Pages

Thursday, December 01, 2011

குஞ்சரமல்லர்கள் .............

நண்பர்களே......குஞ்சு என்றதும் உங்கள் மனதுக்குள் சும்மா டாங்குனு... மணி சத்தம் ஒலித்தால் அப்படியே reverse  கியர்ல ஓடி விடுங்கள் , இது ஒரு scientific பதிவு ( அப்பா இனிமே என்ன வேணும்னாலும் எழுதலாம் ). குஞ்சை பற்றி உங்கள் மனதுக்குள் இருக்கும் கருத்தை மாற்றப்போகிற பதிவு இது ....
குஞ்சு என்றால் என்ன ?
ஒரு உயிரியின் விந்தை செலுத்த பயன்படும் குழாய் போன்ற உறுப்பு .அவ்வளவே. இதுக்குதான் இவ்வளவு ஆர்பாட்டம்.அல்லாட்டம்.
அப்படி பார்த்தால் பூச்சி முதல் நுண்ணுயிரி வரை எல்லாத்துக்கும் குஞ்சு இருக்கிறது .
Bacteria கேள்வி  பட்டு இருப்பீர்கள்  , அந்த bacteria வுக்கும் குஞ்சு உண்டு, அதனை செக்ஸ் pili (பிலி அல்ல பைலை )   என்று கூறுவார்கள் . இதோ bacteriaவின் மேட்டர் காட்சி

 Bacteria வை விட சிறியதான வைரஸ்க்கும்  குஞ்சு உண்டு , இதோ வைரஸ் அதன் குஞ்சு போன்ற குழாயின் மூலம் தனது வித்தினை செலுத்தும் காட்சி
 

Barnacle என்று நண்டு போன்ற ஒரு உயிரினத்திற்கு பலூன் குஞ்சு ,அதன் உடம்பை விட 50  மடங்கு  பெரிய பலூனை ஊதி தனது வித்தையை  காட்டும்  
நம்ம மூட்டை பூச்சி இருக்கே அதுக்கு கத்தி குஞ்சு , பொம்பள  பூச்சிக்கு  பெண்ணுறுப்பு கிடையாது , அதனால் அந்த இனத்தின்  ஆண்  குஞ்சு கூறாக இருக்கும் , அதுவாக ஓட்டை போட்டு காரியத்தை கச்சிதமாக முடிக்கும், ஏதாவது பொம்பள பூச்சி வந்தா ஒரே சதக் தான்  .

மீன் குஞ்சு கேள்விபட்டு இருப்பீர்கள், ஏன்..பாத்து கூட இருப்பீர்கள்............. ஆனால் ஒரு மீனே குஞ்சாக மாறிய சோக  கதையை கேளுங்கள். Anglerfish என்று  கடலுக்கு அடியில்  ஒரு வகை மீன் உண்டு (finding  nemo வில் வருமே ) , கடல் அடி கும்மிருட்டு நிறைந்த பகுதி , அதில் எங்கே துணையை கண்டு பிடித்து கில்மாடிக்ஸ்  பண்ணுவது ?  அதனால் ஆண் மீன் பெண் மீனை கண்டவுடன் அதன் பெண்ணுறுப்பில் போய் ஒட்டிக்கொள்ளும், பின்னர் அதன் உடல் கொஞ்ச கொஞ்சமாக சுருங்கி கடைசியில் குஞ்சு தான் மிஞ்சும்


மேட்டருக்காக உடம்பை விட்ட மீனின் கதை சோகமானது என்றால் , மேட்டருக்காக குஞ்சை விட்ட தேனியின் கதையை என்னவென்பது ? தேன் கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ தான் இருக்கும் , அதனுடன்  கூடுவதற்கு chance கிடைத்த ஆண் தேனீ மேட்டர் முடிந்த பின் மற்ற தேனிக்கள் கூடாமல் இருப்பதற்காக அதன் குஞ்சை அங்கேயே விட்டு விட்டு வந்து விடும் .

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் , ஆனால் காக்கைக்கு குஞ்சே கிடையாது என்பது தான் நிதர்சனமான உண்மை , பின்னே எப்படிஅது! சாத்தியம்? காக்கைக்கு மலம் ஜலம் வித்து எல்லாம் cloaca என்ற பொது புழையின் மூலமே நிகழும்(காக்கையின் மேட்டர் cloacal kiss என்று சொல்லுவார்கள் ) . காக்கைக்கு மட்டும் அல்ல , எல்லா பறவைகளுக்கும் குஞ்சு கிடையாது (அப்புடி எலாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது , அன்ன பறவை, சில வகை வாத்து , நெருப்பு  கோழி போன்றவைகளுக்கு குஞ்சு போன்ற உறுப்பு உண்டு)  
Argentine lake duck ன் குஞ்சு

Argonaut என்ற octopus க்கு பாயும் குஞ்சு , அதன் கைகளில் ஒன்றில்  அது வித்து சேகரித்து வைத்திருக்கும், கலவியின்பொது அந்த குஞ்சை துண்டித்து தன போக்கில் பெண்ணுறுப்பில்  பாய விட்டு  விடும் .

யானைக்கு எப்படி துமபிக்கையோ அது போல  டால்பின்க்கு அதன் குஞ்சு, வேணும் பொது சுழட்டவும் , வேண்டாத பொது பதுக்கியும் வைத்திருக்கும் . சில பொருட்களை கையால் துழாவுவது போல , குஞ்சை கொண்டு துழாவுமாம் .
குஞ்சு விஷயத்தில் கழுதை புலிக்கு கடவுள் 50% இட ஒதுக்கீடு அளித்து இருக்கிறான் . அந்த இனத்தில் பெண்களுக்கும் குஞ்சு போன்ற உறுப்பு உண்டு (clitoris  இன்  உருமாற்றம் )
  
சில வகை நத்தைகளுக்கு குஞ்சும் உண்டு( அதுவும் ரெட்டை குஞ்சு,ரெண்டும் கத்தி குஞ்சு ) , பெண்ணுறுப்பும் உண்டு . சிலர் மேட்டரை சண்டை போல செய்வார்கள் , ஆனால் இவற்றின் மேட்டரே சண்டை தான் .  ஜெயித்தவன் தான் ஆம்பளை , தோத்தவன் ( இப்போ வள் ) பொம்பளை,அதன் உடம்பில் ஆம்பளை வித்தை செலுத்தி விட்டு சென்று விடும் .

நாய், வால்ரஸ் , ரகூன் போன்ற மிருகங்களுக்கு எலும்பு குஞ்சு , அதன் குஞ்சினுள் எலும்பு இருக்கும் அதுவும்  வால்ரஸ் குஞ்சு எலும்பு ரெண்டரை அடி வரை கூட இருக்கும்.1200 ஆண்டுகளுக்கு முந்திய வால்ரஸ் குஞ்சின் எலும்பு  பாருங்கள்.....



பூனை, சிங்கம் போன்றவற்றின் குஞ்சில் முட்கள் இருக்கும், கலவி முடிந்த பின் அந்த முட்கள் பெண்ணுறுப்பை பதம்( ?) பாத்து விடும். அதனால் கலவி முடிந்த பின் சண்டை தான் .

குஞ்சிலேயே சிறப்பு வாய்ந்த பெரிய  குஞ்சு குதிரை குஞ்சு என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் , ஆனால் மாட்டு குஞ்சு அதை விடை பெரியது , அது S போல அதன் உடம்பினுள் மறைத்து வைத்திருக்கும், கலவியின் போதும் பெண்ணுறுப்பில் இருப்பதால் அதை நாம் காண முடியாது. பாவம் இதனால் மாட்டின் திறம வெளியே தெரியாம போயிடுச்சு.
பன்னி குஞ்சு சுழல் குஞ்சு , பன்னியின் தனி திறம என்னவென்றால் அரை லிட்டர் அசால்ட்டாக வெளியிடும் (நல்ல வேலை நமக்கு அப்படி இல்ல, இல்லாட்டி டெய்லி bed  துவைக்கணும் )

ஆட்டு குஞ்சு ஆடும் குஞ்சு , ஆட்டு குஞ்ஜின் முடிவில் சிறிய ரப்பர் tube போன்ற அமைப்பு இருக்கும் , அதன் மூலம் வித்தை spray செய்யும்.

பாம்புக்கும் சில வகை ஓணான்களுக்கும் ரெட்டை குஞ்சு .

யானைக்கு கொஞ்சம் விததியாசமான அமைப்பு ,அதன் விரைகள் வெளியே தொங்காமல் உள்ளயே இருக்கும்.ஒரு முறை முது மலையில் யானைகளுக்கு மருத்துவம் பார்க்க சென்ற பொது , ஒரு யானை மூடில் இருந்தது , அது தெரியாத என் நண்பன் ஒருவன்  யானையின் வாலை பாருடா அதன் கால் சைசுக்கு இருக்கு என்றான் , நான் சொன்னேன் அது வாலும் இல்ல காலும் இல்ல அது யானையோடது டா  என்றேன். யானைக்கு அவ்ளோ பெருசு.  


Whiptail Lizard என்று ஒரு பல்லி உள்ளது , அதற்க்கு குஞ்சே லேது , எல்லேருமே பெண்கள் தான் , ஆனால் மேட்டர் உண்டு(லெஸ்பியன் டைப்).
முடிவில் ஒரு பஞ்ச் :   மேட்டர் என்பது எவ்வாறு இருக்கணும் என்றால்
As frequent as Dolphin
As fast as sparrow
As longest as a dog

- Dr. Dolittle 

15 comments:

  1. Dr.Do little .............

    செமத்தியான பதிவு...............அதவுட முக்கியம் படிக்க அசூயையா இல்லாம, சுவாரசியமா இருந்திச்சு........ கன்டினியு.....

    -------------

    உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறதுன்னு டெம்ப்ளேட் கமென்ட் போடுற ஆசமிங்க..இதுக்கு என்ன கமென்ட் போடுவாங்கன்னு பார்க்க ஒரே அவா ....

    ReplyDelete
  2. சத்தியமா சமீப காலத்துல எனக்குப் புடிச்ச பதிவு இதுதான். அருமையான அறிவியல் செய்திகள் வித் நகைச்சுவை. இன்னும் நிறைய பதிவுகள் அனுப்புங்க.... சூப்பரப்பு !!

    ReplyDelete
  3. ///உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறதுன்னு டெம்ப்ளேட் கமென்ட் போடுற ஆசமிங்க..இதுக்கு என்ன கமென்ட் போடுவாங்கன்னு பார்க்க ஒரே அவா ....///


    யோவ் முதல்ல கொழந்த ன்ற உம்ம முதலில் மாற்றும் அய்யா :) :)

    ReplyDelete
  4. நண்பர்கள் சிலர் வைரஸின் இனப்பெருக்கம் சிக்கல் நிறைந்தது அதை இவ்வாறு விளக்குவது சரி அல்ல என்று feel பண்ணியிருந்தார்கள் , அவர்கள் கருத்து சரியே வைரஸ் என்பது ஒரு முழுமையான உயிரினம் அல்ல தான் ,ஆனால் நான் வைரஸுக்கும் குஞ்சு போன்ற உறுப்பு (குஞ்சு என்பதற்கு நான் கொடுத்திருக்கும் hypothesis க்கு பொருந்தி வருகிறது என்பதால் ) உண்டு என்று கூறியிருந்தேன். அதற்கு மேல் அதை விளக்கி கொண்டு இருந்தால் நீங்கள் சினிமா செய்திகள் படிக்க போய் விடுவீர்கள் .
    some viruses have evolved mechanisms that inject their genome into the bacterial cell across the cell wall - by Dimmock, Chapter 15, Mechanisms in virus latentcy, pp.243. injecting the genome - அதை தானே குஞ்சும் செய்கிறது :).
    சோ நம்ம பதிவை ஜாலியா படிங்க , முடிந்த வரை ஸ்டாண்டர்ட் international books refer பண்ணி தான் எழுதுறேன்(இவனும் I.S.Dயாமாம்), மாற்று கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் சொல்லுங்க , அப்ப தான் அறிவியல் வளரும் ,பதிவும் நல்லா அமையும் . உங்கள் சிறு வித்தியாசமான கருத்தும் புது கண்டு பிடிப்புக்கு வழி கோலிடலாம்.( இப்ப நான் வைரஸுக்கும் குஞ்சு இருக்கு என்று கண்டுபிடித்ததை போல).

    ReplyDelete
  5. @கருந்தேள் sir மற்றும் குழந்தை : thanks a lot

    ReplyDelete
  6. நான் பொதுவாக அறிவியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை படிப்பாதில்லை! சுஜாதா எழுதிய சில கட்டுரைகள் படித்ததோடு சரி! ஆனால் சுஜாதாவிற்கு பிறகு எனக்கு பிடித்த ஒரே அறிவியல் கட்டுரை இதுதான்! பின்னிட்டீங்க தலைவா! அடுத்து எதாவது கட்டுரை இதைப் போல எழுதினால் மறக்காமல் லிங்க் தரவும்! நன்றி!

    ReplyDelete
  7. நல்ல சுவராசியமான தகவல்கள்... கொஞ்சமும் அப்படி இப்படி இல்லாமல் நன்றாக வந்திருக்கு...

    ReplyDelete
  8. ரொம்ப நல்லாருக்கு. இந்த மாதிரி விசயங்களை அழகா சொல்றதே பெரிய விஷயம்தான்! keep the work!

    ReplyDelete
  9. ராம்சாமி சார் and எஸ்.கே சார் ரொம்ப நன்றி உங்கள் "சொல்ல மறந்தவை..." நல்ல முயற்சி சீக்கிரம் ஆரம்பியுங்கள் , நம்ம மக்களுக்கு உபயோகமா இருக்கும்.

    ReplyDelete
  10. யோவ் இன்னும் நீங்க திருந்தலையா
    மேலே லத்திகா கீழே டாக்டர் டூலிட்டில்???

    ReplyDelete
  11. அதுவா பாஸ் , நாங்க பவர் ஸ்டார் நடிச்ச லத்திகா வோட வெறித்தனமான ரசிகர்கள் , அதான் இப்புடி ...

    ReplyDelete
  12. Dr.குஞ்சுமணி...-:)

    நல்லா விலாவாரியாக விவரித்துள்ளீர்கள்...

    ReplyDelete