Pages

Saturday, August 27, 2011

கலவித் தொழிற்சாலை - 03

போர்ன்மொழி
I was starving when I did it. I was desperate.You know when you're hungry, you do a lot of things you wouldn't ordinarily do!
-ஸில்வர்ஸ்டர் ஸ்டலோன்
செப்டம்பர் 1978, ப்ளேபாய் பத்திரிக்கை

Hays Code
  • ஷூ - சாக்ஸைத் தவிர வேறெதையும் கழற்றக் கூடாது
  • வயசான தாத்தா இருமினால் தவிர, கேமரா பெட்ரூம் பக்கமே போகக் கூடாது
  • வில்லன் ஹீரோயினை ரேப் செய்யலாம். ஆனால் ஒரு பட்டன் கூட ஓப்பன் பண்ணாமல். மிக முக்கியம் : ரேப் சீனில் காமெடி கூடாது.
  • ஹீரோ அஞ்சடி தூரத்தில் நின்னு வில்லனை போட்டுத் தள்ளலாம். ஆனா அதில் பழி வாங்கும் நோக்கம் இருக்கக் கூடாது
  • வில்லன் பண்ணக் கூடாத விசயங்கள் : திருட்டு, கொலை, கொள்ளை, போதை மருந்து, பாம் வைத்தல்! தேவையெனில் துப்பாக்கியில் சுடலாம், சத்தம் வராமல்
  • ஆர்ட் படம்? ஹீரோயின் ஒரு ப்ராஸ்டிட்யூட்? ஸாரி....!!! நெக்ஸ்ட்
  • தாராளமாக கருப்பர்களும் வெள்ளையர்களும் சங்கமிக்கலாம். ஆனால் 101% காட்சிகள் வெட்டப்படும்
  • உத்தம புத்திரர்களான, கடவுளின் தூதர்களை என்றும் தப்பாக காட்டக் கூடாது


செக்ஸ் வேண்டாமென சாமி என்றாவது சொல்லியிருக்கிறதா? ஆனால் ஆங்கில பூசாரிகள்... ”தனக்கு (பொதுவில்) கிடைக்காதது எவனுக்கும் கிடைக்கக் கூடாது” என்ற நல்லெண்ணத்தில், கும்பிட வந்தவனை சொறிந்தார்கள். அரை லூசு அமெரிக்கர்கள் அரசாங்கத்தின் மீது பாய்ந்தார்கள். 

நாட்டாமையின் தீர்ப்பு
சிஷ்ய கோடிகளின் தொந்தரவு தாங்காமல், சில மாநிலங்களில் மட்டும் அரசாங்கமே ‘சென்சார்’ என்ற நடைமுறையை கொண்டு வர ஆரம்பித்தன. ஆனால் ஃப்ளோரிடாவில் கட் செய்யும் காட்சிகளுக்கு, நியூயார்க்கில் எந்தப் பிரச்சனையும் இல்லையென்ற அடுத்த குழப்பம் ஆரம்பித்தது. ஒருவேளை மத்திய அரசாங்கமே இதில் தலையிட்டு, நாடு தழுவிய ‘சென்சாரை’ ஆரம்பிக்குமோ என்ற ’பீதி’ ஹாலிவுட்டை தாக்கியது.

விழித்துக்கொண்ட ஹாலிவுட்டின் நாட்டாமைகள் (MGM, First National & Famous Players-Lasky), ஒரு முன்னாள் போஸ்ட் மாஸ்டரை நியமித்து ‘செய் / செய்யாதே / எச்சரிக்கை’ என்ற ஒரு லிஸ்டை தயாரித்தார்கள்.

1922-ல் ஆரம்பிக்கப் பட்ட MPPDA (Motion Picture Producers and Distributors of America) என்ற அமைப்பின் கீழ், வில் ஹேஸ் என்ற போஸ்ட்மாஸ்டர் உருவாக்கிய லிஸ்டின் ஸாம்பிளே மேலுள்ள 'Hays Code'.

ஆரம்பத்தில் ‘இப்படி செய்யலாம்..., அப்படி செய்யாமல் இருக்கலாம்’ என ஆலோசனை கூறிய MPPDA கொஞ்சம் கொஞ்சமாக, தன் ஆலமரத்தின் கிளைகளை அதிகரிக்க, சொம்பு வலுவேறியது. 1930-களில் ’இனிமேல் நீ இப்படி செய்...’ என அதிகாரம் செலுத்தியது. நாளடைவில் சென்ஸார் செய்யாத படங்களை தியேட்டரில் வெளியிட முடியாத நிலையை உருவாக, அமெரிக்கர்களின் ’எரோடிக் சினிமா’ அண்டர்க்ரவுண்டில் செயல்பட ஆரம்பித்தது.

எதோ அண்டர்க்ரவுண்ட் என்றதும், ஆஹா-ஓஹோ சீனெறெல்லாம் தோணலாம். ஆனால் காட்சிகள் என்னவோ முன்பே சொன்னது போல ஹூக்கை கழற்றுவது, சாமரம் வீசுவது போன்ற த்ராபைகள்தான்.  அதுவும்.. கிட்டத்தட்ட அடுத்த 40 ஆண்டுகளுக்கு!!
அமெரிக்கா இந்த சென்சார்ஷிப்பை ஆரம்பித்த நாட்களிலேயே ஐரோப்பாவில் ஒரு போர்ன் புரட்சியே ஆரம்பித்தது. அதன் விளைவே.. இன்றும் தமிழ் சினிமாவில் கூட இல்லாத ‘genre' என்ற விசயம், போர்னிலும் புகுந்தது. இந்த genre உதாரணத்திற்காக மட்டுமே சில ஆங்கில டைட்டில்களை தமிழ் படுத்தியிருக்கிறேன். உங்கள் ஆராய்ச்சிக்கும் இது உதவலாம்.
  • பெரியதையே ரசிக்கும் பெரிய பின்புறங்கள்
  • பேரிளம் பெண்களும் பெரிய கருப்பும்
  • சமகால குழு மனப்பான்மை
  • பெண்கள் காட்டிற்குள் சென்று விட்டார்கள்
  • புட்டங்களின் ஊர்வலம்
  • கட்டிற்கடங்காத சீருடைகள்
  • சவரம்
_____________________________________

அடங்க மறு
என்றுமே காலவதியான ஒரு விசயமென்றால், அது சமூகத்தின் கலாச்சார விதிகள்தாம். நாளுக்கு நாள் மாறும் அதன் கொள்கைகளின் வேகத்திற்கு, உருவாக்கப்பட்ட விதிகள் என்றுமே ஒத்துப் போனதில்லை. அதிலும் அமெரிக்கா போன்ற குடியேற்ற நாடுகளில் இது சாத்தியமே இல்லை. கடல்/விமான போக்குவரத்து, இரண்டாம் உலகப் போர், ஐரோப்பிய திரைப்படங்கள், அனைத்து கண்டங்களிலிருந்தும் குடியேறும் மக்கள் என அமெரிக்கா தன் வெள்ளையடையாளத்தை இழந்தாலும்........

........ MPPDA மட்டும், Hays Code-ஐ விடுவதாக இல்லை. அதற்கு இன்னமும் வில்லன் ஐந்தடி தள்ளி நின்றே கற்பழிக்க வேண்டுமென்ற கலாச்சார கவலையிருந்தது. இதன் காரணமாகவே 1950-களில் ஹேஸ் கோட் - ஹேஸ் ஜோக், என்றானது.

யோகி ஸ்ரீராமானந்த குரு
எழுதிய ஆன்மீகப் பதிவு
நாளைடைவில் நாட்டமைகளின் தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுக்க, நாட்டாமைகளே தங்களுக்குள் காலை வாறிக் கொள்ள..., இன்றைய இந்திய சென்சாரைப் போன்றே அமெரிக்காவின் சென்சாரும் ஒரு செயல்படாத அமைப்பானது. 'ரெண்டு பட்டன் கழண்டதெய்ல்லாம் சென்சார் செய்ய முடியாது. முடிஞ்சதை பார்த்துக்க’ -என இண்டிபெண்டண்ட் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், சென்சாரே செய்யாமல் சில படங்களை ரிலீஸ் செய்ததும், அந்தப் படங்கள் மிகப் பெரிய வெற்றியடைந்ததும் ஹாலிவுடின் வயிற்றில் புளி, உப்பு, சர்க்கரை போன்றவைகளை கரைக்க............ நாட்டாமைகள் புதிய உத்தியை புகுத்தினார்கள். விளைவு?

MPAA!!!!  

அதாவது, படமெடுப்பவன் தான் சொல்வதை கேட்வில்லையென்றதால், படம் பார்ப்பவனை பார்த்து தனது ‘அட்வைஸை’ சொல்லும் அமைப்பு. ’இதோ பாருப்பா... படத்துல வில்லன் அஞ்சடி தள்ளி நின்னு கற்பழிச்சா அது PG, மூணடின்னா அது PG-13, ஒரடின்னா R, ஸீரோன்னா X (NC-17). உன்னோட கல்ச்சருக்கு ஏத்த மாறி.. உன் ஃபேமிலியை கூட்டிட்டு போய் படம் பாரு’  என்று நீங்கள் என்ன பார்க்க வேண்டும்/வேண்டாமென முடிவு செய்வதே MPAA-வின் வேலை.

இதைப் பற்றி ஏற்கனவே சமகால தமிழ் பதிவுலகின் தவிர்க்க முடியாத சக்தி, இங்கே எழுதியிருப்பதால், மேற்கொண்டு மேட்டர் வேண்டுபவர்கள் அதை படிக்கவும்.

________________________________

எவல்யூஸன் : எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. எந்த விசயமும் தன் ஆரம்பத்தில் உன்னதம் பெறுவதில்லை. அது உயிரியல் பரிணாம வளர்ச்சியிலிருந்து, தொழில்நுட்பங்கள், மென்பொருட்கள், நாமெழுதும் மொக்கை பதிவுகளென அனைத்திற்கும் பொருந்தும். 

போர்ன் மட்டும் இதில் விதிவிலக்கா?!!! பல ஆண்டுகளாக Church/MPPDA/MPAA வின் கட்டுப்பாட்டிலிருந்த அமெரிக்கர்களின் கலாச்சாரம், கொஞ்சம் கொஞ்சமாக விடுபட ஆரம்பிக்க, ஒரு வழியாக 1970-களில் அமெரிக்க அரசாங்கமே... ‘போர்னை’ சட்ட பூர்வமாக்க......

... போர்ன் பூதம் சிலிர்த்தது!

10 comments:

  1. அன்பரே....

    // என்றுமே காலவதியான ஒரு விசயமென்றால், அது சமூகத்தின் கலாச்சார விதிகள்தாம் //

    போகிறபோக்கில் இதுபோன்ற சமூக கட்டுடைத்ல் குறித்தும் திறம்பட எழுதுகிறீர்கள்.................வாழ்த்துக்கள்

    // எவல்யூஸன் : எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. எந்த விசயமும் தன் ஆரம்பத்தில் உன்னதம் பெறுவதில்லை //

    எந்த விஷயமும் எப்போதுமே உன்னதம் பெறுவதில்லை என்பது என் கருத்து

    ReplyDelete
  2. // பெரியதையே ரசிக்கும் பெரிய பின்புறங்கள் //

    தமிழினியன் பாத்தா...............இதுல சொற்கள் கட்டமைப்புல நெறைய தவறு இருக்குன்னு வருத்தப்படுவார்...............

    ReplyDelete
  3. ஐரோப்பிய சினிமா பல மடங்கு அமெரிக்க சினிமாவ விட வீரியமா இருக்க(சில தொழில்நுட்ப யுக்திகள் தவிர)இதுவும் ஒரு காரணமோ........

    இந்த படங்களுக்கே இப்புடினா.......பொலிடிகல் படங்களுக்கு ?

    ReplyDelete
  4. The Outlaw - Howard Hughesன்னு ஒரு போஸ்டர் போட்டிருக்கீங்களே........

    யாரு தலைவரோட The Aviatorஆ ?? அந்த படத்துல கூட ஒரு பலான படம் பத்தி விளக்கம் சொல்லும் காட்சி வருமே..............புகைப்படங்கள் எல்லாம் வெச்சி.........அது இந்த MPPDA முன்னாலதானா ??

    ReplyDelete
  5. போர்ன் பூதம் சிலிர்த்தது!////
    - என்ன ஒரு வார்த்தை ஜாலம்.

    ReplyDelete
  6. இதைப் பற்றி ஏற்கனவே சமகால தமிழ் பதிவுலகின் தவிர்க்க முடியாத சக்தி, இங்கே எழுதியிருப்பதால், மேற்கொண்டு மேட்டர் வேண்டுபவர்கள் அதை படிக்கவும்.//

    சமகாலம் நீங்களுமா ?

    ReplyDelete
  7. 15 வயசு பையன் ஒருத்தன் NC-17 படத்துக்கு போனா தண்டனை ஏதாவது இருக்கா? அதாவது இந்த மாதிரி விதிகளை மீறி படம் போனா முதல்ல தியேட்டர்க்குள்ள விடுவாங்களா?

    ReplyDelete
  8. தண்டனை அவனுக்கில்லை. டிக்கட் கொடுத்தவனுக்கு!! R படங்களுக்கு யாராவது அடல்ட் கூடயிருந்தா போதும். ஆனா இதெல்லாம் மல்டி காம்ப்ளக்ஸ் தியேட்டர்களுக்கு ஒத்து வராது. இன்னொரு காலாவதியான விதியிது.

    NC-17 படங்கள் 99.9% தியேட்டரில் வெளிவராது. NC-17 வாங்கியிருக்கனும்னு அவசியமும் இல்லை.

    ReplyDelete
  9. யோகி குரு வாழ்க. இன்னும் எழுந்தருளி போர்.. ச்சீ.. பொன்பதிவுகளினால் ஞானம் தருவாராக.

    குடியேற்ற நாடாகையால் தான் பழைய சர்ச்சுகளாலும் மற்றயவர்களாலும் ஆதிக்கம் நாட்டில் இல்லாமல் போனதா? இல்லை இது சினிமா விடயத்தில் மட்டுமா?

    1990 ல்தான் MPAA வந்நதாக விக்கியார் சொல்றார், ஆனா அதுக்கு முதலிலேயே இப்போதய Rated movies வந்ததே?

    ReplyDelete
  10. அருமையா எழுதியிருக்கீங்க. நன்றி திரு.யோகி ராமானந்த குரு..

    ReplyDelete