Showing posts with label Dr. Dolittle. Show all posts
Showing posts with label Dr. Dolittle. Show all posts

                           

மேட்டர் நமக்கு ஒரு ஜாலியான   மேட்டர் , ஆனா மிருகங்களுக்கு மேட்டர் is a luxurious  மேட்டர்  . நீங்க எளிதாக கதவை  சாத்திட்டு , லைட்ட நிறுத்திட்டு ( இல்லநிறுத்தாம ) ஜாலியா கில்மேடிக்ஸ் பண்ணுவீங்க , ஆனா மிருகங்களுக்கு அதுஒரு adventure மாதிரி . நினைச்சு பாருங்க போர்களத்துல  எதிரிகள் சூழ்ந்த இடத்துக்கு நடுவே உங்கள மேட்டர் பண்ண சொன்னா உங்களுக்கு எப்படி   இருக்கும்   ? அப்புடி ஒரு உறுப்பு இருக்குறதே உங்களுக்கு மறந்து போய்விடாது  ?
 
ஆனா தடைகளைத் தாண்டி ,வெற்றி கொடி நாட்டினா  (!) தானே ஒரு பெருமிதம்?
அப்புடி என்ன டாக்டர் தடைகள் இருக்கு ?ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, பல தடைகள்.
முதல் தடை :  

வேற யாரும் இல்ல , இணையிடம் இருந்து வரும் தடை சூப்பர் figure ,கிட்ட போய் தொட்டா , கத்தியால் குத்திடுவா ,... அவளோட நீங்க கூடுவீங்களா ?ஆனா தன்னோட சந்ததி நல்லா இருக்கணும்னு , உயிரை "முடி" யா நினைச்சு ,கூடுற தியாகிகளை என்னனு சொல்றது ?

 

படிக்க … தயிர் சிலுப்பி மற்றும் சிலந்தி மேட்டர்
அதுவும் சில வகை சிலந்திகளில் உருவத்தில்  பெரிதாக இருக்கும் பெண் சிலந்தி , தனது வலையில் எது வந்தாலும் சரி ருசித்து சாப்பிட்டு விடும் , அதுவும் உருவத்தில் சிறிய ஆண் சிலந்தி வந்தாலும் அதுக்கு உடல் பசியை விட வயிற்று பசி தான் பெரிதாகத்  தெரியும் , ஆனா ஆண்களுக்கு அப்புடி இல்லை , எப்படியாவது ( செத்தாலும் ) மேட்டர் பண்ணிவிட வேண்டும் என்ற துடிப்பு



அதுனால " முனியம்மா நான் தான் கபாலி வந்துருக்கேன் " என்கிற ரீதியில் முதலில் பெண் சிலந்தி வலையை வெளியில் இருந்து லைட்டா ஆட்டி விடும் , சிலர் இன்னும் புத்திசாலி தனமாக கையோடு ஒரு இரையை கொண்டு போய் பெண்களுக்கு gift ஆ கொடுப்பாணுவ , ( அப்ப தானே பெண் சிலந்தியோட வாய் பிஸியா இருக்கும் , அந்த நேரத்துல பையனும் பிஸியா வேலைய காட்ட முடியும் ) ,( பாருங்க மக்களே பொண்ணுங்களுக்கு gift  குடுக்குற பழக்கம் எப்புடி ஆரம்பிசுருக்குனு )



இன்னும் சில அப்பாடக்கருங்க ( Crab  spider ) என்ன பண்ணுவானுங்கனா...  நம்ம spider  man மாதிரி கம் விட்டு பெண்கள கட்டி போட்டுடுவானுங்க , அப்புறம் ?
"போட்டுடுவானுங்க" . 
[எனக்கு ஒரு சந்தேகம் , spider man னுக்கு எப்புடி   கைலேர்ந்து கம் வருது ? பட்டக்ஸ்லேருந்து தானே வரணும்  , ஏன்னா சிலந்திக்கு பின்னாடி இருந்து தானே கம் வருது? - ஆனா சிலந்தி கம் ஒரு ஸ்பெஷல் ஆன வஸ்து , சில வகை கம்மூலமா குண்டு துளைக்காத உடையெல்லாம் செய்றாங்க தெரியுமா ?   ]

மயிலு தானே நமக்கு தெரிஞ்சு தோகைய ஆட்டி இணையை கவரும் , மயில் சிலந்தின்னு ஒரு வகை சிலந்தி தனது தோகையை ( தோகை மாதிரி உள்ள பட்டக்சை) ஆட்டி இணையை கவரும்
 



ஏற்கனவே சொன்ன மாதிரி புலி சிங்கத்துக்கு எல்லாம் முள் குஞ்சு ( குஞ்சரமல்லர்  1  )
அதனால மேட்டர் முடிஞ்சு வெளிய எடுக்கும் போது கீரிகிட்டு வரும் , அதுனால பெண் சிங்கம் ( கலைங்கரோட பெண் சிங்கம் இல்ல ) டென்ஷன்  ஆகி சண்டைக்கு வந்துடும்.
அடுத்த தடைகள்  , அத அடுத்த பதிவுல பாப்போம்.
                                                                                                                                 - Dr. Dolittle 


இவர் மேலும் கூறுகிறார் ...

5 கலந்துரையாடல்கள்


நண்பேன்டா

நான் பதிவு எழுதுவது என் நண்பர்களுக்கு கூட தெரியாது . என் நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ," மச்சி நம்ம சுப்ஜெக்ட் பத்தி ஒருத்தன் interesting ஆ (?) எழுதி இருக்கான் பாரேன் " ன்னு சொன்னேன் , படிச்சு பாத்துட்டு ,நல்லாருக்கு மச்சி(?), இத எழுதுனன்னு நீ தானே சொன்னான், சத்தியமா இல்ல மச்சி ன்னு சொன்னேன், அதுக்கு அவன் ," உன் சத்தியத்துல சாணிய கரைச்சு ஊத்து , உன்னோட slang தான் இந்த கட்டுரைல அப்பிடியே தெரியுதேடா , ஆனா என்னைக்கு உன்னோட அண்ணன் கைல சிக்குரியோ அன்னைக்கு இருக்குடா உனக்கு ஆப்பு', அப்புடின்னு சொன்னான் { எங்க அண்ணன் ஒரு பிரபல blogger (அப்பிடினு அவனே சொல்லிக்குவான் )}. அதுனால நானும் இனிமே டீசன்ட்டா பதிவு எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் ( அது எல்லாம் உன்னால முடியாது நாயே ) .

இந்திய blog வரலாற்றிலேயே முதல் முறையாக ,மெகா பவர் ஸ்டார் Dr .Dolittle (இது வேறயா ?) மேட்டர் பத்தி எழுதாத Decent பதிவு உங்கள் குலேபகாவலியில் மட்டும் , இது durex வழங்கும் விளம்பரதாரர் நிகழ்ச்சி ( ஆமா டாக்டர் அனிமல்சுக்கு காண்டம் இருக்கா - அது குஞ்சரமல்லர்கள் பார்ட் 4 ல வரும் , இது Decent பதிவு ஆமா சொல்லிபுட்டேன் ) .

__________________________________________________________________________________


விலங்குகளின் நட்பு மற்றும் தாய் பாசம் போன்றவற்றின் முன்பு மனிதர்களாகிய நாம் பிச்சை வாங்க வேண்டும் , இவற்றை பற்றி ஆயிரம் பதிவுகள் போடலாம் .முதலில் நடுப்புகாக ..

.

நண்பேன்டா 1 :

கோபியும் இறாலும்

கோபி என்றவுடன் நம்ம ஊர் கோபியை நினைகாதீர்கள் , இது ஒரு வகை மீன் இனம் watchmen or prawn gobies என்று இவற்றுல் ஒரு வகை மீன் இனம் உண்டு , பையனுக்கு பார்வைத்திறன் அதிகம் , ஆனால் கைவசம் ஒரு வித்தையும் இல்லை, சொந்தமாக ஒரு குடிசை கூட கிடையாது , எதிரி யாரவது வந்தால் எதிர்த்து சண்டை போட தெரியாது , மொத்தத்தில் இவன் ஒரு care of platform . pistol shrimp என்று ஒரு வகை இறால் , இவன் ஒரு கடும் உழைப்பாளி , நல்ல body , ஆனால் பாவம் இவனுக்கு பகலிலேயே பசு மாடு தெரியாது , வடிவேலுவை பார்த்தால்"தம்பி நீங்க MGR மாதிரி தக தக ன்னு மின்னுரீங்கன்னு " சொல்லற டைப்.

நம்ம சங்க கால இரட்டை புலவர்களை பற்றி இவன்கள் கேள்விபட்டிருபார்கள் போல , இவன்களும் அவர்களைப்போல ஒரு காவிய நடப்புக்கு எடுதுக்காட்டகிவிட்டார்கள் , இந்த இறால் பையன் ,கோபிக்கும் இவனுக்கும் சேர்த்து ஒரு அழகான + பாதுகாப்பான பதுங்கு குழியை அமைத்து குடுப்பான் , இந்த கோபி பையன் வாசலில் watchman போல தேவுடு காத்து இருப்பான் .இவன்கள் தங்களுக்குலேயே தொடுதல் மூலம் ஒரு பாஷையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ,

யாரவது எதிரி வந்தால் இந்த கோபி பையன் தனது துடுப்பு மூலம் இறால் பையனின் உணர்கொம்புகளில் தட்டி " தம்பி உஷாரு " என்று அலெர்ட் செய்வான் . 

பின்னர் இருவரும் குழிக்குள் சென்று பதுங்கி கொள்வார்கள் .இறால் இரை தேடுகிறேன் பேர்வழி என்று வழி தவறி விட்டால் கூட , நம்ம கோபி போய் பத்திரமா வீட்டுக்கு கூடியாந்துடுவான்


.

ஆனால் வாட்ச்மனுக்கு எப்பவுமே ஆபத்து அதிகம் , அதுனால அந்த கோபி அதுக்கு என்ன செஞ்சான் தெரியுமா ?

Evalution மூலமா ஒரு peculiar ஆன உடலமைப்ப உருவாக்கக்கிட்டான். மேல உள்ள படத்துல இருக்குற கோபிய நல்லா பாத்தீங்கன்னா அவன் கண்ண ஒரு கொடு மூலமா மறைச்சுருக்குறது தெரியும் , முதுகு மேல உள்ள துடுப்புல ஒரு பொய் கண்ண வசுருக்குறதும் தெரியும் .

எதிரிங்க எப்பவுமே தலைய தான் அடிக்கும் ,தூரத்துல இருந்து பாக்குற எதிரிங்களுக்கு இந்த false eye spot அ பாத்து தலைன்னு நினச்சு துடுப்ப அடிக்கும் , அதுக்குள்ள நம்ம கோபி உடனே சுதாரிச்சு (தெரிச்சு) உள்ள ஓடிடுவான் .

இந்த டெக்னிக்க பல பயலுக follow பண்றானுவ.

இவனுங்க எல்லாம் butterfly மீன்கள் . இவன் படக்சுல பொய் கண்ண வச்சுருக்கான், உண்மையான கண்ண கொடு போட்டு மறைச்சு வச்சுருக்கான். 



இவன் catterpillar (கூட்டுப்புழு) இது இவனோட உண்மையான கண்ணு கிடையாது படக்சுல இருக்குற பொய் கண்ணு .

இது பரவா இல்ல , இந்த பட்டாம் பூச்சி பய இருக்கானே இவன் படக்சுல ஒரு பொய் தலையயே வச்சு இருக்கான் பாருங்க.

இவன் கூட பரவாஇல்ல இந்த moth பையன் ஆந்தை கண்ணு மாதிரி ரெக்கைய வச்சு ஆக்டிங் குடுக்குறத பாருங்க
 ...

எல்லாம் ஓகே டாக்டர் , அது எப்புடி அதுக்கு படக்சுல கண்ணு வந்துச்சு ?(படக்சுல ஆய் தானே வரணும் )

ஞாயம் தான்…ok, உங்க பக்கத்துக்கு வீட்ல ஒரு அழகான பாப்பா இருக்கு , அத பாக்கலாமுன்னு காம்பவுண்டு சுவர எட்டி பாக்குறீங்க , ஆனா சுவர் உயரமா இருக்கு , இருந்தாலும் விடா முயற்சியோடு வருஷக்கணக்காக எட்டிப்பாக்குறீங்க , உங்களுக்கபுறம் உங்க பையன்( அவனுமா ?? ), அவன் பேரன்னு பரம்பரபரம்பரயா எட்டி பாக்குறீங்க ( த்தூ ... இதெல்லாம் ஒரு பொழப்பு ) . ஒரு கட்டத்துல evalution மூலம் உங்க கழுத்து கொஞ்ச கொஞ்சமா வளந்து சுவர விட நீளமாயிடும்(!).


ய்ய்ய்.... இவள பாக்கவா பரம்பரபரம்பரயா காத்து இருந்தோம்

அது போல தான் , இந்த பெடக்சுல கண்ணு matter( இன்னும் நிறைய அதிசயங்கள் இது போல இருக்கு , வேறு ஒரு தொடர் மூலம் ( எத்தன ? ) அதை பற்றி அப்புறம் பார்ப்போம் ) ஒரு உயிரினத்தின் உயிரை/சந்ததியை எதிரியிடம் இருந்து காத்து கொள்ள or அதன் சந்ததி தழைத்தோங்க evalution மூலம் அது தனது உருவத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது .

ஒரு "முடி"யும் புரியல டாக்டர்,

Freeஆ விடுங்க ,

உங்களுக்கு mutation மூலமாவோ அல்லது வேறு எதன் மூலமாவோ கைல கண்ணு ( gun இல்ல )வருதுன்னு வச்சுக்குவோம் , அது உங்க இனத்தோட survival லுக்கு துணையா இருந்துச்சுனா அதை இயற்கை சந்ததி சந்ததி யா வர அனுமதிக்கும் ( அது உங்களுக்கு சற்றே தீங்கு விளைவித்தாலும் ) . எடுத்துக்காட்டு - sickle cell anemia in African population (இது ஒரு பெரிய கதை , நல்லா இருக்காது , அதுனால விட்ருவோம் ).

கைல கண்ணு இருந்தா எப்புடி டாக்டர் நன்மை பயக்கும் ,

பயக்கும் .... கைல கண்ணு இருந்தா …

1.தலைய திருப்பாம பரீட்சை ஹால்ல கைய நீட்டி காப்பி அடிக்கலாம்

2.முதுகு அரிச்சா கையா நீட்டி ஏன் அரிக்குதுன்னு பாத்துக்கலாம்

3.போர்க்களத்துல பதுங்கு குழியில எதிரியின் வருகையை கைய நீட்டி பாத்துக்கலாம்

4.சந்துல காசு விழுந்தா கைய நீட்டி கண்டுபிடிக்கலாம்

5.(நீங்க ரொம்ப மோசமா யோசிச்சீங்களே அத கூட செய்யலாம், ஆனா நான் நல்ல பையன்)

இன்னும் புரியலையா ? அப்ப போடு வேற ஒரு பதிவை (நண்பேன்டாவுல ஆரம்பிச்சு evalutionla போய் முடிஞ்சிருச்சு , நான் இப்பிடி தான் எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ கொண்டு போய்டுவேன் , இருந்தாலும் பொறுத்துகிட்டு படிங்க).



போதும் இத்தோட நிறுத்திக்க…

அடுத்த பதிவில் வேறு ஒரு நண்பேன்டா வோடு சந்திப்போம் 



evolution in நண்பேன்டா?

true natpu 

இவர் மேலும் கூறுகிறார் ...

12 கலந்துரையாடல்கள்