மழையும் விழியும்

மாநகர் நாடி
சிற்றூர் கிழாரெல்லாம் ஓடி
பீலி கொண்டு நிரப்பிய தேரொத்த
திணறும் தெருவெல்லாம்
வெள்ளம் வடியா நேரத்தில்
மீண்டும் கொட்டித் தீர்த்த பேய்மழை போல
விட்டுப்போன வலி தீராதபோதும்
சுட்டுப்போனாள்
கார்குழல் கருவிழியாள்

-இளவெயினன்.






இவர் மேலும் கூறுகிறார் ...

0 கலந்துரையாடல்கள்

இன்று ஒரு கலகக் காரனாக என்னை
முன்னிலை படுத்த முயற்சித்தேன்

விலைமகளின் துக்கங்களை
பேசிய ஒருவனிடத்தில்
தொழில் நேர்மையை பேச
முயன்றது என் நாக்கு

ஒரு அரசியல்வாதியின் 
உண்ணாவிரதத்தை
வேடிக்கை பேசியவனிடம் 
இந்துக்கள் மட்டும் மற்றவரிடத்தில்
இணங்கி போவதா
மதநல்லிணக்கம் என்றேன்

சாதி ஒழிப்பு என்பது
ஒரே ஒரு சாதியை ஒழிப்பதா
கேட்டேன் பெரியார் சிலையிடம்


குடி குடியை கெடுக்கும்
என்று சொன்ன நண்பணிடம்
நான் சொன்னேன்
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.

ஊழலை பற்றி பேச்செடுத்த
இன்னொருவனிடம்
வல்லவன் வாழ்வானென்றேன்

சாப்பிட என்ன வேண்டும் என்று 
கேட்ட சரவண பவன் சர்வரிடம்
நான் கேட்டது ஆட்டுக்கால் பாயா

இருந்தாலும் காலையில்
என் வடையை
கவ்வி சென்றிருக்ககூடாது
அந்த எலி

--
அன்புடன்,
இரா|Ram

இவர் மேலும் கூறுகிறார் ...

4 கலந்துரையாடல்கள்