சென்ற பதிவில் மேட்டர்க்காக குஞ்சை விட்ட தேனியை பற்றி கூறி இருந்தேன் , ஆனால் அவற்றை விட பாவப்பட்ட ஜென்மம் ஒன்று உள்ளது ... தயிர் சிலுப்பி , பெருமாள் பூச்சி என்று பல பெயர்களால் அழைக்க படும் praying mantis சை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் , ஆனால் அவற்றின் மேட்டரை பார்த்திருக்க மாட்டீர்கள் (பார்த்திருந்தால் மேட்டரே பண்ணியிருக்க மாட்டீர்கள் என்பது வேறு விஷயம் ), பெண் பூச்சியானது மேட்டரின் போது ஆணின் தலையை துண்டித்து விடும் , இருந்தும் கடமை தவறாத ஆண் உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் போதும் முண்டமாக இயங்கும் , (kunfu பாண்டா 2 வில் கூட mantis மாஸ்டர் தனக்கு தந்தை இல்லை என்று பாவமாக இந்த காட்சியை விவரிக்கும் ) அதனால் இந்த பெருமாள் பூச்சி தன் துணையை (/ வினயை ) மேட்டர் முடிந்த பின்னால் விட்டு விட்டு ஓடிவிடும் , ஆனால் எல்லா பெருமாள் பூச்சிகளுமே கொலைகாரிகள் இல்லை. அவற்றில் சில மட்டும் தான் இவ்வாறு செய்கிறது .
why திஸ் கொல வெறி கொல வெறி கொல வெறி டி:
இந்த ரணகளதுலையும் உனக்கு ஒரு கிளுகிளுப்பா ( மேட்டர் வித் அவுட் தல )
ஆனால் black widow spider என்று ஒரு சிலந்தி வகை இவ்வாறு எல்லாம் பாரபட்சம் பார்ப்பது இல்லை , மேட்டர் முடிந்ததும் ஆணை ஸ்வாகா பண்ணி விடும் ( நல்ல வேலை நான் black widow spider ஆ பிறக்கலை ).
ஆனால் பாவப்பட்ட பெண் ஜென்மங்களும் விலங்கினங்களில் உண்டு ,Red-Sided Garter Snake என்ற பாம்பு வகையில் , ஒரு பெண் பாம்பை பல பாம்புகள் orgy முறையில் gang rape செய்யும் , சில சமயம் ஆயிரக்கணக்கில் ( ஐயோ ப்பாவம் ) கூடி ஒரு மேட்டர் பந்தயே உருவாக்கி விடும் ( mating ball என்று இதை அழைப்பார்கள் ), 2 அடி உயரம் வரை இந்த பந்து இருக்கும் , சில சமயங்களில் பெண் பாம்பு தாக்குதல் ( அதும் இரட்டை குஞ்சு தாக்குதல் , சென்ற பதிவிலே கூறி இருந்தது போல பாம்புக்கு இரட்டை குஞ்சு என்பதை நினைவில் கொள்க ) தாங்காமல் இறந்து விடுவதும் நடந்து இருக்கிறது .
பி(கு?)ஞ்சிலேயே பழுத்தது :
பிஞ்சிலேயே பழுத்தது என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள் , அப்படி பட்ட ஒரு நாதாரியின் கதை தான் இதுவும் ... straw itch mite என்று ஒரு வகை பூச்சி பிறக்கும் போதே முழுவதும் வளர்ச்சியடைந்த குன்ஜோடு தான் பிறக்கும் , அதுனால அது பிறந்த உடனே மூடை கட்டு படுத்த முடியாமல் கூட பிறந்த அக்கா தங்கச்சி எல்லோரையும் ரேப்பி விடும் . அதுனால இவற்றிடம் நீங்கள் " சீ நீ எல்லாம் அக்கா தங்கச்சியோட பிறக்கலையா? " என்று கேள்வி கேக்க முடியாது .
எல்லோரும் பிட்டு படம் பார்த்து இருப்பீர்கள் (ஆனால் நான் பார்த்தது இல்லை என்னும் வரலாற்று உண்மையை இங்கே பதிவு செய்கிறேன் ) , ஆனால் இந்த பிட்டு கொஞ்சம் வித்தியாசமானது Chengdu Giant Panda Breeding and Research Base in Sichuan Province என்று சீனாவில் பாண்டா கரடிகளுக்கான breeding சென்டர் உள்ளது , ஆனால் பாருங்கள் ,பாண்டிய நாட்டுக்கு வந்த சோதனையை போல பாண்டா கரடிகள் பெரியவனா ஆனா பின்பும் மேட்டர் பண்ணாமல் கூட பிகு செய்தன . அங்கு இருந்த veterinarian களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை ( அவுங்களுக்குமா என்று எசகு பிசக்காக கேக்க கூடாது ) .அப்போ அங்க இருந்த என்னை மாதிரி ஒரு அறிவாளியான veterinarian ( டாய்ய்ய்) வித்தியாசமா யோசிச்சார் , நாம பிட்டு பாத்தா மூடு கிளம்புதே அது போல பாண்டாவுக்கும் போட்டு காட்டினா ( ஒழுங்கான அர்த்தத்தில் படிங்க ஆமா ) என்ன என்று நினைத்தார் . காட்டுல சில பாண்டாக்கள் போட்டத படம் பிடிச்சு , அந்த படத்த நம்ம நல்ல பாண்டாக்களுக்கு போட்டு காமிச்சார் (ஸ்ஸ் அப்பா) . பாண்டாக்கள் எல்லாம் கிளப்பி கொண்டு கிளம்பின ,பின்ன என்ன ? ஆதரவு தான் மேட்டர் தான். நல்ல பாண்டாவுக்கு ஒரு சூடு ( சாரி, ஒரு பிட்டு ).
ஏய் இது எல்லாம் தப்பு இல்லையா --- நாலு பேருக்கு நல்லதுனா எதுவுமே தப்பு இல்ல
சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால , சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால , தாங்க தான் முடியல ஐயோ என்னால …
நம்ம ஊருல பசங்க தான் பொண்ணுங்கள தேடி போய் வழிக்கு கொண்டு வருவாங்க ஆனால் .... தொடரும் ...
டிஸ்கி ( அப்புடினா என்ன ?) : நான் விலங்குகளின் அந்தரங்கத்தை வெளியிடுவதால் , அவற்றிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வந்திருகிடறது , இருந்தும் என்னோட எதிர்காலத்தை ( note the foto below) பத்தி கவலை படாம மக்கள் நலனை முன்னிட்டு ( நீயுமா ? ) பார்ட் 3 , 4 ... எல்லாம் வரும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன். இனிமே எங்களோடத பத்தி எழுதுன, உன்னோடத கடிச்சு வச்சுடுவேன் ஜாக்கிரதை
முதல்ல ஒரு இரும்பு ஜட்டி வாங்கி போடனும்பா
- Dr.Dolittle








