நீங்க உங்க நண்பர்களோட காட்டுக்குள்ள மாட்டிகிட்டீங்க , நாலுநாள் ஒரு சாப்பாடும் கெடைக்கல , திடீர்னு ஒரு பிளேட்டு பிரியாணி உங்க நாலுபேருக்கும் முன்னாடி தோன்றுகிறது , அது ஒருத்தருக்கு தான் பத்தும் , நண்பர்கள் சாபிடட்டும்னு விட்ருவீங்களாநிறைய படத்துல பாத்துருபீங்க , வில்லன் பெரிய அப்பாடக்கரா  இருப்பாரு , ஆனா பொண்ணுங்க மேட்டர் வீக்கா இருப்பாரு , அத வச்சு அவர போட்ருவாங்க . உங்க அப்பனுக்கும் பே பே பாட்டு லேர்ந்து பில்லா  2 வரை நிறைய உதாரணங்கள்  உண்டு .அதுபோல தான் காட்டுல மேட்டர்ருக்கு நிறைய தடைகள பாத்தோம் .
  • முதல் தடை இணையிடம் இருந்து 
  • ரெண்டாவது தன இனத்தை சேர்ந்த சக ஆண்களிடம் இருந்து
  • மூன்றாவது எதிரிகளிடம் இருந்து 

என்னதான் தோஸ்து படா தோஸ்தா இருந்தாலும் , மேட்டர் ன்னு வந்துட்டா அதை எல்லாம் விலங்குகள் கண்டுக்காது .இணையிடம் கூடுவதற்காக உடல் சண்டை(மார்கழி நாய்கள்) , நடனப்போட்டி(மயில்) , பாட்டுபோட்டி(தவளை ),வீடு கட்டும் போட்டி (தூக்கணாங்குருவி), இளவட்ட கல் தூக்குதல் (சிவாஜி), காளையை அடக்குதல் (ரஜினி) என்று பெரும் போட்டிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. மேட்டரின் பொது  மெய்மறந்து காணப்படும் நேரத்தில் எதிரிகள் எளிதாக அட்டாக் பண்ணிவிட வாய்ப்பு அதிகம் .அதுவும் நாய் , ஓநாய் போன்ற லாக் ஆகும் விலங்குகளை நினைத்து 

பாருங்கள் . மேலே  காட்டி உள்ள படத்தில் அந்த வெட்டு கிளியை மேட்டர் சமயத்தில் அலேக்காக சாப்பிடும் பள்ளம் நொண்டி குளவியை காணலாம் (digger wasp ).அதுவும் சில பிரகஸ்பதிகள் பயங்கராமாக யோசித்து விலங்குகளின் வீக்னஸ்சை காட்டி லாபம் பார்த்து விடுவார்கள்


சில தாவரங்கள் (ophyrs orchid/ bee orchid ) தனது பூக்களை சில வகை தேனீக்களை போல மலரச்செய்யும் , தூரத்தில் இருந்து பார்க்கும் ஆண் தேனிக்கள் பெண் தான் உண்கார்ந்திருக்கு என எண்ணி அவற்றை ரேப்ப முயற்சித்து ஏமாந்து சென்று விடும்
             
இதனால் செடிக்கு என்ன நன்மைமகரந்த சேர்க்கை நடக்கிறதே ......இது பரவாயில்லஇந்த டிக்கில பல்பு எரிக்கிற மின்மினி பூச்சி இருக்கே 


இதுல பல இனங்கள் உண்டு , ஒவ்வொரு இனத்துக்கும் ஒவொவொரு சிக்னல். எடுத்துக்காட்டாக ஒரு வகையான மின்மினி இரவு வானில் j shape  இல் கொடு போட்டு துணைக்கு சிக்னல் கொடுக்கும்.

சில predaceous (வேட்டக்கார ) மின்மினிகள் இவற்றை போல சிக்னல் கொடுத்து ஆவலாக வரும் ஆணை வேட்டையாடி விடும் . 


---அடுத்த தடைகள் .....அடுத்த பதிவுல…..
இவர் மேலும் கூறுகிறார் ...

2 கலந்துரையாடல்கள்