Pages

Wednesday, November 09, 2011

என் மூக்கின் நுனியில் கோபம் உட்கார்ந்திருந்ததால்

இன்று ஒரு கலகக் காரனாக என்னை
முன்னிலை படுத்த முயற்சித்தேன்

விலைமகளின் துக்கங்களை
பேசிய ஒருவனிடத்தில்
தொழில் நேர்மையை பேச
முயன்றது என் நாக்கு

ஒரு அரசியல்வாதியின் 
உண்ணாவிரதத்தை
வேடிக்கை பேசியவனிடம் 
இந்துக்கள் மட்டும் மற்றவரிடத்தில்
இணங்கி போவதா
மதநல்லிணக்கம் என்றேன்

சாதி ஒழிப்பு என்பது
ஒரே ஒரு சாதியை ஒழிப்பதா
கேட்டேன் பெரியார் சிலையிடம்


குடி குடியை கெடுக்கும்
என்று சொன்ன நண்பணிடம்
நான் சொன்னேன்
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

ஊழலை பற்றி பேச்செடுத்த
இன்னொருவனிடம்
வல்லவன் வாழ்வானென்றேன்

சாப்பிட என்ன வேண்டும் என்று 
கேட்ட சரவண பவன் சர்வரிடம்
நான் கேட்டது ஆட்டுக்கால் பாயா

இருந்தாலும் காலையில்
என் வடையை
கவ்வி சென்றிருக்ககூடாது
அந்த எலி

--
அன்புடன்,
இரா|Ram

4 comments:

  1. நல்ல கவிதை. நல்ல எதிர் கருத்து. எனக்குப் பிடித்ததுங்ணோவ் :-)

    ReplyDelete
  2. நன்றி ராஜேஷ் :))))

    ReplyDelete