Pages

Wednesday, August 03, 2011

தமிழ்ப்பதிவுலகம் - ஒரு unbiased பார்வை

ஹாய் ஃப்ரெண்ட்ஸ். 

Welcome to the new blog. 

அதான் ஆயிரத்தெட்டு தமிழ் ப்ளாக் இருக்கே. அப்புறம் என்னய்யா புது ப்ளாக்? அப்புடீன்னு ஒரு கேள்வி இதைப் படிக்குற உங்க மனசுல எழலாம்.  வேற ஒண்ணுமில்ல தலைவா. தமிழ் ப்ளாக்ஸ் என்கிற விஷயம் இப்ப பரிணாம வளர்ச்சி அடைஞ்சாச்சு. ஒரு புது விஷயம் உள்ளே வருகையில், கொஞ்ச காலம் அதை வெச்சி நடக்குற பரிசோதனைகள், அதுல ஆரம்ப காலத்துல நுழைஞ்ச பயனாளர்கள், அதைப் படிக்கும் நண்பர்கள் அப்புடீன்னு டாப் கியர்ல போகத்தான் செய்யும். ஆனா அதே சமயம், அதுல அரசியல் தலைவிரிச்சும் ஆடும். let us be clear.

அதாவது, இப்ப ஒரு ப்ளாக் இருக்கு. அதைப் படிக்கும் மக்கள் அதிகமாயிட்டே வர்ராங்க. ஹிட்ஸ் ஜாஸ்தியாய்க்கிட்டே இருக்கு. அதன் ஓனர் - அதாவது, பதிவுலக மொழில சொல்லணும்னா, அதில் எழுதும் பதிவர், சாதாரண நிலையில் இருந்து (ஆரம்ப நிலை), கொஞ்சம் மேல போயி, பிரபல பதிவர் அப்புடீன்னு அழைக்கப்படுறாரு. அப்போ, அதிகாரத்தின் சாயல் அவருகிட்டயிருந்து லைட்டா வெளிப்பட ஆரம்பிக்குது. தனது பதிவுகள் பிரபலம் ஆயிடுச்சு; ஃபாலோயர்ஸ் அதிகமாயிக்கிட்டே வர்ராங்க; பப்ளிக்ல எப்பவாச்சும் ஒருத்தர் ரெண்டு பேர் நம்மளைப் பாக்குறாங்க... இப்புடி ஆரம்பிக்கிற அந்த பதிவு போதை, மெல்ல மெல்ல ஜாஸ்தியாயிட்டு வந்து, ‘நான் ஒரு பிரபல பதிவர்யா’ அப்புடீன்னு சம்மந்தப்பட்ட பதிவரே நினைக்க ஆரம்பிக்குறதுல போய் நிக்கும். இது மத்திய நிலை.

இதுக்கப்புறம் என்ன ஆகும்? இந்தப் பதிவர் எழுதுறது புடிக்காம, போலி பேர்லயோ அல்லது நிஜப்பேர்லயோ இன்னொருத்தர் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கிறாரு. அதுல, இந்தப் பதிவரைத் தாக்கி, சீரியஸாவோ அல்லது காமெடியாவோ ஒரு பதிவு போடுறாரு. இப்ப என்ன நடக்கும்?

தமிழ் இணைய வெளில, யாருன்னே தெரியாம இருந்துக்கிட்டு, பொதுவெளியில் ஒருவர் இன்னொருவரைத் தாக்க ஆரம்பிக்கையில், ‘அண்டாவைக் கவுத்தான்’, ‘கொண்டே புடுவேன்’, ஏமாந்த பதிவர்’ இப்புடியெல்லாம் பேரு வெச்சிக்கினு, தானும் போய் அந்த நபரை கும்மாங்குத்து குத்தும் நபர்களே இவர்கள். 

இவர்களுக்கு, ‘அனானிகள்’ அப்புடீன்னு பெயர்.

தமிழ்ப் பதிவுலகம், ஆரம்ப நிலைல இருந்து மத்திய நிலைக்குப் போனப்ப, பரிணாம வளர்ச்சி, அதுல போய் உட்டதுன்னா, பல ‘பிரபல’ பதிவர்களே, இப்படியெல்லாம் அனானி பேர்ல ஐடிக்கள் க்ரியேட் பண்ணிக்கிட்டு, சகட்டுமேனிக்கு தனக்குப் பிடிக்காதவர்களைத் தாக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அது யார்யார்ன்னு தெரிஞ்சி போனதுக்கு அப்பால, ‘நீயெல்லாம் ஒழுங்கா? நாயே... பேயே’ அப்புடீன்னு பாதிக்கப்பட்டவங்க பதிவுகள் போட ஆரம்பிச்சாங்க. அது, ஒரு அடிதடில போய்த்தான் எப்பவுமே முடியும். Physical அடிதடியில்ல. அதுக்கெல்லாம் எங்க நம்மகிட்ட தெம்பு? பதிவுகள் எழுதியே தாக்குதல் நடக்கும். இதுல, சமயத்துல, தான் ஒரு சமாதானப் புறான்னு ஒரு இமேஜைக் க்ரியேட் செய்ய நினைக்கும் சில ‘விவரமான’ பதிவர்கள், இந்த ரெண்டு சண்டைக்கோழிகள் ப்ளாக்குலயும் போயி, ‘இதெல்லாம் வாணாம் ராசா; இணையதளமே உங்களை நம்பித்தான் ஓடிக்கிட்டு இருக்கு.. ஸோ, கூல் டௌன்’ அப்புடீன்னு தங்களுக்கு விளம்பரம் தேடவும் ஆரம்பிச்சாங்க. இதுனால, அவங்களோட ஃபாலோயர் கௌண்ட்டுல ஒண்ணு ரெண்டு அதிகமாச்சு. அம்புட்டுதான். சண்டை ஆகமொத்தம் முடியல.

இந்தச் சண்டைல இன்னொரு வகையும் உண்டு.  வேணும்னே, அதுநாள்வரைக்கும் தன்னை நண்பர்ன்னு நினைச்சிக்கினு இருக்குற யாராவது ஒரு பிளாக்கர் பத்தி, அவரை ஓட்டி, ஒரு பதிவை எழுதிபுட்டு, கடைசில 'டிஸ்கி : இதில் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பூதங்களே ரெஃபர் செய்யப்படுகிறார்கள். வேறு யாரையும் - அதிலும் எனோட நண்பரைக் கண்டிப்பா காமெடி செய்யவில்லை' அப்புடீன்னே போட்டு விடுறது. இதுனால, ஆல்ரெடி ரெண்டு பேருக்கும் இருக்குற நட்பு போயி, இருந்தாலும் பப்ளிக்கா திட்டிக்க முடியாதுன்றதுனால , வெளில நண்பன் மாதிரி வேஷம் போட்டுட்டு, உள்ளுக்குள்ள அந்தாளைப் புடிச்சி திட்டும் வேலை ஆரம்பமாகுது. இந்த மாதிரி வில்லன் வேலையும் அடிக்கடி நடக்கும்.

இதுக்கு அடுத்த லெவல்?..................இருக்கு.

இப்படிப் ‘பிரபல’ பதிவர் ஆகிற மனிதர்கள் மனசுல ஒரு ஈகோ டெவலப் ஆக ஆரம்பிச்சது. ‘எனக்குத்தான் ஃபாலோயர் ஜாஸ்தி.. அதுனால, நான் ஒரு அதிகார மையம். மக்களை எனது பதிவுகள் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது’ அப்புடீன்னு நினைக்க ஆரம்பிச்சாங்க. அது, அவர்களின் பதிவுகள்லயும் தெரியும். இது ஒண்ணு.  இன்னொரு டைப் என்னன்னா, ‘நான் இலக்கியத்தரமா பதிவு எழுதுறேன். ஆக நான் இலக்கியவாதி’ அப்புடீன்னு நினைக்கிற ஒரு சாராரும் உண்டு. இது தவிர, சினிமா பதிவர் (மொக்கையா எழுதுற கருந்தேள், கொழந்த, ஒரு காலத்துல (படு)மொக்கையா எழுதிக்கினு இருந்த ஹாலிவுட் பாலா ஆகியவர்கள் ஒரு உதாரணம்). அப்புறம் சமூக பதிவர்கள் (இவர்கள், சமூகத்தைத் திருத்துற பதிவு எழுதுவாங்களாம்), அப்புறம் பெண் பதிவர்கள் (இங்க போயி மாட்டினீங்க... அம்பேல்), அப்பால கவிஞர்கள் (செத்தோம் சாமி), கதை எழுதும் பதிவர்கள், ஜோதிடர்கள்.... சுருக்கமா சொல்லப்போனா, உலகில் எத்தனை விதமான வேலைகள் உள்ளனவோ, அது எல்லாத்த பத்தியும் எழுதும் பதிவர்கள் இங்க உண்டு.  இந்த மாதிரி வகை வகையா பதிவுகள் பிரிய ஆரம்பிச்சது. இது எதுலயும் சேராம, CCP பதிவர்ன்னு(Cut - Copy - Paste) ஒரு புது வகையும் இந்தக் காலகட்டத்துல டெவலப் ஆக ஆரம்பிச்சது. அதாவது, பத்திரிக்கைகள்ல வர்ர ஆர்டிக்கிள்ஸை காப்பி பண்ணி, ப்ளாக்ல பேஸ்ட் பண்ணும் பதிவர்கள். 

இதுக்கப்புறம், தமிழ்ப் பதிவுலகம் எப்புடி டெவலப் ஆச்சின்னா, ஓட்டு போடுறதுன்னு ஒரு புது விஷயம் பாப்புலர் ஆக ஆரம்பிச்சது. அதாவது, திரட்டிகள். சில இணைய தளங்கள், பல தமிழ்ப் பதிவுகளையும் திரட்ட ஆரம்பிச்சது. திரட்டுனதோட சும்மா உட்டாங்களா? ஒவ்வொரு சைட்டும், ஒரு வோட்டுப்பட்டையை டெவலப் பண்ணாங்க. அதை நம்ம ப்ளாக்ஸ்ல வெச்சிகிட்டா, படிக்கும் நண்பர்கள் ஓட்டுப் போடலாம். அதுல பாப்புலரா அதிக ஓட்டு வாங்கும் பதிவு, தள முகப்புல ஒரு அரைமணி நேரம் எக்ஸ்ட்ராவா தெரியும். இது எந்த மாதிரி எஃபக்டைக் கிளப்பிச்சுன்னா, ஓட்டு சிங்கிள் டிஜிட்டா? அப்படீன்னா அது நல்ல பதிவே இல்லைன்னு இந்தப் பிரபல பதிவர்களே நினைக்க ஆரம்பிச்சதுல போயி உட்டது. இப்படியொரு விஷயம் தங்களோட ஈகோவைப் பாதிக்குறதைப் பார்த்த பிரபல பதிவர்கள், தங்களுக்குள்ளயே ஒரு அக்ரிமெண்ட் போட்டுகிட்டாங்க. ‘எனக்கு நீ ஓட்டுப்போடு; உனக்கு நான் ஓட்டுப்போடுவேன்.. அப்ப ரெண்டு பதிவும் பாப்புலர் ஆகும்’ அப்புடீங்குற ஒப்பந்தம். இதுனால,  பல பதிவுகளை கவனிச்சீங்கன்னா, ஒரே செட் மக்கள் தான் ஓட்டுப்போட்டுருப்பாங்க. இல்லைன்னா, பல போலி ஐடிக்களை உருவாக்கி, நாமளே நமக்கு ஓட்டுப்போட்டுக்குற மேட்டரும் பெருமளவுல நடக்க ஆரம்பிச்சது. 

இந்த நிலைக்கு அப்புறம், தமிழ்ப் பதிவுலகம் இப்ப எந்த ஸ்டேஜ்ல இருக்குன்னா, முதல்ல இருந்து சொன்ன அத்தனை மேட்டரும் கலந்துகட்டி, ஒரு குழப்பமான, கலங்கலான நிலைலதான் இருக்கு.

இதுல, சில பொதுநல வெப்சைட்டுகள் வேற. அதுல என்ன நடக்குதுன்னா, 'ஊருக்கு  நீதி சொல்வேன்' அப்புடீன்னு பாரா பாராவா (பா. ராகவன் இல்ல) , பக்கம் பக்கமா எழுதித் தள்ளுற கும்பல் ஒண்ணு இருக்கு. இந்தக் கும்பல், எப்பவுமே எல்லாரைப் பத்தியும் மெரட்டுற தொனில தான் எழுதுவாங்களாம். ஏன்னா, இவங்களோட கொள்கைகளும், தாலிபான்களின் கொள்கைகளும் ஒண்ணாம் (அப்புடீன்னு எங்கூரு பொட்டிக்கடையாண்ட பேசிக்கினாங்க) .

இப்பதான் இந்த புது ப்ளாக் ஆரம்பிச்ச காரணம் வருது. 

இதையெல்லாம், தமிழ்ப் பதிவுலகின் இளைய ப்ளாக்கர்ஸான நாங்க கவனிச்சோம். எங்களுக்கெல்லாம் தனி ப்ளாக் உண்டு.  அதுல நாங்களும் ஃபாலோயர் விட்ஜெட் வெச்சித்தான் இருக்கோம். (இதுக்கான உண்மையான காரணம், மொக்கை காப்பி பேஸ்ட் வெப்சைட்டுக்கெல்லாம் பாலோயர் விட்ஜட் இருக்கும்போது, நம்ம ப்ளாகுக்கு ஏன் இருக்கக்கூடாது?)  ஹிட் கௌண்ட்டும் உண்டு. ஆனாலும், கூட்டு முயற்சியா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சி, நம்மைச் சுத்தி நடக்குற பல விஷயங்கள்ல நம்ம ஒரிஜினல் கருத்தை சொல்லலாமேன்னு தோணிச்சி. இந்தப் புது ப்ளாக்ல, மேலே சொன்ன (பழைய ப்ளாக்கர்களின்) எந்தப் பதிவுலக பாலிடிக்ஸும் இடம்பெறாது.

சுருக்கமா - தமிழ்ப் பதிவுலகை deconstruct பண்ணும் முயற்சியே இந்தப் புதிய ப்ளாக். இதுல யாரும் முக்கியம் இல்லை. எல்லோரின் பதிவுகளும் வரும். பல விஷயங்களும் பேசப்படும். முக்கியமா, unbiased கருத்துகள் வெளிவரும். 


நெறைய நண்பர்களுக்கு எழுதனும்னு ஆச இருக்கும். ஆனா அதுக்காக ப்ளாக் ஒண்ண தொறந்து, ஒரு template design புடிச்சு, பல விட்ஜெட்கள் சேர்த்து, எல்லாம் பண்றதுக்கு நேரம் இருக்காது இல்ல சோம்பேறித்தனம்படுவாங்க. அவுங்கெல்லாம் இதுல தாராளமா எழுதலாம்.மொபைல் கேமெராவுலயே எதாவது ஷார்ட் பிலிம் முயற்சி பண்ணியிருக்கீங்களா....அனுப்புங்க. எல்லாரும் சேர்ந்து ரசிப்போம். Video chatலயே "பதிவர்" சந்திப்பு நடந்துச்சா அத எழுதுவோம். அரசியல் கருத்து எதுனா தோணுதா அதையும் எழுதுவோம்.  ஆனா இங்க no followers nonsense - no templateதனங்கள் - no politics.அதுமட்டும் உறுதி.

நீங்க கேக்கலாம், உங்களுக்கு ஏன் இந்த அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறைன்னு. நீங்க என்ன இதெல்லாம் திருத்த வந்த உத்தம புத்திரர்களான்னு......அந்த மாதிரிலாம் காமெடியா யோசிக்கிற ஆளுங்களா இருக்க மாட்டீங்கன்னு நெனைக்கிறேன்.Facebookல நண்பர்களுக்குள்ள பல "கருத்து" பரிமாற்றங்கள் நடந்துகிட்டுதான் இருக்குன்னாலும், ப்ளாக்ல அதவுட நெறைய எழுதுவும் பகிரவும் முடியும். அவ்வளவே.

ரைட். அறிமுகப் பதிவைப் போட்டாச்சு. இனி அடிச்சி ஆட வேண்டியதுதான். வாங்க பாஸ் !


28 comments:

  1. அருமை.............நெறைய பேரின் பங்கேற்பு இருந்தா நல்லா இருக்கும்..........

    யார் யாருக்கு எழுதனும்னு தோணுதோ.அல்லாரும் இங்க வாங்க

    ReplyDelete
  2. இதில் பல சூப்பரான விட்ஜெட்கள் விரைவில் சேர்க்கப்படும்.......

    ReplyDelete
  3. பாராட்டுக்கள் தோழர்களே! உங்கள் முயற்சி வெற்றி பெற எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. நல்ல முயற்ச்சி....வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அருமையான முயற்சி நண்பரே. உங்களோடு கை சேர்த்து கலக்க நானும் ரெடி.( நாங்கள் ரெடி என்று சொல்ல முடியவில்லை. இப்பொழுதெல்லாம் தனி ஆளாக இருப்பது தான் நலம்)

    ReplyDelete
  6. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்க!

    ReplyDelete
  7. புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். எங்களைப்போல வாசர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. @Thomas Ruban...

    அன்பரே, இங்கு "வாசகர்" என்று யாருமில்லை. அனைவரும் நண்பர்களே..

    உங்களைப் போன்ற நன்பர்களும் எழுத வேண்டுமென்பதே எங்கள் அவா....

    ReplyDelete
  9. பதிவுலகின் நிலையை சரியா படம் பிடிச்சிருக்கீங்க...யாரோட கருத்துடனும் யாரும் 100% ஒத்து போக முடியாது....கருத்து வேறு பாடுகள் மென்மையாகவும் நாகரீகமாகவும் விமர்சிக்க பட்டால் பிரச்சினைகளுக்கு இடம் இல்லை...தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. பதிவுலகம் பற்றிய அருமையான ஹாஸ்யம் நிறைந்த அறிமுகக் கட்டுரை.

    ReplyDelete
  11. நல்ல முயற்சி சந்தேகமின்றி.சுய சொரிதல்கள் அதிகமாகிவிட்டது TR வெட்கப்படும் அளவுக்கு.
    @@@ நெறைய நண்பர்களுக்கு எழுதனும்னு ஆச இருக்கும். ஆனா அதுக்காக ப்ளாக் ஒண்ண தொறந்து,
    ஒரு template design புடிச்சு, பல விட்ஜெட்கள் சேர்த்து, எல்லாம் பண்றதுக்கு நேரம் இருக்காது இல்ல சோம்பேறித்தனம்படுவாங்க. அவுங்கெல்லாம் இதுல தாராளமா எழுதலாம்.@@@
    எப்படி சார்? அதுக்கான விளக்கம் இல்லையே?

    ReplyDelete
  12. Congrats!!!!!!!1111

    senthil, doha

    ReplyDelete
  13. அட்டகாசம் ... ஆட்டம் ஆரம்பம்..

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள்.....!!!

    ReplyDelete
  15. எல்லா நண்பர்களுக்கும் நன்றி..

    @basheer

    மேல சொல்லியிருக்குற மாதிரி, powerstarsrini.share@blogger.com க்கு என்ன எழுதனும்னு தோணுதோ, அத்த எழுதி அனுப்புங்க. நேர draftக்கு வந்திரும்....எது வேணாலும் எழுதலாம்.....

    ReplyDelete
  16. பட்டைய கிளப்புங்க தலைவரே!

    ReplyDelete
  17. கவிதைகள், கதைகளுக்கும் எடம் உண்டா இவ்விடம் :)))

    ReplyDelete
  18. நல்ல முயற்சி தல...

    ReplyDelete
  19. பதிவோட உயர் விளக்கு(உங்க பாஷைல)....
    //சினிமா பதிவர் (மொக்கையா எழுதுற கருந்தேள், கொழந்த, ஒரு காலத்துல (படு)மொக்கையா எழுதிக்கினு இருந்த ஹாலிவுட் பாலா ஆகியவர்கள் ஒரு உதாரணம்). அப்புறம் சமூக பதிவர்கள் (இவர்கள், சமூகத்தைத் திருத்துற பதிவு எழுதுவாங்களாம்)//

    ReplyDelete
  20. பெண்பதிவர்களா? நல்லவங்க நாங்கதான் :))))))) எல்லாம் ரைட்டு நீங்க இதுல எந்த கேட்டகிரின்னு சொல்லவே இல்லையே :)

    ReplyDelete
  21. aamaa.. இந்த மொக்கை கருந்தேள், ஹாலிவுட் பாலாவையெல்லாம் ஒழிக்கணும்.:))

    ReplyDelete
  22. Posted by கருந்தேள் கண்ணாயிரம் /// ங்கொய்யால :))

    ReplyDelete
  23. பவர் ஸ்டார்தான் ஹாலி பாலியா??!!!

    ReplyDelete
  24. முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
    பல பதிவுகள் இடம்பெற்று பகிர்வுகள் நடைபெறவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  25. @விஜி

    போலி பெண்ணியம் - பெரியாரியம் - communism -பக்தி பேசுற கும்பல்கள் உலகம் முழுவதும் அலையுறாங்க.இங்க ரொம்பவே இருக்கு.
    அவுங்கள குறித்து சொன்னது.

    மத்தபடி இங்க பதிவுதான் கணக்கே தவிர பதிவர்கள், பாலினம் கணக்கில்ல......

    @கண்ணா
    சார்..தலிவா...
    ஹாலி பாலிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல. He is just a silent spectator.இங்க ஹாலி பாலியும் பல பதிவர்களில் ஒருவர்.

    இததான் ஒடைக்கணும்ன்னு நெனச்சா.......................பதிவுதாங்க முக்கியம் - பதிவரா முக்கியம்.

    ReplyDelete
  26. முதல் பதிவே, தமிழ் பதிவுகளின் நாடி பிடித்து பார்த்த விட்டது. பலே தொடக்கம். கூட்டணி வெற்றிக்கு வாழ்த்துகள்.

    பி.கு. டெம்ப்ளேட் அட்டகாசம்.. எங்கிருந்து இப்படி கலக்கலாக பிடிக்கிறீர்கள் ;)

    ReplyDelete
  27. Good Job guys,
    I really like Guest post trend

    ReplyDelete
  28. basheer sir நான் தான் அந்த சோம்பேறி

    ReplyDelete