ணிட்டாரு. அதே கேரக்டர்ஸைதான் திரும்ப திரும்ப வேற வேற ஸ்டைல்ல பண்றாரே தவிர அவரும் புதுசா ஒண்ணும் கிழிச்சிடலை. இந்த லட்சணத்தில நெறைய ஹோம் ஒர்க் பண்ணினேன்; கேரக்டர்ஸை ஸ்டடி பண்ணினேன்னு அவர் கொடுக்கற பில்ட் அப்லாம் ரொம்ப ஓவர்.

ஜீ.வி பிரகாஷ் மட்டும் இவங்களுக்கு சளைச்சவரா என்ன? ரோஜர் மில்லரோட விசில் ஸ்டாப் டிராக்கை அப்படியே பயன்படுத்தியிருக்காரு இந்த இசை சுனாமி. பப்ப பாப்பன்னு ஆரம்பிக்கற பாட்டு, 1973-ல வந்த ராபின் ஹுட் படத்தோட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக். அமன், அயன் அலிகானோட ட்ரூத் பாட்டை ஜகடதோமா போட்டுத் தந்திருக்காரு. கூட்டமா சேர்ந்து கொள்ளை அடிக்கறதை கேள்விப்பட்டிருப்பீங்க இல்லையா? இந்தப் படத்தில அதுதான் நடந்திருக்கு என்று தன் குமுறலைக் கொட்டித் தீர்த்துவிட்டார் அவர். 

தெய்வத் திருமகள் என்பது தமிழ்த்திரையிலகின் சமீபத்திய கரும்புள்ளி. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் இது போன்ற பல கரும்புள்ளிகள் வெளிவந்திருக்கின்றன (அவை தனியாக அட்டவணையில் தரப்பட்டுள்ளன). இதில் துரதிர்ஷ்டமான விஷயம் என்னவெனில், பிற நாட்டுப் படத்தை கார்பன் காப்பி செய்த யாரும் ஒரு courtesy  அடிப்படையில் கூட இந்தப் படத்தின் கதை, குறிப்பிட்ட படத்தின் கதையைத் தழுவியது என்ற அறிவிப்பையோ அல்லது மூலக்கதைக்கு நன்றி சொல்லும் நாகரிகத்தையோ கடைப்பிடிக்கவில்லை என்பதுதான். 

இந்தப் போக்கு தமிழ்த் திரையுலகுக்கு ஆரோக்கியமானதுதானா என்று மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான ஆர்.செல்வராஜிடம் கேட்டோம். பாரதிராஜாவுக்கு முதல் மரியாதை, மணிரத்னத்துக்கு அலைபாயுதே போன்ற சூப்பர் ஹிட் கதைகளைக் கொடுத்தவர் அவர்.

யாரோ என்னவோ செஞ்சிட்டு போகட்டும் சார். அதைப் பத்தி எனக்கென்ன? தேவையில்லாம எனக்கு இதுக்கு இந்த வம்பு என்று விரக்தியும் கடுப்புமாகப் பேசிவிட்டு போனை வைத்துவிட்டார் ஆர். செல்வராஜ். கன்னடத் திரையிலகில் தற்போது மிகவும் பிசியாக அவர் இயங்கிக் கொண்டிருக்கிறார். தமிழ்த் திரையுலகம் தன்னை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்கிற ஆதங்கம் அவரது பேச்சில் தெரிந்தது.

வெளிநாட்டுப் படங்களைக் காப்பியடிப்பது பற்றி இளைய தலைமுறை இயக்குநர்களிடம் விசாரித்தால், யாருமே வெளிப்படையாக வாய் திறக்க மறுக்கிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ இந்தப் போக்கை ஆதரிக்க வேண்டிய அல்லது அதை எதிர்த்துப் பேச முடியாத நிர்ப்பந்தத்துக்கு அவர்கள் ஆளாகி இருக்கிறார்கள் என்பது நன்றாகவே புரிகிறது.

கிகுஜிரோ படத்தை காப்பியடித்து மிஷ்கின் நந்தலாலா படத்தை எடுத்தது குறித்து ஒரு தனியார் சேனல் கருத்து கேட்டபோது, அவர் தப்பான விஷயத்தை ஸ்கிரீன்ல காட்டலையே. ஒரு நல்ல விஷயத்தைத்தானே கொண்டு வந்தாரு என்று சேரன் தனது நண்பருக்காக வக்காலத்து வாங்கினார். சோட்ஸி என்கிற ஆப்பிரிக்கப் படத்தின் அக்மார்க் தமிழ்ப் பதிப்பான யோகி படத்தைத் தயாரித்ததன் மூலம் அமீரும் இதற்கான ஆதரவைத் தெரிவித்துவிட்டார்.

பார்த்திபன் கனவு, மந்திரப்புன்னகை போன்ற வித்தியாசமான படங்களைத் தந்த கரு.பழனியப்பனும் இதை எதிர்க்கவில்லை. என்னை மாதிரி இயக்குநர்கள் எல்லாம் ஏற்கெனவே வந்த தமிழ்ப்படங்களைக் காப்பி அடிச்சு படங்கள் பண்றோம். சில பேர் வெளிநாட்டுப் படங்களைக் காப்பி பண்றாங்க. இது நல்ல வளர்ச்சிதானே என்கிறார். அவர் கிண்டலாகப் பேசுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

இந்தச் சிந்தனைத் திருட்டை எதிர்த்து ஒரு சிறு துரும்பைக் கிள்ளிப் போடக்கூட திரையுலகைச் சேர்ந்தவர்கள் தயாராக இல்லை என்கிற நிலையில் ஐடி துறையைச் சேர்ந்த ராஜேஷும், ஹாலிவுட் பாலாவும் பூனைக்கு மணி கட்டும் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவருமே சினிமாவின் ஆத்மார்த்த ரசிகர்கள். நல்ல படங்கள் குறித்து இணையத்தில் தொடர்ந்து எழுதி வருபவர்கள். ராஜேஷ் பெங்களூருவிலும் ஹாலிவுட் பாலா அமெரிக்காவிலும் வசிக்கிறார்கள். ராஜேஷ், கருந்தேள் என்ற பெயரில் ஒரு பிளாக்கை ஆரம்பித்து தான் பார்த்த, தன்னை பாதித்த சினிமாக்கள் குறித்து எழுதி வருகிறார்.

இந்தத் தகவல்களை விட இவர்கள் செய்திருக்கும் வேலைதான் மிகவும் சுவாரசியமானது. ஐம் சாம் படத்தை காப்பி அடித்து தமிழ்நாட்டில் இப்படியொரு படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான நியூலைன் சினிமாவுக்கு ஒரு மெயிலைத் தட்டியிருக்கிறார் ஹாலிவுட் பாலா. அதே நேரத்தில், விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும்வேலாயுதம் படத்தின் போஸ்டர் டிசைன்களும் அதன் டிரைலரும் Assassins Creed என்கிற கேமில் இருந்து அப்பட்டமாகத் திருடப்பட்டிருக்கிறது என அந்த கேம்ஸை உருவாக்கிய அப்சாஃப்ட் நிறுவனத்துக்கு மெயில் தட்டியிருக்கிறார் கருந்தேள். 

முன்னரே பேசி வைத்துக்கொள்ளாமல் தற்செயலாக ஒரே நேரத்தில் இருவரும் இந்த மெயில்களை அனுப்பியிருப்பதுதான் ஆச்சர்யம்.

கருந்தேளைப் போனில் பிடித்து, தமிழ் சினிமாவின் மேல் அப்படியென்ன உங்களுக்குக் கோபம் என்றோம். 

யார் மேல நமக்கு அதிக அன்பு இருக்கோ அவங்க மேலதான் நாம அதிகமா கோபமும் படுவோம். இது நெருக்கமும் உணர்வும் சம்பந்தப்பட்ட விஷயம். நாங்க ரெண்டு பேருமே சினிமாவை ரொம்ப நேசிக்கிறவங்க. முதல் மரியாதை, ஆரண்யகாண்டம், யுத்தம் செய்னு நல்ல படங்கள் தமிழ்ல வர்றப்ப எங்களுக்கு சந்தோஷமா, பெருமையா இருக்கு. அது மாதிரியான படைப்புகள் கோலிவுட்ல நிறைய வரணும்னு நாங்க விரும்பறோம்.

ஆனா, சொந்தமா யோசிக்க முடியாம, ஃபாரின் படங்களை காப்பியடிச்சு படம் எடுத்துட்டு அதை அவங்களே கஷ்டப்பட்டு கிரியேட் பண்ணின மாதிரி பேசறதைத்தான் எங்களால ஜீரணிக்க முடியலை. அடுத்தவரோட பொருளையோ அல்லது பணத்தையோ அபகரிச்சு அதை தன்னுடையதுன்னு ஒருத்தன் சொந்தம் கொண்டாடினா அதை திருட்டுன்னு சொல்றோம். அப்படின்னா அடுத்தவரோட படைப்பையும் சிந்தனையையும் அபகரிச்சு அதுக்கு சொந்தம் கொண்டாடறதுக்கு பேரும் திருட்டுதானே. 

இதுக்கு இன்ஸ்பிரேஷன், தழுவல்ன்னு நீங்க எப்படி பேர் வச்சாலும் சரி. திருட்டு திருட்டுதான். வேற எந்த ஃபீல்டிலயும் இப்படி காப்பி அடிக்கற வேலையை தைரியமா செய்ய முடியாது. உடனே கேஸ் போட்டு கோர்ட்டுக்கு இழுத்துடுவாங்க. ஆனா, சினிமாவில மட்டும்தான் இந்தக் கூத்து எந்தப் பிரச்னையும் இல்லாம தைரியமா, வெளிப்படையா  நடந்துட்டிருக்கு. எதிர்த்துக் குரல் கொடுக்கத்தான் யாருமே இல்ல.

நான் சிம்பிளா ஒரு கேள்வி கேக்கறேன் சார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களை தமிழ்ல எப்படி ரீமேக் பண்றீங்க? முறையா அந்தப் படத்தோட தயாரிப்பாளர்கிட்ட ரைட்ஸ் வாங்கிட்டுத்தானே படம் எடுக்கறீங்க. ஆனா ஃபாரின் படங்களை ரீமேக் பண்ணும்போது மட்டும் ஏன் அந்த முறையான வழியை கடைப்பிடிக்க மாட்டேங்கறீங்க? 
ஏன்னா இங்க அப்படி ரைட்ஸ் வாங்காம படம் எடுத்தா சம்பந்தப்பட்டவங்க கேஸைப் போட்டு உண்டு இல்லைன்னு செஞ்சிடுவாங்க. ஆனா, வெளிநாட்டுப் படங்களைத் திருடி படம் எடுத்தா அது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளருக்கு தெரியவே போறதில்லை. அந்தத் தைரியத்திலதான இந்த மாதிரி காப்பியடிக்கறீங்க?

போன தலைமுறை மக்களுக்கு இதப்பத்தில்லாம் தெரியலை. அதனால கேள்வி கேக்கலை. இப்பதான் எல்லாரும் எல்லா விஷயங்களையும் நெட் மூலமா தெரிஞ்சிக்கறாங்களே. அது தெரிஞ்சதுக்கப்புறமும் நீங்க இப்படி திருடறது எந்த விதத்தில நியாயம் சார்? 

பிற நாட்டில இருக்கற நல்ல படங்களை தமிழுக்கு கொண்டு வர்றது நல்ல விஷயம்தானேன்னு பல பேர் சொல்றாங்க. அவங்க வாதம் சரின்னா நான் ஒண்ணு செய்யறேன். தவமாய் தவமிருந்துன்னு ஒரு நல்ல படம் வந்துச்சு. நல்ல விஷயத்தை திருப்பி சொல்றது நல்ல விஷயம்தானேன்னு சீன் பை சீன் அந்தப் படத்தை நான் அப்படியே எடுத்தா சேரன் அதை ஏத்துக்குவாரா? 

இந்த மாதிரி பூசி மெழுகி காரணம் சொல்றதெல்லாம் சரி வராது. இந்தத் திருட்டு தடுக்கப்படணும். இதைப் பத்தின விழிப்புணர்வு எல்லாருக்கும் வரணும். அதுக்காகத்தான் எங்களால முடிஞ்ச வேலையை நாங்க பண்ணிட்டிருக்கோம் என்று ஆவேசமும் ஆதங்கமும் பொங்க பேசினார் கருந்தேள்.

இன்றைய இயக்குநர்கள் மேல் கோபம் இருந்தாலும் அவர்கள் மேல் அதீத நம்பிக்கையும் இருக்கிறது இவர்களிடம். 

சீரியஸா உட்கார்ந்து யோசிச்சா போதும் சார். நம்ம இயக்குநர்களால நல்ல படங்களை உருவாக்க முடியும். ஆனா எல்லாருமே வேகமா வெற்றியை ருசிக்கணும், பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்படறாங்க. அந்த பேராசையாலதான் சொந்தமா யோசிக்க நேரம் செலவழிக்க முடியாம, ஏற்கெனவே ஹிட்டான படத்தை சுட்டு படம் எடுக்கறாங்க. குறுகில காலத்தில வெற்றி அடையணுங்கற அவங்க ச்ttடிtதஞீஞு மாறினா இந்த நிலைமையும் மாறும். அவங்க மாறுவாங்களா? என்று ஏக்கத்தோடு கேட்கிறார் அவர். 

இவர்கள் அனுப்பிய மெயிலுக்கு இன்னும் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம். 

ஆனா அதுக்காக நாங்க விடப்போறதில்ல சார். தொடர்ந்து இந்தக் காரியத்தை செய்யத்தான் போறோம். இனிமே யார் காப்பி அடிச்சு படம் எடுத்தாலும் சரி, அதோட ஒரிஜினல் புரட்யூசருக்கு நாங்க கண்டிப்பா மெயில் அனுப்புவோம். எங்க முயற்சியோட அடுத்த கட்டமா, அமெரிக்காவிலுள்ள மீடியாக்களோட கவனத்துக்கும் இந்த விஷயத்தைக் கொண்டு போயிருக்கோம். 

முறையான உரிமம் இல்லாம இந்த மாதிரி படம் எடுத்தா ஹாலிவுட்ல பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு கேஸ் போடுவாங்க. அது மாதிரி இங்க இருக்கற யாராவது ஒரு புரட்யூசர் மேல கேஸ் விழுந்தா போதும். தானா வழிக்கு வந்துடுவாங்க என்கிறார் கருந்தேள் நம்பிக்கையாக. 

அவரது நம்பிக்கை பலித்தால் தமிழ் சினிமாவுக்கு மிகவும் நல்லது. 

ஃபாரின் படங்களைத் தழுவி படம் எடுப்பதற்கு ஆதரவாகக் கொடி பிடிக்கும் இயக்குநர்கள் முன் வைக்கும் வாதம் இது:

யாருமே ஒரிஜினலா எதையும் கிரியேட் பண்ண முடியாது சார். ஒண்ணில இருந்துதான் இன்னொண்னு வரும்.இசை, படம், கதை எதுவா இருந்தாலும் ஏற்கெனவே பார்த்த பாதிப்பில் இருந்துதான் புதுசா ஒண்ணை கிரியேட் பண்ண முடியும். இதை காப்பின்னு சொல்ல முடியாது. இன்ஸ்பிரேஷந்தான்னு சொல்லணும். 

இன்ஸ்பிரேஷன் என்பது ஒருவரின் மேன்மையான படைப்பைப் போலவே மற்றொன்றை கிரியேட் செய்வது; அவருடைய படைப்பை அப்படியே திருப்பி உருவாக்குவதல்ல என்று நாம் பதில் விளக்கம் அளித்தால் கோபப்படுகிறார்கள்.

வெளிநாட்டுப் பழங்களைத் தழுவி படம் எடுக்கறதை நாங்க ஒண்ணும் புதுசா கண்டுபிடிக்கலை சார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே இது இருந்துட்டிருக்கு. நாடோடி மன்னன், ஆயிரத்தில் ஒருவன், கலங்கரை விளக்கம்லாம் ஆங்கிலப் படத்தோட தழுவல்தான். கேபியோட பல படங்களையும் இதுக்கு உதாரணமா சொல்லலாம். பாரதிராஜாவோட பதினாறு வயதினிலே ரேயான்ஸ் டாட்டர்ங்கற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். சிவப்பு ரோஜாக்களும் அப்படித்தான். மணிவண்ணனோட சின்னதம்பி பெரிய தம்பி, நூறாவது நாள், 24 மணி நேரம் இதெல்லாம் கூட ஹாலிவுட் படங்களையும் ஆங்கில நாவல்களையும் தழுவி எடுக்கப்பட்டவைதான். 

காலம் காலமா இது நடந்துட்டுத்தான் இருக்கு. அன்னிக்கு டெக்னாலஜியும் மீடியாவும் வளராததால மக்களுக்கு இதெல்லாம் தெரியலை. இன்னிக்கு சிஸ்டம் முன்னால உக்காந்தா உலகத்தில நடக்கற எல்லா விஷயமும் தெரிஞ்சிடுது. அதோட, உலகத் திரைப்படங்களை பாக்கற வாய்ப்பு சினிமா ஆட்களுக்கு மட்டும் இல்லாம சாதாரண ஜனங்களுக்கும் கிடைக்குது. அதனாலதான் நீங்க இப்படி கேள்வி கேக்கறீங்க. நீங்க என்ன பண்ணினாலும் இதை மாத்த முடியாது. சினிமா இருக்கற வரைக்கும் இது தொடர்ந்துட்டுதான் இருக்கும். 
இவர் மேலும் கூறுகிறார் ...

8 கலந்துரையாடல்கள்

Prequeal
1970, பிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை. அதிகாலை 3.42 மணி. Fayetteville, NC, Fort Bragg (ஒரு ராணுவ அமைப்பு). ஒரு ஃபோன்கால் வருகிறது. தடுமாற்றத்துடன் ஒரு குரல்…..

"நான் கேப்டன் மெக்டோனால்ட் பேசறேன். கத்தியால குத்திட்டாங்க. உதவி 544, Castle Drive உடனே வாங்க…" சில ஆர்மி ஆஃபிசர்கள் உடனே அந்த முகவரிக்குச் செல்கின்றனர். அங்கே… பெட்ரூமில் 26 வயது கலோட்டி கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அருகில் அவரது கணவர் ஆர்மி ஆஃபிசரும் மருத்துவருமான ஜெஃப்ரி மெக்டொனால்ட் உடம்பில் காயங்களுடன் நெஞ்சில் ஆழமான கத்திக் குத்துடனும் இருந்தார். ஆனால் உயிர் இருந்தது. "என் குழந்தைங்களுக்கு என்னாச்சுனு போய் பாருங்க என கதறினார்." மற்ற அறைகளில் 5 வயது கிம்பர்லியும் 2 வயது கிர்ஸ்டனும் கொடூரமான முறையில் குத்தப்பட்டு இறந்திருந்தனர்.

ஜெஃப்ரி மெக்டானலட்
ஜெஃப்ரி மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். என்ன நடந்தது என விசாரித்தபோது ஜெஃப்ரி சொன்னது….

"அன்னைக்கு நைட் டிவி பார்த்துட்டு படுக்கப் போனேன். என் குழந்தை என் படுக்கை ஈரமாக்கியிருந்தாள். சரி என்று நான் ஹாலில் சோபாவில் படுத்திட்டேன். திடீரென யாரோ அலறும் சத்தம் கேட்டு எந்திரிச்சேன். அப்போ ஒரு ஆள் என்னை கடுமையா தாக்கினான். இன்னொரு ஆள் என் உடையாலேயே என்னை தடுத்து இன்னும் தாக்கினான். ஒரு பெண் தூரத்தில நின்னுகிட்டு அந்த பன்றிகளை கொல்லுன்னு கத்திகிட்டு இருந்தா அவங்க பார்க்க ஹிப்பிக்கள் மாதிரி இருந்தாங்க. என்னை தலைல அடிச்சதில மயக்கமாயிட்டேன் அப்புறம் எந்திரிச்சப்ப அவங்க இல்ல என் மனைவி குழந்தைகளை காப்பாத்த முயற்சி செஞ்சேன் முடியல"

வீடு முழுவதும் ஆராய்ந்த போது போலீஸின் கண்ணில் அது பட்டது. படுக்கையின் ஹெட்போர்டில் ரத்தத்தால் "PIG" என எழுதப்பட்டிருந்தது…..

A Flashback
August 8, 1969. ஹாலிவுட் இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் வீடு. போலன்ஸ்கி படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்தார். இங்கே அவர் மனைவி ஷாரோன் டேட்டும், அவரது நான்கு குடும்ப நண்பர்களும் தங்கியிருந்தனர்.

அன்றிரவு ஹிப்பி தோற்றமுடைய மூன்று பெண்களும் ஒரு ஆணும் அந்த வீட்டில் நுழைந்தனர். வீட்டில் இருந்த அனைவரையும் கொடூரமான முறையில் கொலை செய்தனர் எட்டரை மாத கர்ப்பமாக இருந்த ஷாரோன் டேட்டையும் சேர்த்து. போகும்பொழுது ரத்தத்தில் "PIG" என எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.

Become Natural Born Killers
Pico Rivera, ஜூலை 21, 2000. அதிகாலை. எட்டு உறுப்பினர்களுடைய அந்த குடும்பத்தில் மூத்த மகள் 18 வயது எஸ்பரன்சோ ஏதோ சத்தம் கேட்டு விழித்து தன் பெற்றோரின் அறைக்குச் செல்ல…அங்கே இரத்த வெள்ளத்தில் தாயும் தந்தையும். தாய் அவசர உதவிக்கு ஃபோன் செய்யுமாறு முனக, அவளோ பயத்தில் அலறிக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்கு ஃபோன் செய்தனர்.
ஷரோன் டேட்

போலீஸ் வந்து பார்த்த போது ரிச்சர்ட் ஃப்ளோர்ஸ் சீனியர்(42 வயது), ரிச்சர்ட் ஜூனியர்(17வயது), சில்வியா ஜூனியர்(13 வயது), மேத்யூ (10 வயது) நான்கு பேரும் இறந்திருந்தனர். திருமதி சில்வியா ஃப்ளோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். மற்ற மகள்களான எஸ்பரன்சாவும், லாராவும் தாக்கப்படவில்லை, மேலும் இன்னொரு மகளான மோனிகாவும்.

மோனிகா டயாஸ் தற்செயலாக பாத்ரூமுக்கு சென்றிருந்தாள். அப்போது சத்தம் கேட்டு பயத்திலேயே அங்கேயே இருந்து விட்டாள்.

வீட்டின் பின்புறத்தில் ஒரு ரத்தம் தோய்ந்த கத்தி கிடைத்த்து. காவல்துறை விசாரித்ததில் ரிச்சர்ட் மிகவும் கண்டிப்பானவர், ஆனால் மிகவும் அன்பானவர் அதனால்தான் தன் மனைவியின் சகோதரியின் மகள்களான மோனிகா மற்றும் லாராவை தத்தெடுத்துள்ளார் என தெரிய வந்தது. வீட்டில் பலவந்தமாக நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. போலீஸார் சந்தேகம் மோனிகா மீது திரும்பியது. அவள் ஒளிந்திருந்திருந்ததாக சொல்லப்பட்ட பாத்ரூமில் 3 கத்திகள் இருந்தன. அவை அங்கே எப்படி வந்த்து என எனக்கு தெரியாது என மோனிகா சொன்னாள். ஆனால் அவளுக்கு அவை எந்த மாதிரியான கத்திகள் என அடையாளம் காண முடிந்தது. அவளிடம் அதைப்போல ROTC பயிற்சிக்காக ஒரு கத்தி இருந்தது.
மோனிகா டயஸ்

அடுத்த நாள் சம்பவத்தில் உயிர்பிழைத்த மகள்கள் மூவரும் ஷெரீஃப் அலுவலத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். மோனிகா தன் காதலனான 17 வயது மைக்கேல் நரன்ஜோவை அழைத்துச் சென்றாள். போலீஸ் மைக்கேலின் கையில் ஒரு கட்டுப் போடப்பட்டிருந்ததை கவனித்து அது எப்படி ஏற்பட்டது என கேட்டனர். பள்ளியில் விளையாடும்போது கண்ணாடி கீறி விட்டதாக சொன்னான். கண்ணாடியால் கீறிய காயம் இப்படி இருக்காதே என கேட்டபோது அது ரேசரால் ஏற்பட்ட வெட்டு என மாற்றிச் சொன்னான். சந்தேகம் இப்போது மைக்கேல் மேலும் மோனிகா மேல் வலுவாகவும் ஏற்பட்டது.

சம்பவம் நடந்த ஆறு நாட்களுக்கு பின் மோனிகாவும் மைக்கேலும் கைது செய்யப்பட்டனர். மைக்கேலின் கைரேகை கொலைக்கான கத்தி, duct tape, டார்ச் லைட் போன்றவற்றில் உள்ள ரேகைகளுடன் ஒத்துப்போனது. மைக்கேலின் வீட்டில் பல கத்திகளும், சீரியல் கில்லர்கள் சம்பந்தமான புத்தங்களும், STALK TO KILL என்கிற புத்தகமும் கண்டறியப்பட்டது. மைக்கேலின் சைக்கிளில் ரத்தம் காணப்பட்டது.

மைக்கேல், மோனிகா இருவரும் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்கள். ரிச்சர்ட் ஃப்ளோர்ஸ் கொஞ்சம் கண்டிப்பானவர். அவருக்கு மைக்கேலின் உடை, பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை. சிலசமயங்களில் மோனிகாவுடன் பழகும் சிலரை தடுத்திருக்கிறார். ஒரு பொறுப்புள்ள தகப்பனாக நிறையவே கண்டிப்புடன் இருந்தது தெரிய வந்தது. மோனிகா ஜுலையில் மைக்கேலுடன் வெளியே செல்ல அனுமதி கேட்டபோது ரிச்சர்ட் மறுத்திறுக்கிறார்.

மைக்கேலும் மோனிகாவும் ஆரம்பத்தில் கொலைகளை மறுத்தே வந்தனர். சில மாதங்களுக்கு பின் மைக்கேல் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு எழுதித் தந்தான். மைக்கேலும் மோனிக்காவும் இதுவரை எந்த குற்றமும் செய்ததில்லை. எந்த வன்முறையிலும் ஈடுபட்டதிலை. அவர்கள் கொடுரமான கொலைகளை செய்பவர்கள் என்பதற்கான எந்த அறிகுறிகளும் அதுவரை இருந்ததில்லை. மைக்கேல் கொலைக்கு இரு நாட்கள் முன்பு வரை கத்தியை முறையாக கையாண்டதே இல்லை. புத்தகங்கள் மூலம் ஒரு சில நாட்களில் எல்லாவற்றையும் கற்றான்.

அவர்கள் திட்டம் இதுதான்: மோனிகா பாத்ரூமில் காத்திருப்பாள், மைக்கேல் இளைய சகோதரி சில்வியாவை கொன்று அவளை மோனிகாவை அழைத்து வந்து காட்ட வேண்டும் பின்பு ஒரு கொள்ளையை செய்ய வேண்டும். ஆனால் மைக்கேலின் திட்டம் வேறாக இருந்தது. அவளின் மூத்த சகோதரிகளை கொலை செய்துவிட்டால் அவள் சந்தோசப்படுவாள் என நினைத்தான். சில்வியாவையும் மேத்யூ ரிச்சர்டையும் கொலை செய்துவிட்டு ஒரு அறையில் நுழைந்தான். ஆனால் அவன் நுழைந்தது அவளின் பெற்றோர் அறை. அவர்கள் அவனை பார்த்து விட்டதால் அவர்களையும் கொலை செய்ய முயற்சித்தான். அவள் அம்மா அதிகம் சத்தப் போட கத்திகளை பாத்ரூமில் இருந்த சில்வியாவிடம் தந்துவிட்டு சென்று விட்டான். மோனிகா எஸ்பரென்சோ பக்கத்து வீட்டிற்கு சென்றது வெளியே வந்திருக்கிறாள்.

மோனிகா தான் எதுவும் செய்யவில்லை எல்லாம் மைக்கேல் மட்டுமே காரணம் என்று கோர்ட்டில் கூறினாள். ஆனால் மோனிகா மைக்கேலிற்கு எழுதிய கடிதங்கள் மூலம் மோனிகாவும் மனிதர்களை கொல்வதில் ஆர்வமாய் இருக்கிறாள் என்பதும், Natural Born Killers படத்தில் வருவது போன்ற கொலைகாரர்களாய் ஆக வேண்டும் என்ற மைக்கேலின் விருப்பத்தை அவள் வெகுவாக ஊக்கப்படுத்தியது தெரியவந்தது.

கொலையாளிகள் குற்றம் நடந்தபோது மைனர்களாய் இருந்ததால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவில்லை. பதிலாக மைக்கேலுக்கு 5 ஆயுள்தண்டனையும், மோனிகாவிற்கு 4 ஆயுள் தண்டனையும் கிடைத்தது.

Epilogue
ஜெஃப்ரி மெக்டொனால்ட்டிற்கு தன் மனைவி குழந்தைகளை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் அவருக்கு எதிரானதாகவே இருந்தன. அவர் ஒரு டாக்டர் என்பதால் தன் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் காயமேற்படுத்திக் கொண்டார் என்பதும் அவரின் அறையில் 1969ல் நடந்த மான்சூன் கொலைகள் பற்றிய மேகசீன் சரியாக அதே பக்கத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்தது முக்கியமான வாதமாக இருந்தது. அவருக்கு தண்டனை கிடைத்தாலும் பின்னாளில் அவர் குற்றவாளி இல்லை என்பது போல சில ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் குற்றவாளி இல்லை என முழுமையாக எதுவும் நிரூபிக்கவில்லை.

ச்சால்ஸ் மேன்ஸன்
சார்லஸ் மேன்சன் கொடூர சைக்கோ கொலைகாரன். மேன்சன் ஃபேமிலி என தனக்கென ஒரு குழுவை உருவாக்கி பல கொலைகளை செய்து வந்தான். டெர்ரி மெல்ச்செர் மியூசிக் ரெகார்டு தயாரிப்பாளருக்கு அறிமுகமான மேன்சனின் மியூசிக்கை பார்த்து அதனை ரெகார்ட் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார். ஆனால் சார்லஸ் மேன்சர் ஒருமுறை தெருவில் சண்டையிடுவதை பார்த்துவிட்டு பிடிக்காமல் வாய்ப்பை மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த மேன்சன் அவரை கொலை செய்ய நினைத்தான். ஆனால் இடையில் அடிக்கடி ஜெயிலுக்கு செல்ல நேர்ந்ததால் மெல்ச்செரின் வீட்டை கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அப்படி கண்டுபிடித்து முடிவு செய்து அந்த வீட்டில் இருப்பவர்களை கொலை செய்யத்தான் அந்த நான்கு பேரை அனுப்பினான். ஆனால் மெல்ச்செர் அந்த வீட்டை போலன்ஸ்கிக்கு வாடகைக்கு விட்டிருந்தார். வீட்டிலிருப்பவர்களை கொலை செய்ய வந்தவர்கள் ஷாரோன் டேட்டையும் நண்பர்களையும் கொன்று விட்டனர்.

Conclusion:
வெறும் சுவாரசியத்திற்காக இந்த கொலைகளை பற்றி எழுதவில்லை. ஒரு குடும்பத்தையோ குழுவையோ மொத்தமாக கொல்லும் மனிதனின் மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும்? மோனிகா சம்பவத்தில் அவர்கள் இருவரும் டீன் ஏஜ் வயதினர். ஜெஃப்ரியோ ஒரு மிலிட்டிரி ஆஃபிசர் மற்றும் டாக்டர். இருந்தும் மனிதனின் மனம் எப்போது பிறழ ஆரம்பிக்கின்றது இவ்வளவு கொடூரமாக. உளவியாலளர்கள் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து எத்தனையோ காரணங்களை சொல்லலாம். ஆனால் இச்சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன….. இனிவரும் பதிவுகளில் forensic psychology, பழங்கால மர்மங்கள் போன்றவையும் கலந்து எழுதலாம் என உள்ளேன். தங்கள் கருத்துக்களை கூறவும்.

- Pluto
இவர் மேலும் கூறுகிறார் ...

8 கலந்துரையாடல்கள்அறிவுடைநம்பி, சிறுவன். வயது ஒரு பதிநான்கு இருக்கலாம். மிகவும் கட்டுக்கோப்பான ஒரு சமூகத்தில் வளர்க்கப்பட்ட ஒரு ஜீவன் அது. ஆனால், தொடக்கத்தில் இருந்தே, அறிவுடைநம்பிக்கும் அவனை வளர்த்த சமூகத்துக்கும் ஒத்த கருத்து என்பது இல்லாமலே கழிந்தது. அவனது சமூகம் விரதம் இருக்கச்சொன்னால், அப்போதுதான் அறிவுடைநம்பி, கடோத்கஜன் சாப்பிடுவது போல் உணவு உண்டான். அவனது சமூகம் அவனை விளையாடச் சொன்னால், அப்போதுதான் அறிவுடைநம்பி படுக்கையில் சுருண்டு படுத்துக் கொள்ளத் துவங்கினான். அது ஏன் என்று அவனாலேயே சொல்ல முடியவில்லை. சமூகத்தின் கருத்துகளுக்கு எதிராக அவன் நடந்துகொள்ளத் துவங்கியது, அவனது மிகச்சிறு வயதிலிருந்தே தொடங்கியது என்று அவனை அறிந்த யாராவது சொன்னால், அதையும் முற்றிலும் ஆட்சேபிக்கக்கூடிய ஒரு குணத்தை அவன் பெற்றிருந்தான். உலகின் பார்வைக்கு அவன் சிறுவன். ஆனால், அவனது மனத்தின் அடியாழத்தில், அவனுக்கு இருந்த எண்ணம் என்னவெனில், அவன் சிறுவன் அல்ல என்பதே. ஆனால், அதையும் உணர்ந்து செயல்படக்கூடிய ஒரு இயல்பு அவனுக்கு இல்லாதிருந்தது. எனவே, சிறுவனாயும், அதே சமயம் சிறுவன் இல்லாமலும் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை அவன் அறியாமலே வாழலானான்.

அறிவுடைநம்பி சேர்ந்தது, தாயின் வயிற்றில் இருக்கும்போதே ஹிந்துமதத்தின் மேன்மைகளை மனதில் புகுத்தும் ஒரு கலாசாலையில். ஏன்? ஒருக்கால், அவனது தந்தை, சொந்தமாக வியாபாரம் செய்துவந்தும்,  ஒரு நேர்மையான மனிதனாக இருக்க முடிவு செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். அந்தப் பள்ளியில் மட்டுமே, மற்றப் பள்ளிகளைவிட கட்டணம் மிகக் குறைவு.  ஏனெனில், ஹிந்து மதத்தின் எல்லா விதிகளையும் சிறார்கள் மீது புகுத்தும் ஒரு கொள்கையை அந்தப் பள்ளிக்கூடம் கடைபிடித்து வந்ததேயாகும். அறிவுடைநம்பியின் தகப்பனார், அறிவுடைநம்பி பிறக்கும்போதே, நாற்பது வயதைக் கடந்த ஒரு மனிதராவார். அவர், அவரது சொந்தத்திலேயே ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார்.. கிட்டத்தட்ட பதிநான்கு வருடங்கள், அவரது காதல் உயிர்வாழ்ந்து வந்தது. அவரும் சரி, அந்தப் பெண்ணும் சரி, ஒருவரையொருவர் மிக விரும்பி வந்தனர். அறிவுடைநம்பியின் தகப்பனார். அக்காலத்தின் காங்கிரஸில் ஒரு முக்கியப் பொறுப்பை வகித்து வந்தார். அதாவது, காங்கிரஸ் கட்சி பெற்றிருந்த ஏராளமான தொண்டர்களில் அவரும் ஒருவர்.  இன்னும் விளக்கமாகச் சொல்லப்போனால், அவர் இருந்த அந்த இடத்தில், மிகத் துடிப்பான ஒரு இளைஞராக அவர் விளங்கிவந்தார். அந்த இடத்தின் கௌன்சிலர் தேர்தலுக்குக்கூட, சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட ஒரு மனிதர் அவர்.  காரணம்? அப்போது முதல்வராக இருந்த எம்ஜியாருக்கு இவரைப் பற்றித் தெரிந்திருந்ததே. எம்ஜியாரின் எண்ணப்படியே, சைக்கிள் சின்னத்தில் அந்தத் தொகுதியில் கௌன்சிலராகப் போட்டியிட்டார் அறிவுடைநம்பியின் தகப்பனார். ஆனால், தேர்தலின் நெளிவுசுளிவுகள் எதுவுமே தெரியாமல், தனது நேர்மையை மட்டும் வைத்துப் போட்டியிட்டதால், தோல்வியைத் தழுவினார்.

அதற்கு முன்பே, ஏரியாவின் அதிரடி நாயகராக அவர் விளங்கி வந்தார். பிக்பாக்கெட் ஒருவனை, பேருந்தில் இருந்து தரதரவென்று இழுத்தபடியே, அரை கிலோமீட்டர் தொலைவில் இருந்த காவல்நிலையம் சென்றூ சேர்த்தது அவரது வீரமிக்க செயல்களில் ஒன்றாகும். ஆனால், திருமணம் நடந்தவுடன், தனது நடவடிக்கைகளை அடக்கி வாசிக்க ஆரம்பிதார் அவர். காரணம்? தனது நடவடிக்கைகளினால், தான் பெற்ற ஒரே மகனுக்கோ அல்லது தனது காதல் மனைவிக்கோ ஏதேனும் ஆபத்து நிகழ்ந்துவிடுமோ என்ற கவலையே.

இது இப்படி இருக்கையில், அறிவுடைநம்பி, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளரத் துவங்கினான். அவனது தந்தை, கௌன்சிலர் தோல்விக்குப் பின்னர். சொந்தமாக வியாபாரம் செய்யத் துவங்கினார்.  என்ன வியாபாரம்? அவர் இருந்த ஊரில், துணி சம்மந்தப்பட்ட ஆலைகள் மிக அதிகம். எனவே, அவைகளுக்குத் தேவைப்பட்ட உபரி பாகங்களை விநியோகம் செய்யும் வியாபாரமே அது. இவரது இயல்புப்படி, நேர்மையாக வியாபாரம் செய்யவேண்டும் என்ற அவாவினால், அந்த வியாபாரமும் இழுத்து மூடப்பட்டது.

முடிவு? அறிவுடைநம்பிக்குப் பால் புகட்டக்கூட அவரிடம் பணம் இல்லை. மனது ஒடிந்து போன அவர், அந்த சமயத்தில் பாண்டிச்சேரி அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைப் பற்றிப் புத்தகம் எழுதிய அமரசிம்மன் என்ற எழுத்தாளரிடம், அவரது இந்த ஏழ்மை நிலையைப் பற்றிக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதம், அன்னையைப் பற்றிய அமரசிம்மனின் புத்தகம் ஒன்றில் இன்னமும் இடம் பெற்றிருக்கிறது. குழந்தைக்குப் பால் கூட வாங்க முடியாத நிலையில் அவர் இருப்பதாக எழுதிய கடிதம், வரிக்கு வரி அந்தப் புத்தகத்தில் உள்ளது. அதை அவரே எதிர்பார்த்தவரலல்லர். அவருக்குத் தேவையாக இருந்தது, அன்னையின் ஆசிகள் மட்டுமே.

அந்தக் கடிதத்திற்குப் பின்னர், அவரது வாழ்வில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. சொந்தத் தொழிலில் அல்ல. அவரது குலத்தொழிலான, மக்களுக்குப் பூஜைகள் செய்யும் தொழிலில். திடீரென, அவரது ஊரின் ஒரு முக்கியப் பிரமுகரின் வீட்டில் பூஜை செய்துவந்த இவரது உறவுக்காரர், ஆள் பற்றவில்லை என்று இவருக்கு அழைப்பு விடுத்த நிகழ்ச்சியில் இருந்து, இந்த முன்னேற்றம் துவங்குகிறது. அறிவுடைநம்பியின் தகப்பனாரும், இதை ஏற்றுக்கொண்டார்.

அன்றிலிருந்து, இந்தக் கதை எழுதப்படும் இன்றைய தேதி வரை, அந்த முக்கியப் புள்ளியின் வீட்டில் அவர் அத்தனை பூஜைகளையும் கவனித்து வருகிறார். அவரை அழைத்த அந்த உறவுக்காரர், கல்தா கொடுக்கப்பட்டதற்கும் இவருக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை.  இதன்மூலம், அவர் பெரிதும் நம்பும் ஆன்மீகத் துறையில் அவருக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவரது அவா என்னவெனில், இனியொரு முறை தாயின் வயிற்றில் பிறக்கக்கூடிய விதியை இறைவன் அருளாதிருக்க வேண்டும் என்பதே.

அறிவுடைநம்பி, இந்த ஆன்மீகம் கீன்மீகம் எல்லாம் தெரியக்கூடிய நிலையில் இருந்து மிகவும் பின்தங்கியிருந்தான். அவன் இருந்த வீடு, அவனது தாயின் அம்மாவின் வீடு.  அதாவது, அவனது பாட்டி வீடு. காரணம்? அறிவுடைநம்பியின் அத்தை – அதாவது அவனது தந்தையின் தங்கை – திடீர் விதவையாகி, வீடு வந்து சேர்ந்ததே. விதவைத் தங்கையின் முன், குடும்பமாகத் தான் வாழ்வது, அவளது மனதில் அசூயையை விளைவிக்கும் என்ற காரணத்தால், அறிவுடைநம்பியின் தந்தை, அவனை அவனது  தாயின் வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டார். இனி அவன் இங்கே தான் வளர வேண்டும் என்ற முடிவோடு.

இப்படித் தனது பாட்டியின் வீட்டில் வளர்ந்த அறிவுடைநம்பி, எல்லாவித சுதந்திரமும் பெற்றவனாக இருந்தான். அவனது பாட்டி, இவனுக்குப் பிடித்த உணவையே சமைப்பது வழக்கம். இதுவரை கிடைத்திராத சுதந்திரத்தைப் பெற்ற அறிவுடைநம்பி,  அந்த்ச் சிறுவயதுக்கே உரித்தாகிய கர்வத்தை உடையவனாகத் திகழ்ந்தான்.  இதன்மூலம், பாட்டி வைக்கும் காப்பி, இவனுக்குப் பிடிக்கவில்லை எனில், அழுது ஆர்ப்பாட்டம் செய்து, அந்தக் காப்பியையே கொட்ட வைக்கும் பலம் உடையவனாகத் திகழ்ந்தான்.

அவனது தகப்பனார், தனக்குப் பிடித்த ஆன்மீகத் துறையில் பல இறை அனுபவங்கள் பெற்றவராக விளங்கிவந்தார். அவர் பெற்ற ஆற்றல் என்னவெனில், அவருக்கு முன் நிற்கும் நபரின் மனதில் இருக்கும் எண்ணத்தை அப்படியே சொல்லும் இயல்பு அவருக்கு இருந்தது. அது, அவர் வேண்டிப் பெற்ற இயல்பல்ல. அவர் செய்துவந்த பூஜைகளின் விளைவாக, அது அவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருந்தது.

அது ஏன் அவருக்கு இப்படிப்பட்ட வித்தைகள் வந்தன? இந்தக் கேள்விக்குப் பதிலானது, அவரது தாத்தா – அத்வைதாநந்த  ஸ்வாமிகள் என்று புகழ் பெற்றிருந்த ஒரு சாமியார் – பல அற்புதங்களை நிகழ்த்திய ஒரு அதிசய மனிதரிடமிருந்து ஆரம்பிக்கிறது. அறிவுடைநம்பியின் தகப்பனார் , அச்சு அசலாக அந்த சாமியாரைப் போலவே தோற்றம் பெற்றிருந்தது ஒரு அதிசயம்.  அந்த அத்வைதாநந்தர், அறிவுடைநம்பியின் சொந்த ஊரில் அவர் வழிபட்ட அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பியிருந்தார். அவரது இளமைக்காலத்தில், பிரிட்டிஷ் ராஜ்யத்தில் ஒரு ரேஞ்சராக ஆனைமலைக் காடுகளில் திரிந்துகொண்டிருந்த அத்வைதாநந்தர், காட்டில் வழி தவறி. ஆஜானுபாகுவான ஒரு மனிதனைச் சந்தித்ததிலிருந்து அவரது ஆன்மீக வாழ்க்கை துவங்குகிறது. அந்த மனிதன், தனது பெயர் கருப்பசாமி என்று சொல்லி, அவருக்கு வழியைக் காண்பித்து உதவுகிறான். அதே சமயம், ரேஞ்சர் வேலையை விட்டுவிடச் சொல்லி, காசிக்குச் செல்லும்படி இவரைப் பணித்து, அங்கே த்ரைலிங்க ஸ்வாமிகள் என்று ஒருவரைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் சொல்லி, அந்த இடத்திலிருந்தே மறைந்துவிடுகிறான்.

உடனே வேலையை விட்ட அத்வைதாநந்தர், காசிக்குச் செல்ல, அங்கே இவருக்காகவே காத்துக்கொண்டிருந்த த்ரைலிங்க ஸ்வாமிகள் என்ற நபர் (குழந்தையானந்தர் என்றும் இவர் அழைக்கப்பட்டார்). மந்திர உபதேசம் செய்து, தனது சொந்த ஊருக்கே இவரைச் செல்லச்சொல்லி அருள, சொந்த ஊருக்கு வந்துசேர்ந்த அத்வைதாநந்தர், தனது மனதிற்குகந்த அம்மனுக்கு ஒரு கோயில் எழுப்பினார். அன்றில் இருந்து, அவரது வாழ்க்கை அடியோடு மாறியது. கோயிலுக்கு வந்த பேய்பிடித்த நபர்களுக்கு இவரது பிரத்யேகமான முறையில் விபூதியைப் போட, அதன்மூலம் பேய்கள் அவர்களை விட்டோடின.  அதே நேரத்தில், தனது பக்தர்களின் வீட்டில், அவர்களுக்கு முன் இவர் தோன்ற, இவரது புகழ், அந்த ஊரெங்கும் பர ஆரம்பித்தது. இது நடந்தது, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று அறிவுடைநம்பி அடிக்கடி கூறுவான்.

இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில் வளர்ந்த அறிவுடைநம்பி,  அவனது ஆன்மீகப் பின்னணியின் பெருமை தெரியாமலே வளர்ந்தான். அவன் படித்த புத்தகங்கள், பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும், சாண்டில்யனின் பல கதைகளுமே. பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த அறிவுடைநம்பிக்கு, அவனது ஆசிரியையாக வந்த மணிமேகலை என்ற பெண்ணின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. இது, அவனது ஐந்தரையாவது வயதில் ஏற்பட்டது என்பதை நாம் நினைவுகூர வேண்டும்.  அந்த ஆசிரியை, அந்த எண்பதுகளின் முன்பகுதியில், லோ கட் என்று இன்று வழங்கப்பெறும் ரவிக்கை போட்டு வந்தது, அவனது மனதில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.  அந்த ஆசிரியையின் முதுகில் பெரும்பகுதியை அந்த ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கண்டுவந்தனர். ஆனால், வேறு யாருக்குமே ஏற்படாத ஒரு மோகம், அறிவுடைநம்பிக்கு ஏற்பட்டது.  இதன்விளைவாக, வீட்டுக்கு வந்து, யாரும் பார்க்காத தருணங்களில், வீட்டின் தூண்களில் ஒன்றைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, இடுப்பை மட்டும் ஆட்டத்  துவங்கினான். இது, அவனது முக்கிய உறுப்பில் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. இவன் மட்டும் இதனைச் செய்யாது, இவனது உறவினர்களான சிறு பெண்களுக்கும் பையன்களுக்கும் இதனைச் சொல்லிக் கொடுக்கத் துவங்கினான்.  அவர்களுக்குமே இது பிடிக்க ஆரம்பித்தது.

வளர வளர, மணிமேகலை போய், கீதா என்ற ஆசிரியர் இவனது வகுப்புக்கு வந்தார். அழகிய உடலோடு, ஆசிரியருக்கே உரிய கண்ணாடி அணிந்துகொண்டு வளைய வந்த அந்த ஆசிரியை, அறிவுடைநம்பியின் மனதோடு ஒட்ட ஆரம்பித்தார். அதே நேரத்தில், அறிவுடைநம்பியின் பெரியம்மா, அவனோடு வீட்டில் வாழ்ந்துவந்த பெரியப்பாவின் கூடவே வாழ வந்தார். இந்தப் பெரியம்மா, இதுகாறும் வட இந்தியாவில்  அவருடைய தாயுடன் வாழ்ந்து வந்தார். ஏனெனில், பெரியப்பா பல மாநிலங்களில் வேலை செய்து வந்ததேயாகும். ஆனால், இப்போது அவர் அறிவுடைநம்பியின் சொந்த ஊரிலேயே வேலை மாற்றலானவுடன், தனது மனைவியைத் தன்னுடனேயே அழைத்துக் கொண்டார்.

ஒருநாள், வீட்டினுள்ளேயே கிரிக்கெட் விளையாடிவந்த அறிவுடைநம்பி, பந்து அந்தப் பெரியப்பாவின் அறையினுள்ளே சென்றுவிட்டதால், அதனைப் பிடிக்க உள்ளே ஓடுகையில், பெரியப்பாவின் மடியில் பெரியம்மா படுத்திருப்பதைக் கண்டான். பெரியப்பா, இவனை முத்தமிடுவதைப் போலவே, பெரியம்மாவையும் முத்தமிட்டுக் கொண்டிருந்தார். ஆனால், உதட்டில். இதனைக் கண்ட அறிவுடைநம்பிக்கு, இயல்பாகவே அசூயை ஏற்பட்டது. காரணம், அதுவரை இவனை முத்தமிட்டுக்கொண்டிருந்த பெரியப்பா, இப்போது பெரியம்மாவை, உதட்டில் முத்தமிட்டதேயாகும்.  உடனேயே வெளியே ஓடிவந்த அவன், அன்றிலிருந்து பெரியப்பா மற்றும் பெரியம்மாவிடம் பேசாது இருக்கத் துவங்கினான்.

அறிவுடைநம்பி வளரத் துவங்கினான். இப்போது, அவனது ஆறாம் வகுப்பு. ஒன்றுமே புரியாத ஜியாக்ரஃபி வகுப்பு.  தூக்கத்தில் ஆழ்ந்த அறிவுடைநம்பி,  வகுப்பினுள்ளே,  தனது முக்கிய உறுப்பில் நேரும் மாற்றத்தைப் பரிசோதித்துப் பார்க்கும்போது, ஆசிரியை அதனைக் கண்டுவிட்டார். 

“என்ன அறிவுடைநம்பி… ஏன் டான்ஸ் ஆடுறே? ஏன் பென்ச்சைக் கால்களுக்கு நடுவில இறுக்கிப் புடிச்சிருக்குற” என்று கேட்டுவிட்டார். உடனே பயத்தில் பென்ச்சை இயல்பு நிலைக்கு விடுவித்துவிட்டான் அறிவுடைநம்பி.  ஏனெனில், இந்த ஆசிரியை, கொடூர தண்டனைகள் அளிப்பதில் பெயர்பெற்றவர். அதாவது, யாராவது பேசினால், இருவரின் காதுகளையும் இருவரும் பிடித்துக்கொண்டு, தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில் உறுதியானவர். மட்டுமல்லாது, பெண் மாணவிகளின் மத்தியியில், பையன்கள், தங்களது டவுசர்களை அவிழ்த்துவிட்டு, ஜட்டியுடன் முட்டி போடவேண்டும் என்ற தண்டனையையும் அதிகமாக அளித்து வந்தார். அன்று அறிவுடைநம்பி ஜட்டியோடு தரிசனம் அளிக்காமல் தப்பியது, தம்பிரான் புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.

இப்படியே வளர்ந்து வந்த அறிவுடைநம்பியின் எட்டாம் வகுப்பில், பெரியம்மா, தனது பெண்ணையும் வட இந்தியாவில் இருந்து இவனது ஊருக்கு வரவழைத்து விட்டார். அந்தப் பெண்ணின் பெயர், அக்காலத்திலேயே மிகப் புதிதாக இருந்தது.

சமிக்‌ஷா.

சமிக்‌ஷா, வீட்டுக்கு வந்ததும், அறிவுடைநம்பியுடன் நட்பாக ஆகிவிட்டாள். இவனை விட ஒரு வயது சிறிய பெண். ஏழாவது படித்து வந்தாள். சமிக்‌ஷாவுடன் அறிவுடைநம்பி, அவ்வப்போது வீட்டினுள்ளேயே வலை கட்டி, டென்னிஸ் ஆடி வந்தான்.  இவனது மனதிற்குகந்த தோழியாக சமிக்‌ஷா விளங்கிவந்தாள். அறிவுடைநம்பி, தனது தந்தை சேர்த்துவந்த பல புத்தகங்களைப் படித்துவந்ததால், பல துறைகளிலும் பேச்சாற்றல் உடையவனாகத் திகழ்ந்துவந்தான். இவனது பேச்சாற்றலுக்கு வடிகாலாக சமிக்‌ஷா விளங்கிவந்தாள்.  அவளுமே இவன் பேசுவதை ஆர்வமுடன் கேட்பது வழக்கம்.

இப்படி இருக்கையில், ஒருநாள், சமிக்‌ஷா வயிற்றுவலியில் துடித்தது அறிவுடைநம்பியைப் பாதித்தது. அவளுக்காகக் கடவுள்களை வேண்டிக்கொண்டான். சிறிதுநேரத்திலேயே அங்கு வந்த பெரியம்மா, சமிக்‌ஷா பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று அறிவித்தார். அறிவுடைநம்பியின் உயரத்துக்கு இணையாக இருந்த சமிக்‌ஷா, அவனைவிட உயரமாக வளர்ந்துவிட்டாளோ என்று விசனப்பட்ட அறிவுடைநம்பி,  அவளைச் சென்று பார்த்தான். இவனைப் பார்த்தவுடன், தனது முகத்தைக் கவிழ்த்துக்கொண்ட சமிக்‌ஷா, இவனைப் பார்த்து வித்தியாசமான ஒரு புன்னகையைப் புரிந்தாள். அவளிடம் அவளது தற்போதைய உயரத்தைக் கேட்டான் அறிவுடைநம்பி. ஒன்றும் புரியாத சமிக்‌ஷா, இவனை விட்டுத் திரும்பி அமர்ந்து கொண்டாள். அவளது அடிவயிறு வலிப்பதாகவும் இவனிடம் கூறினாள். இதைக் கேட்டுத் துன்பம் அடைந்த அறிவுடைநம்பி, வீட்டினுள் ஓடி அமிர்தாஞ்சனம் எடுத்துவந்து அவளிடம் கொடுத்தான்.

அதில் இருந்து இவனுடன் விளையாட சமிக்‌ஷாவை அனுமதிக்காமல் அவனது பெரியம்மா தடுத்து வந்தார். அதேசமயம், சமிக்‌ஷாவின் உடலில் நிகழ்ந்த மாற்றங்களையும் அறிவுடைநம்பி அவதானித்து வந்தான். அதுவரை இவனைப்போலவே இருந்த சமிக்‌ஷா, திடீரெனத் தங்களது ஸாலிடேர்  வண்ணத் தொலைக்காட்சியில் இவன் பார்த்துவந்த திரைப்பட ஹீரோயின்கள் போல ஆகிவந்தது இவனுக்குப் பிடித்திருந்தது.  ஆனால், சமிக்‌ஷாவோ, இவனுடன் விளையாடவும் பேசவும் முன்போலவே ஆர்வம் காட்டி வந்தாள். பின் மறுபடி பள்ளிக்கும் செல்லத் துவங்கினாள்.  விளையாடுகையில், இவனது கை அவளின் மேல் படுவதில் அவள் அடைந்த வெட்கம், அறிவுடைநம்பியைக் கவர்ந்தது.  அனைவரும் சேர்ந்து வாழ்ந்த காரணத்தால், மிகச்சில சமயங்கள் சமிக்‌ஷா உடைமாற்றிய நேரங்களில், அறிவுடை நம்பி தெரியாத்தனமாக அவளைப்  பார்த்து விட்டதில், அவன் மனதில் ஒரு புதிய அலை எழும்பியது. 

இப்படியாக ஹையர் ஸெகண்ட்ரி என்று அழைக்கப்படும் பதினோராவது மற்றும் பனிரண்டாவது வகுப்பில் நுழைந்தான் அறிவுடைநம்பி.   தனது பெரியம்மாவையும், அவர்களது பெண்ணையும் கவனிப்பதை அவனால் தடுக்க இயலவில்லை. அவர்களும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை அவன் கவனித்து வந்தான்.  பள்ளியில் அறிவுடைநம்பி, தான் படித்துவந்த புத்தகங்களைப் பற்றிச் சக மாணவர்களிடம் எடுத்துச் சொல்ல, அவர்கள்,  அவன் ஒரு தத்திப்பயல் என்ற எண்ணத்தை உறுதியாக அடைந்தனர். பின்னே? அமரகோசம், ஸ்வேதாச்வர உபநிஷத்,  முண்டகோபநிஷத், ருக்வேதம் ஆகியவற்றில் இருந்து மந்திரங்களின் மொழிபெயர்ப்பை இவன் பேசினால்,  எந்த மாணவன் ஏற்றுக்கொள்வான்? அதுவும் பள்ளிநாட்களில்?

இதற்கிடையில், அறிவுடைநம்பியின் பெரியப்பாவுக்கு ராஜஸ்தானில் வேலை மாற்றலாகிவிட, குடும்பத்தோடு அங்கே சென்றுவிட்டார். அத்தோடு சமிக்‌ஷாவின் நட்பும்   முடிவுக்கு வந்தது.

ஒரு விசித்திர ஜீவனைப்போல் பள்ளியை முடித்த அறிவுடைநம்பி,  கல்லூரி சேர்ந்தான். கல்லூரி அவனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது. ரெமோ போல ஆகிய அறிவுடைநம்பி, கல்லூரியிலேயே ஒரு பெண்ணைக் காதலிக்கவும் துவங்கினான். அவனை பதிலுக்குக் காதலித்த அந்தப் பெண் – பெயர் திவ்யா – தனது வீட்டிலும் இவனுக்காகச் சண்டையிட, கல்லூரி முடிந்து ஒரு நல்ல சாஃப்ட்வேர் வேலையில் சேர்ந்த அறிவுடைநம்பி, ஒரு சுபயோக சுபதினத்தில் திவ்யாவைக் கைப்பிடித்தான்.

அதன்பின் அலுவலகத்தில் லோன் போட்டு ஒரு ஃப்ளாட்டையும், ஒரு மாருதி ஆல்டோவையும் வாங்கிய அறிவுடைநம்பி,  இப்பொழுதெல்லாம் ஒரு ஆன்மீகவாதியாகிவிடலாமா என்று யோசித்து வருகிறான்.  பத்திரிக்கைகளில் அடிக்கடிப் படித்துவந்த போலி சாமியார்களின் ராஜவாழ்க்கை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். சொல்ல மறந்துவிட்டேன். சமிக்‌ஷா திருமணம் செய்துகொண்டு இப்போது அமெரிக்காவில் வாழ்கிறாள். அவ்வப்போது அறிவுடைநம்பிக்கு மின்னஞ்சலும் செய்வாள். ஃபேஸ்புக்கில் உள்ள அவளது புகைப்படங்களைத் தனது கணினியில் சேமித்து வைத்திருக்கும் அறிவுடைநம்பி, அவ்வப்போது மனைவி இல்லாத தருணங்களில் பகார்டி அடித்துவிட்டு அவளது நினைவில் மூழ்குவதுண்டு.  தனக்குப் பிறக்கப்போகும் குழந்தைக்கு சமிக்‌ஷா என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் மனைவியிடம் வலியுறுத்தி வருகிறான். நடிகை சமிக்‌ஷாவை இவனுக்கு எப்போதிலிருந்து பிடிக்க ஆரம்பித்தது என்று இவனது மனைவி யோசித்து வருகிறாள். 
இவர் மேலும் கூறுகிறார் ...

8 கலந்துரையாடல்கள்முதல் பாவம்

2010 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், எண்டர்டெய்மெண்ட் ஏரியாவில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்:

 • iPhone, iPad மாதிரியான எலக்ட்ரானிக் சாதனங்களை, இனி அதை வாங்கியவர்கள் சட்டப்பூர்வமாக அன்லாக் செய்து கொள்ளலாம் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. இரண்டாவது நாளே…. www.jailbreakme.com வெப்சைட் புத்துயிர் பெற்று, ஆப்பிளுக்கு ஆப்பு வைக்க, லட்சக்கணக்கான iPhone-கள் ஒரே நாளில், AT&T தொலை தொடர்பு நிறுவனத்திடமிருந்து விடுதலை பெற்றன. ஏற்கனவே கன்னாபின்னா கோபக்காரரான ஸ்டீவ் ஜாப்ஸிற்கு அன்று வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டிருக்கலாம்.

 • அடுத்த இடி சோனி மீது விழுந்தது. XBOX 360, Wii போன்ற வீடியோ கேம் கன்சோல்களை மாடிஃபை செய்து, அதில் பைரேட்டட் விளையாட்டுகளை விளையாட முடிந்தவர்களுக்கு, PS3 –ஐ மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக, வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த PS3-ஐயும் மாடிஃபை செய்யும் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் + வியாபார நோக்க ஹார்ட்வேர் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியாகின.

 • ராதிகா மட்டும், 20th Century Fox நிறுவனத்தின் ஓனராக இருந்திருந்தால்… மேடை போட்டு மூக்கை சிந்த மட்டுமே நேரமிருந்திருக்கும். 20th Century Fox நிறுவனத்திற்கும், பைரசிக்கும் அப்படியொரு ராசி. சமீபத்திய கணக்குகளை மட்டுமே கவனித்தாலும், 2005-ல் Star Wars Episode III : Revenge of the Sith, 2007-ல் Stargate: The Ark of Truth, 2009-ல் X-Men: Wolverine, என வரிசை கட்டி, படங்கள் படங்கள் இணையத்தில் வெளியான பிறகுதான், தியேட்டருக்கு தலை வைக்கும்.இந்த இருபதாம் நூற்றாண்டு நரியின் லேட்டஸ்ட் மூக்கு சிந்தல்: Vampires Suck (படமும்தான்).

 • "ஈராக்கில் நடந்த என் வாழ்க்கைச் சம்பவத்தைத்தான் படமாக எடுத்தார்கள். ஆனால் அதற்க்காக என்னிடம் எந்த அனுமதியையும் பெறவுமில்லை, மற்றும் அதற்கான சன்மானத்தையும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு அளிக்கவில்லை". இதை சொன்னது சார்ஜண்ட் ஜெஃப்ரி சார்வர். படம்?  ஆஸ்கர் சென்ஷேசன் : The Hurt Locker.

 • "யாருடைய கதையை வேண்டுமானாலும் நாங்கள் படமெடுப்போம். அது எங்களின் முதல் அமெண்ட்மெண்ட் உரிமை" – இதை சொன்னது படத்தயாரிப்பாளர்கள். அதில் கேதரின் பிகலோவும் ஒருவர். ஆனால், இவர்களே.. The Hurt Locker படத்தை இணையத்தில் தரவிறக்கிய ஒரு லட்சம் பேரின் IP அட்ரஸை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமா, ISP-க்களுக்கு நெருக்கடி கொடுத்து, வீட்டு முகவரியை பெற்று, அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 • ஜூன் 30, 2010. அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) என்ற அரசாங்க அமைப்பு, அதிரடியாக களத்தில் குதித்தது. "Operation in Our Sites" என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்வில், பைரேடட் திரைப்படங்களை வெளியிடும், ஒன்பது இணைய தளங்கள் அரசாங்கத்தால் முடக்கப் பட்டன. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

இந்த ICE, அமெரிக்காவின் Homeland Security -யின் கீழ் வரும் அமைப்பு. இதை செய்ய வைத்தது……..? அமெரிக்க திரைப்படங்களுக்கு ரேட்டிங் தரும் MPAA. MPAA-வை சொல்ல வைத்தது டிஸ்னி! சிவில் சட்டத்தின் கீழ் வரும் பைரசிக்கும், தேசிய பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய அமைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும், காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை பற்றியோ, மெக்ஸிகோவிலிருந்தும், தென்னமரிக்க நாடுகளில் இருந்தும் முறைகேடாக குடியேறும் மக்களைப் பற்றியோ, சட்ட விரோதிகளைப் பற்றியோ கவலைப்படாத Homeland Security, ICE, FBI போன்ற அரசாங்க அமைப்புகளுக்கு, பைரசி மேல் அப்படியென்ன அக்கறை?

சரி விடுங்க, இது போய்கிட்டே இருக்கும். அரசாங்கங்களுக்கு குண்டு வைப்பவனைப் பற்றி என்னக் கவலை?

'உலகப் பொதுமறை படப்' பிரியர்களுக்கு Private என்னும் ஐரோப்பிய போர்ன் கம்பெனி பற்றித் தெரிந்திருக்கும். அந்த கம்பெனியின் CEO பெர்த் மில்டன், கொடுத்த ஒரு பேட்டியில் சொன்னது:
"பைரசியுடனான யுத்தத்தில் வெற்றி சாத்தியமேயில்லை. உண்மையைச் சொன்னால்… நாங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறோம். இனி பைரசியை எதிர்ப்பதை விட்டுவிட்டு அதிலிருந்து எப்படி விளம்பரம் பெற முடியும் என்றுதான் யோசிக்க வேண்டும். எங்கள் வீடியோக்களை அதிகம் பைரேட் செய்கிறார்கள் என்றால்…. அதை நிறைய பேர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். அது எங்களுக்குத்தான் விளம்பரம்". 
மேலே பைரசியுடன் போராடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளின் சொத்து மதிப்பு பல பில்லியனில். ஆனாலும் விடுவதாயில்லை. தங்கள் பண அதிகாரத்தை பாதாளத்துக்கும் கீழ், பத்தடி பாய்ச்சி, இந்த பைரசியை தடுக்கப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனங்கள் இத்தனை பணத்தை சம்பாதிக்க வழிவகுத்த ஒரு நபர், இதே பைரசி பிரச்சனையில், தன் மொத்த உழைப்பையும், சொத்துக்களையும் இழந்து, வறுமையில் இறந்தார். 

பைரசியின் முதல் பலி.

*****

இவர்
Marie-Georges-Jean Méliès. சுருக்கமாக Georges Méliès. எப்படிச் சொன்னாலும் வாயில் நுழையப் போவதில்லை என்பதால், நாம் இவரை 'இவர்' 'இவர்' என்று மட்டும் கூப்பிடலாம்.

இவர் பிறந்தது பாரீஸில். இவர் தொழில் மேஜிக் வித்தைகள்காட்டுவது. இவரின் உபத் தொழில், சினிமா இயக்குனர் + தயாரிப்பாளர். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை?? 531. எஸ் மிஸ்டர் இராம நாராயணன்; இவர் உங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.

ஸ்டேஜில் இவர் காட்டிய மேஜிக் வித்தைகளும், அன்றைய பத்து நிமிடப் படங்களும் இந்த 531 கணக்கில் வருமென்றாலும், இன்று ஒரு மணி நேரம் ஓடும் படங்களுக்கான தொழில்நுட்பக் கஷ்டங்கள், அந்த பத்து நிமிடத்திற்காக அவர்கள் அனுபவத்திருக்கலாம். ஆனாலும் எண்ணிக்கைகளுக்காக எண்ணப் பட்டவரில்லை இவர்.

ஸ்பெஷல் எஃபெக்ட் (FX) என்ற வார்த்தை கூட பழக்கமில்லாத பொழுதே, தனக்கு தெரிந்த மேஜிக் வித்தைகளை, மூவி கேமராவில் எப்படி பயன்படுத்த முடியும் என்ற சாத்தியத்தை சோதித்து, அதில் பெற்றவர் இவர். அந்த நாளிலேயே திரையில் ‘கலர்’ காட்டியவர்.

Double Exposure, Time-Lapse, Stop Trick போன்ற பல டெக்னாலஜிகளை 1896-லேயே தனது படங்களில், கண்டுபிடித்து, உபயோகித்த முன்னோடி. மக்கள் கொட்டாவி விட திறந்த வாயை, தனது பெரும்பாலான FX படங்களின் மூலம் ஃப்ரீஸ் செய்ய வைத்தவர். எங்க வீட்டுப் பிள்ளையில், எம்ஜியார்(கள்) ஸ்டைலாக மூக்கு சொறியும் Split Screen முறைகளை கண்டுபிடித்தவர்.

முதல் FX
இன்று பார்ப்பதற்கு மிகக் க்ரூடாகத் தெரியும், இவர் தயாரித்து இயக்கிய உலகின் முதல் சய்ன்ஸ் ஃபிக்ஷன் படமான A Trip to the Moon (1902) படத்தை இன்றும் பார்த்து வாய் பிளப்பவர்கள் ஏராளம். 1896-ல் இவர் ஆக்ஸிடண்டலாக கண்டுபிடித்து, A Trip to the Moon படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் Stop Trick ஷாட்களெல்லாம் இன்றும் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இத்தனை தொழில்நுட்பங்களை சினிமாவில் அறிமுகப் படுத்தியவருக்கு, ஒரு தொழில்நுட்பம் மட்டும் கைகூடவில்லை. அது இவரது படத்தை, காப்பி எடுப்பதை தடுக்கும் ப்ரொட்டக்‌ஷன்.

நூற்றுகணக்கில் இவர் படங்களின் சுருள்கள் காப்பியெடுக்கப் பட, உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். படங்களை மட்டுமல்லாது, இவரது தொழில்நுட்பங்களையும் இவரின் போட்டியாளர்கள் கண்டுபிடித்து உபயோகிக்க ஆரம்பித்தனர். வரவு மட்டும், இவர் கணக்கில் வரவேயில்லை.

A Trip to the Moon படம் மட்டும், பைரேட் செய்யப்படாமல், அதை பார்த்த மக்களின் எண்ணிக்கையையும், அவர்கள் தியேட்டருக்கு கொடுத்த காசையும், இன்று வரையிலும் சினிமாவில் உபயோகிப்படும் அவரின் தொழில்நுட்ப டெக்னிக்குகளுக்கு காப்பிரைட் பணத்தையும் கணக்கிட்டால், நிச்சயம் இவர் அன்றைய பில் கேட்ஸாகவோ அல்லது Xநிதி மாறன்களாகவோ இருந்திருக்க வாய்ப்புள்ளது.

*****

ஆனால், இன்று பைரசிக்கு எதிராக இத்தனை சட்டங்கள் இருந்துமே ஒன்றும் கழற்ற இயலாத பொழுது, ட்ரேட்மார்க்/காப்பிரைட் சட்டங்கள் எதுவுமே இல்லாத அன்றைக்கு என்ன செய்திருக்க முடியும்?! கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் விழ ஆரம்பித்தவர், கடைசியில் கஞ்சிக்கும் வழியில்லாமல் போனார். 1913-ல் கம்பெனி திவாலானது.

நேரம் பார்த்து சனி சிரிக்க, வந்தது முதலாம் உலகப் போர். இருந்த கொஞ்ச நஞ்ச படச் சுருள்களையும், ப்ரெஞ்ச் – ஜெர்மன் படை வீரர்கள் சொக்கப்பனை கொளுத்திவிட……., பின்நாளில் சின்னதாக ஒரு கூட்டம் போட்டு, மானாட மயிலாட ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியதோடு சரி!! சினிமா உலகத்தின் குல வழக்கப்படி, மொத்தமாக மறக்கப்பட்டார்…, FX-ன் தந்தையான....

இவர்!
இவர் மேலும் கூறுகிறார் ...

13 கலந்துரையாடல்கள்


இந்தியா..!
  மக்கள் தொகையில் மட்டுமல்ல கொட்டிகிடக்கும் செல்வங்களிலும் கோடிகள்    தான் இந்தியாவில் கடவுளைக் கும்பிடுவதற்கும் ,கலப்பையை தூக்குவதற்கும் உயர்ந்த எங்கள் கைகளை வெள்ளையர்களை கும்பிட சொன்னதற்கு வெகுண்ட மக்களின் கோபம் தான் சுதந்திரம்.எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும் இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் "சிப்பாய் கலகம்".(இப்போ எங்க மக்கள் கோபத்தை மறந்து ரொம்ப நாளாச்சு)...


                                                       சிப்பாய் கலகம். மே 10,1857


      மே 10 ,1857 இந்தியாவில் மீரட் என்ற இடத்தில ஏற்பட்ட மக்கள் புரட்சியே முதன்முதலில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக இந்தியர்கள் திரண்ட முதல் இந்திய விடுதலை போர்.இந்தியாவில் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட போர்.அதன் பிறகு இந்தியர்களை ஒருங்கிணைப்பது ஒன்றும் கஷ்டமான விஷயம் அல்ல ..

    சுதந்திரம் தான் எங்களுக்கு உயிர் மூச்சு மற்றதெல்லாம் வெறும் பேச்சு என்பதை மட்டும் பிறக்கும் போதே இவர்களுக்கு தெரிந்திருந்தது என்னவோ தெரியவில்லை விடுதலைக்காக உயிரைக்கூட விடுவதற்கு எப்போதும் தயாராக இருந்த "தலைவர்கள்" பிறந்தார்கள்.(இந்த வார்த்தையை இப்போது சொல்லகூடகேவலமாகஇருக்கிறது).

காந்தி,பகத்சிங்,கோகுலே,நேதாஜி,நேரு,திருப்பூர்குமரன்,வ.உ.சி,பாரதியார்,ராஜாஜி....
நம்நாட்டில் ஜனனமான தலைவர்கள் ஏராளம்.உப்புசத்தியாகிரகம்,ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் எண்ணிலடங்கா போராட்டங்கள்.ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் உருவானது நம் தேசியக்கொடி.

                                                     ஜாலியன் வாலாபாக் படுகொலை

           அந்தக் காலத்தில் நம் மக்களை ஒன்று திரட்டுவதற்கு தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள்.அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது (இப்போது மதிப்பு என்பது நம் தலைவர்களின் சொத்துக்களுக்கு மட்டுமே உண்டு  ). ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பொது நலம் மட்டுமே குறிக்கோள் என போராடி ,எண்ணற்ற தியாகங்களுக்கு பிறகு பெற்ற அந்த பிரசவ நாள் 15.08.1947 
              

    ஆம்.. இந்தியா சுதந்திர நாடானது.இனி நாம் சுவாசிக்கும் காற்று வெள்ளையர்கள் விடும் மூச்சுக்காற்று அல்ல..நம் இந்திய சொந்தங்கள் விடும் மூச்சுக்காற்று.

    என்னடா நாம் பெற்ற சுதந்திரத்தைப் பற்றி இப்படி சுருக்கமாக எழுதிவிட்டேன் என நினைக்க வேண்டாம் .சுதந்திரம் பெற்ற கஷ்டத்தை எங்களை பெற்றவர்கள் உணர்ந்து கொண்டார்கள் .ஆனால் இனி பெறப்போகும் கஷ்டத்தை நாங்களும் ,எங்கள் வருங்காலமும் உணரவே இந்த சுருக்கம். 

இனிதான் ஆரம்பம்.... 
                                                                                               -சரவணா                                  

இவர் மேலும் கூறுகிறார் ...

29 கலந்துரையாடல்கள்போர்ன்மொழி
போர்னோக்ராஃபி என்பதை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் பார்த்தால் கண்டு பிடித்து விடுவேன்.
-ஒரு அமெரிக்க நீதிபதி, 1964

வரலாறு முக்கியம் அமைச்சரே

போர்னோக்ராஃபி : கிரேக்க மொழியில் இதன் அர்த்தம் 'விலை மாந்தர்களைப் பற்றிய இலக்கியம்' (literature of prostitutes). நாளடைவில் வளர்ந்து - சுருங்கி, அதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. இன்று எது போர்ன்'  என்பதற்கு ஏகப்பட்ட விளக்கங்களும் - குழப்பங்களும். நம்மைப் பொறுத்த வரை, போர்ன் என்பது விடியோ.  ஆனால்...

தியான நிலை
'Sexually Explicit'-ஆக கிடைக்கும் எந்த 'material'-லும் போர்னோகிராஃபி என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கம்.

அதாவது.. புகைப்படம், வீடியோ, ஆடியோ, புத்தகங்கள் மாதிரியான ஊடகங்கள் மூலமாக பார்ப்பதோ/படிப்பதோ/கேட்பதோ... இது அனைத்தும் 'போர்ன்'. நேரில் பார்க்கும் லைவ் செக்ஸ் ஷோக்களோ, ஸ்ட்ரிப்டீஸ்/காபரே மாதிரியான நடனங்களோ அல்ல.

உதாரணத்திற்கு, சாமியாரின் சல்லாபத்தை உங்களுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தால்... அது போர்ன் அல்ல.  ஆனால் அதே காட்சியை, டிவியில் பார்த்திருந்தால்.. (சென்சாரில்லாமல்) யெஸ்... 'தட் ஈஸ் போர்ன்'. எனவே... மேலுள்ள அர்த்தங்களை நீங்கள் நம்பினால், 
 • புஷ்பா தங்கதுரை, பால குமாரன், அட நம்ம சாரு கூட (சாஃப்ட்) போர்ன் எழுத்தாளர் என்றாகி விடுவார்கள் (இவர் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர் இந்த கேட்டகரியில் வருவாரா?)
 • கருவிலிருக்கும் குழந்தைகளைத் தவிர 'நான் போர்ன் பார்த்ததில்லை' என யாரும் மாரோ, வயிறோ... எதையும் தட்டி சொல்ல முடியாது
அதே சமயம் 'எக்ஸ்ப்ளிசிட் மட்டும் போதாது. அது உங்களின் பாலுணர்ச்சியை தூண்ட வேண்டும்' என்கிறது இன்னொரு சப் கேட்டகரி. பிரச்சனை என்னவெனில், ஒருவரின் பாலுணர்ச்சி தூண்டப்பட 'எக்ஸ்ப்ளிசிட்'-டாக எதுவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இன்னொரு விதத்தில், எக்ஸ்ப்ளிசிட் மெடீரியல்கள் கூட நம் உணர்ச்சிகளை தூண்டமலே இருக்கவும் வாய்ப்புண்டு (இது பற்றிய இரண்டு டாக்குமெண்ட்ரிகள் பின்னொரு பொழுது). அப்படியென்றால் எது எக்ஸ்ப்ளிசிட் என்ற அடுத்த கேள்வி வரும். 

Its very tough to define, what is porn. ஒருவரது பார்வை, நிச்சயம் அடுத்தவரிடமிருந்து வேறு பட்டிருக்கும். இதன் அளவுகோல் இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை மாற்றியமைக்கப் பட்டு விட்டது. 1970-களில் 'ஹஸ்லர்' மேகஸினில் வெளியான புகைப்படங்களை விட, இன்றைய மலையாளப் படங்களின் போஸ்டர்கள் எக்ஸ்ப்ளிஸிடாக இருக்கும். எனவே எது போர்ன் என்பதற்கு சரியான விளக்கமில்லை என்பதே சரியான விளக்கம். If you like kinky anything...., you porn with it! 

இதே தமிழ் கூவும் பதிவுலகில், ஒரு பெரிய மகான் எழுதிய இலக்கிய கவிதை இப்பொழுது நியாபகத்திற்கு வருகிறது.
செக்ஸ் உணர்ச்சிகளும் 
அலர்ஜியைப் போல... 
சூரியனுக்குக் கீழுள்ள 
எதன் மூலமும் 
தூண்டப் படலாம்; 
சூரியன் உட்பட!
So what is porn then?

==========

எனி.. வே, எழுத வேண்டும் என நினைத்தது போர்ன் படங்களைப் பற்றியும், அதன் பின்னனிகளைப் பற்றியும். Lets stick with it.

பிள்ளையார் சுழி
மேற்கத்தியர்களின் போர்ன் படங்களின் வரலாறு ஆரம்பித்தது சுமாராக 150 வருடங்களுக்கு முன்!  ஒரு புறம் ஆங்கிலேயர்களின் கிறித்துவ ஆன்மீகம் இதை தடை செய்ய, இதன் இயல்பாகவே எழுந்த மக்களின் ஆர்வத்திற்கு, 1800-களில், கண்டு பிடிக்கப்பட்ட ஸ்டில் கேமரா, இன்றைய கலவித் தொழிற்சாலைக்கு பிள்ளையார் சுழியிட்டது. தொடர்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்ற பாராக்களை எழுதின. அன்றிலிருந்து... இது வரை ஒளி-ஒலி ஊடகங்களை எந்த தொழிற்துறை சரியாக பயன்படுத்தியிருக்கிறதோ இல்லையோ, போர்னியவாதிகள் மட்டும் கிலுகிலுப்பையிலிருந்து கேஸியோ கடிகாரம் வரை எதையும் விட்டதில்லை.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டால், அமெரிக்கா இன்றும் 'கட்டுப்பெட்டி' நாடுதான். எத்தனைதான் 'free country, first amendment' அது இதுவென கதை விட்டாலும்... எங்கும் கன்சர்வேட்டிவ்-தனம்தான். அதிலும் செக்ஸ்? ஹ்ஹ்ஹ்ஹும்.. மூச்!!!! இப்படிப்பட்ட நாட்டில், போர்னாவது... ஒன்றாவது?! 

1920-களில் அமெரிக்கா தத்தித் தத்தி... மேற்கே போகும் ரயில்களை திரைப்படமாக எடுக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் ஃப்ரான்ஸ்...? இது போன்ற விசயங்களுக்கு ஃப்ரான்ஸ்தான் எப்பொழுதும் முன்னணி. 1920-களுக்கு முன்பே, Georges Méliès போன்ற ஜாம்பவான்கள் (FX- தொடரில் முதல் அத்யாயம்) ஃப்ரான்ஸின் திரையுலகை பல கட்டங்களுக்கு நகர்த்தி விட்டதில், அடுத்ததாக என்ன செய்யலாம் என யாரோ.. ரூம் போட்டு யோசிக்க...... முப்பது வருடங்களாக.. 'வெறும் ஸ்டில்லாய் உலா வந்த, 'ந்யூட் படங்களுக்கு மூவி கேமராக்கள் அறிமுகமானது. 

ஆரம்பத்தில் பாரீஸின் போர்ன் படங்கள் அதிக பட்சமாக ஆண்/பெண்கள் உடைகளை களைந்து (Striptease) உச்சா போவதைத்தான் (Squirt) காட்டிக் கொண்டிருந்தார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக குப்புறப்போட்டு செல்லமாக பின்புறம் தட்டுவது (BDSM), கிறித்துமஸ் தாத்தா கொடுக்கும் டில்டோகளை அவர் முன்பாகவே பரிசோதிப்பது (Fetish) என தங்களின் அறிவு விருத்தியையும், மக்களின் கலை ரசனையையும் வளர்த்தார்கள். அதுவும் போரடிக்க.... 

'பார்-க்கு வரும் இரண்டு பெண்களை, பார் அட்டண்டர், அட்டண்ட் செய்கிறார்' என்ற புரட்சிக் கருத்தில், 1928-ல் முதன் முதலில் ஒரு முழுமையான போர்ன் (threesome) வெளியானது. நீளம்.. 4 நிமிடங்கள். தலைப்பு Nudist Bar-ஓ என்ன எழவோ. ஆனால் நிச்சயம் வெற்றிப் படமாகத்தான் இருந்திருக்கும். 

ஃப்ரான்ஸில் போர்ன் புகைய ஆரம்பித்தது. Mr.X அதற்கு தூபம் போட ஆரம்பித்தார்.

========

இந்த Mr. X-ன் பெயர் கடைசி வரை யாருக்கும் தெரியவில்லை. இவர் யாரிடமும் சொன்னதுமில்லை. இராம நாரயணனையும் விட வேகமாக படமெடுத்தார் (5-10 நிமிடங்கள்தான் படத்தின் நீளம்). எடுத்துக் கொண்டேயிருந்தார். படத்தின் ஹீரோக்கள் அவரின் நண்பர்கள். ஹீரோயின்களாக தெரு முனையில் கொக்கி போடுபவர்கள். லொகேஷன்.... அதே தெரு முனை ஹோட்டல்கள். இவருக்கு ஒரு கெஸ்ட் ரோல் (கதவைத் தட்டும் கணவன், கண் தெரியா பாட்டி). 
இன்றைக்கும் நாம் போர்ன் படங்களில் பார்க்கும், பிட்ஸா டெலிவரி பையன், கணவனின் நண்பன், மனைவியின் தோழி, பூந்தோட்டக் காவல்காரன், போன்ற பல ஒன் லைனர்களுக்கு இவரே சொந்தக்காரர்.
திருவாளர் எக்ஸ்
இதே நேரத்தில்.. ஃப்ரான்ஸ் இன்னொரு புரட்சியையும் செய்தது. அது அமெரிக்காவில் நிறவெறி கால் விரித்தாடிய நேரம். கருப்பினத்தவர்களை தீண்டத்தாகதவர்களாக இவர்கள் ஒதுக்கி வைத்திருந்த பொழுதே.. அவர்களையும் போர்ன் படங்களில் ஃப்ரான்ஸ் அறிமுகப்படுத்தியது.

ஆனால்... அப்பொழுதிய பிரச்சனை 'ஜெஸ்ஸி ஜேனின்' முக்கல் முனகல் சத்தமில்லாமல், 16-18 ஃப்ரேம்களில் எடுக்கப்பட்டு, அதை 24 ஃப்ரேம்களுக்கு காட்டிக் கொண்டிருந்தார்கள்.  FX - ல் காந்தித் தாத்தா வேகமாக நடந்த அதே எஃபெக்ட், போர்ன் படங்களில். எங்கே.. கற்பனைக் குதிரையை கொஞ்சம் தட்டுங்கள் பார்ப்போம்!

முதல் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட பல்வேறு நாட்டவர்களின் தொடர்பும், உறவுகளும் 'இந்த' விசயத்தில் கொஞ்சமாவது அமெரிக்காவிலும், ஹாலிவுட் படங்களிலும் 'லிபரேஷனை' கொண்டு வந்தது. எரோடிக் படங்கள் மெய்ன்ஸ்ட்ரீமை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அதுவும் கூட, சைடில் நின்று கொண்டு பட்டத்து ராணிக்கு சாமரம் வீசும் நிர்வாணப் பெண் மாதிரியான மொக்கை சீன்கள் மட்டுமே. 

ஆனால் இதைக்கூட பொறுக்க முடியாத அன்றையல் கல்சர் போலீஸ்களான, சர்ச் ஃபாதர்கள், 'கடவுளின் பெயரால்' கட்டுப்படுத்த முயல... அவர்களின் அம்பாக அத்தனை பெற்றோர்களும் அரசாங்கத்தின் மீது பாய்ந்தார்கள். விளைவு.....? 

ஹாலிவுட்டிற்கும்.. அமெரிக்கர்களின் காம இச்சைகளுக்கும் பிடித்தது சனி. அவர்களின் மெய்ன்ஸ்ட்ரீம் எரோடிக் சினிமாவென்பது, ஹீரோயின் ரோடோரத்தில் முழங்கால் வரை ஸ்கர்டை தூக்கி லிஃப்ட் கேட்கும் காட்சியோடு முடிந்து போக, கலவித் தொழிற்சாலை பாதாளத்திற்குள் பதுங்கியது.

சனி....?!!
இவர் மேலும் கூறுகிறார் ...

16 கலந்துரையாடல்கள்

இந்த படம் பார்த்து ரொம்ப நாளாச்சு ஆனாலும்  நாம்  சுத்திரதினத்த கொண்டடுறப்ப   இதை  பற்றி எழுதுனா பொருத்தமா இருக்கும்னு தோனுச்சு. இது இந்த படத்தை பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு பகிர்வே தவிர விமர்சனம் கிடையாது.இந்த படத்தோட இயக்குனர் தீபா மேத்தா.நம்ம நாட்டுல கருத்து சுதந்திரம் பத்தி பேசுறப்ப கட்டயாம் ரெண்டு பேரோட பெயர்  அடிபடும் ஒருத்தர் ஓவியர் எம்.எப் ஹுசைன் அவர  நாம நாடு கடத்தி அங்க அவர் இறந்ததுக்கப்புறம் இங்க நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்னொருவர் தீபா மேத்தா.தீபா மேத்தாவ அவரோட fire படத்த ரிலீஸ் பண்றப்ப பிரச்சனை  செஞ்சதோட அதுக்கப்புறம் அவரோட water படத்த  இந்தியால  எடுக்கவும்  அனுமதிக்கல.அந்த படத்த ஸ்ரீலங்கால எடுத்து முடிச்சாங்க பின்னாளில்  அது கனடா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.அவுங்களோட அடுத்த படம் எழுத்தாளர்  சல்மான் ருஷ்டியோட நாவல அடிப்படையா வச்சு எடுக்குறாங்க ஆனா இந்த படத்துக்கும் இங்க பிரச்சனை வரலாம்னு மீண்டும் ஸ்ரீலண்காலையே படப்பிடிப்பு நடத்துறாங்க.

                                         
எர்த் 1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிக்கப்பட்டதை  பின்புலமாக கொண்ட காதல் கதை.இது ஒரு புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்.படத்தில் முக்கியமான மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருப்போர் இந்தியாவின் தலை சிறந்த படைப்பாளி ஆமிர் கான்(சாரி கமல்ஹாசன்),இந்தியாவின் சிறந்த நடிகைகளில்  ஒருவரான நந்திதா தாஸ்,மற்றுமொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அப்போதைய புதுமுகம் ராகுல் கண்ணா.இந்திய மாற்று சினிமாவின் முகங்களில் ஒன்றாக  திகழும் ஷபானா ஆஸ்மியின் குரலுடன் படம் துவங்குகிறது. 

படம் இடம்பெறும் களம் சுதந்திரத்திற்கு முந்தய ஒருங்கிணைந்த இந்தியாவின் லாகூர் நகரம்.வசதியான பார்சி கும்பத்தின் வேலைகாரியாக இந்து மதத்தை சேர்ந்த  நந்திதா தாஸ் நடித்திருக்கிறார்.இந்த முக்கோண காதல் கதையில் வரும் மற்ற இருவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஐஸ்வண்டிக்காரராக வரும் ஆமீரும்,அதே இஸ்லாம் மதத்தை சேர்ந்த ராகுல் கண்ணாவும்.படத்தின் திரைக்கதை  பார்சி குடும்பத்தை சேர்ந்த குழந்தை தான் பெரியவளானதும் நடந்ததை நினைவுகூருவதாக அமைக்கப்பட்டுள்ளது. கதையின் மிகச்சுருக்கம் இங்கே

இந்திய-பாகிஸ்தான் பிரிவினை எவ்வாறு இம்மூவரின்  வாழ்கையும்  புரட்டிப்போடுகிறது என்பதே கதை. பிரிவினையின் போது அதுவரை ஒற்றுமையாக இருந்த சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்களிடையே வேற்றுமை எழுகிறது.இதன்  விளைவாக பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள்.ராகுல் கண்ணா நந்திதா தாஸ் இடையே நிலவும் காதலை பொறுத்துக்கொள்ளமுடியாத ஆமீரால் ராகுல் கண்ணாவும் நந்திதா தாசும்   இஸ்லாமிய நண்பர்களால் கொல்லப்படுகின்றனர்.அமீரின் நடிப்பு அபாரம் இந்த மனுஷனால மட்டும் எப்படி எல்லா விதமான பாத்திரத்திலும் அபாரமா நடிக்க முடியுதுன்னு தெரியல.கலைஞன்ட நீ!!!  
                                            

என்ன தான் காதல் கதையாக  இருந்தாலும் வரலாறும் சரிபங்கில்சொல்லப்பட்டுள்ளது.கலவரத்திற்கு பயந்து எவ்வாறு பலர் மதம் மாறினார் ,தன்னுடைய தாய்நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது எவ்வளவு வருத்தத்தையும் கணத்தையும் தருகிறது என்பதும் அழுத்தம்  திருத்தமாக  சொல்லப்பட்டுள்ளது.படத்திற்கு இசை இசைப்புயல் ரஹ்மான்  பின்னணி இசை சோகத்தையும் பதற்றத்தையும் சரியாக வெளிபடுத்துகிறது.இந்த படம் அனைவரும்  கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.வரலாற்றிலேயே அதிகமாக  மக்கள் தங்களது நாட்டையும்  சொந்தங்களையும் விட்டு விட்டு இடம்மாறிய  சோகம் அரங்கேறிய சம்பவத்தின் அழுத்தமான பதிவு .

 எனக்கு இன்றும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாடும் போது தோன்றும்  ஒரு நப்பாசை அக்ரமும் சச்சினும் அன்வரும் கங்குலியும் ஒரே அணியில் விளையாடியிருந்தால் எப்படி இருக்குமென்று !!                                                  
                                                                                                                                                                                                                              -இரா

இவர் மேலும் கூறுகிறார் ...

3 கலந்துரையாடல்கள்