நீங்க உங்க நண்பர்களோட காட்டுக்குள்ள மாட்டிகிட்டீங்க , நாலுநாள் ஒரு சாப்பாடும் கெடைக்கல , திடீர்னு ஒரு பிளேட்டு பிரியாணி உங்க நாலுபேருக்கும் முன்னாடி தோன்றுகிறது , அது ஒருத்தருக்கு தான் பத்தும் , நண்பர்கள் சாபிடட்டும்னு விட்ருவீங்களாநிறைய படத்துல பாத்துருபீங்க , வில்லன் பெரிய அப்பாடக்கரா  இருப்பாரு , ஆனா பொண்ணுங்க மேட்டர் வீக்கா இருப்பாரு , அத வச்சு அவர போட்ருவாங்க . உங்க அப்பனுக்கும் பே பே பாட்டு லேர்ந்து பில்லா  2 வரை நிறைய உதாரணங்கள்  உண்டு .அதுபோல தான் காட்டுல மேட்டர்ருக்கு நிறைய தடைகள பாத்தோம் .
  • முதல் தடை இணையிடம் இருந்து 
  • ரெண்டாவது தன இனத்தை சேர்ந்த சக ஆண்களிடம் இருந்து
  • மூன்றாவது எதிரிகளிடம் இருந்து 

என்னதான் தோஸ்து படா தோஸ்தா இருந்தாலும் , மேட்டர் ன்னு வந்துட்டா அதை எல்லாம் விலங்குகள் கண்டுக்காது .இணையிடம் கூடுவதற்காக உடல் சண்டை(மார்கழி நாய்கள்) , நடனப்போட்டி(மயில்) , பாட்டுபோட்டி(தவளை ),வீடு கட்டும் போட்டி (தூக்கணாங்குருவி), இளவட்ட கல் தூக்குதல் (சிவாஜி), காளையை அடக்குதல் (ரஜினி) என்று பெரும் போட்டிகளை சமாளிக்க வேண்டியுள்ளது. மேட்டரின் பொது  மெய்மறந்து காணப்படும் நேரத்தில் எதிரிகள் எளிதாக அட்டாக் பண்ணிவிட வாய்ப்பு அதிகம் .அதுவும் நாய் , ஓநாய் போன்ற லாக் ஆகும் விலங்குகளை நினைத்து 

பாருங்கள் . மேலே  காட்டி உள்ள படத்தில் அந்த வெட்டு கிளியை மேட்டர் சமயத்தில் அலேக்காக சாப்பிடும் பள்ளம் நொண்டி குளவியை காணலாம் (digger wasp ).அதுவும் சில பிரகஸ்பதிகள் பயங்கராமாக யோசித்து விலங்குகளின் வீக்னஸ்சை காட்டி லாபம் பார்த்து விடுவார்கள்


சில தாவரங்கள் (ophyrs orchid/ bee orchid ) தனது பூக்களை சில வகை தேனீக்களை போல மலரச்செய்யும் , தூரத்தில் இருந்து பார்க்கும் ஆண் தேனிக்கள் பெண் தான் உண்கார்ந்திருக்கு என எண்ணி அவற்றை ரேப்ப முயற்சித்து ஏமாந்து சென்று விடும்
             
இதனால் செடிக்கு என்ன நன்மைமகரந்த சேர்க்கை நடக்கிறதே ......இது பரவாயில்லஇந்த டிக்கில பல்பு எரிக்கிற மின்மினி பூச்சி இருக்கே 


இதுல பல இனங்கள் உண்டு , ஒவ்வொரு இனத்துக்கும் ஒவொவொரு சிக்னல். எடுத்துக்காட்டாக ஒரு வகையான மின்மினி இரவு வானில் j shape  இல் கொடு போட்டு துணைக்கு சிக்னல் கொடுக்கும்.

சில predaceous (வேட்டக்கார ) மின்மினிகள் இவற்றை போல சிக்னல் கொடுத்து ஆவலாக வரும் ஆணை வேட்டையாடி விடும் . 


---அடுத்த தடைகள் .....அடுத்த பதிவுல…..
இவர் மேலும் கூறுகிறார் ...

2 கலந்துரையாடல்கள்

                           

மேட்டர் நமக்கு ஒரு ஜாலியான   மேட்டர் , ஆனா மிருகங்களுக்கு மேட்டர் is a luxurious  மேட்டர்  . நீங்க எளிதாக கதவை  சாத்திட்டு , லைட்ட நிறுத்திட்டு ( இல்லநிறுத்தாம ) ஜாலியா கில்மேடிக்ஸ் பண்ணுவீங்க , ஆனா மிருகங்களுக்கு அதுஒரு adventure மாதிரி . நினைச்சு பாருங்க போர்களத்துல  எதிரிகள் சூழ்ந்த இடத்துக்கு நடுவே உங்கள மேட்டர் பண்ண சொன்னா உங்களுக்கு எப்படி   இருக்கும்   ? அப்புடி ஒரு உறுப்பு இருக்குறதே உங்களுக்கு மறந்து போய்விடாது  ?
 
ஆனா தடைகளைத் தாண்டி ,வெற்றி கொடி நாட்டினா  (!) தானே ஒரு பெருமிதம்?
அப்புடி என்ன டாக்டர் தடைகள் இருக்கு ?ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, பல தடைகள்.
முதல் தடை :  

வேற யாரும் இல்ல , இணையிடம் இருந்து வரும் தடை சூப்பர் figure ,கிட்ட போய் தொட்டா , கத்தியால் குத்திடுவா ,... அவளோட நீங்க கூடுவீங்களா ?ஆனா தன்னோட சந்ததி நல்லா இருக்கணும்னு , உயிரை "முடி" யா நினைச்சு ,கூடுற தியாகிகளை என்னனு சொல்றது ?

 

படிக்க … தயிர் சிலுப்பி மற்றும் சிலந்தி மேட்டர்
அதுவும் சில வகை சிலந்திகளில் உருவத்தில்  பெரிதாக இருக்கும் பெண் சிலந்தி , தனது வலையில் எது வந்தாலும் சரி ருசித்து சாப்பிட்டு விடும் , அதுவும் உருவத்தில் சிறிய ஆண் சிலந்தி வந்தாலும் அதுக்கு உடல் பசியை விட வயிற்று பசி தான் பெரிதாகத்  தெரியும் , ஆனா ஆண்களுக்கு அப்புடி இல்லை , எப்படியாவது ( செத்தாலும் ) மேட்டர் பண்ணிவிட வேண்டும் என்ற துடிப்புஅதுனால " முனியம்மா நான் தான் கபாலி வந்துருக்கேன் " என்கிற ரீதியில் முதலில் பெண் சிலந்தி வலையை வெளியில் இருந்து லைட்டா ஆட்டி விடும் , சிலர் இன்னும் புத்திசாலி தனமாக கையோடு ஒரு இரையை கொண்டு போய் பெண்களுக்கு gift ஆ கொடுப்பாணுவ , ( அப்ப தானே பெண் சிலந்தியோட வாய் பிஸியா இருக்கும் , அந்த நேரத்துல பையனும் பிஸியா வேலைய காட்ட முடியும் ) ,( பாருங்க மக்களே பொண்ணுங்களுக்கு gift  குடுக்குற பழக்கம் எப்புடி ஆரம்பிசுருக்குனு )இன்னும் சில அப்பாடக்கருங்க ( Crab  spider ) என்ன பண்ணுவானுங்கனா...  நம்ம spider  man மாதிரி கம் விட்டு பெண்கள கட்டி போட்டுடுவானுங்க , அப்புறம் ?
"போட்டுடுவானுங்க" . 
[எனக்கு ஒரு சந்தேகம் , spider man னுக்கு எப்புடி   கைலேர்ந்து கம் வருது ? பட்டக்ஸ்லேருந்து தானே வரணும்  , ஏன்னா சிலந்திக்கு பின்னாடி இருந்து தானே கம் வருது? - ஆனா சிலந்தி கம் ஒரு ஸ்பெஷல் ஆன வஸ்து , சில வகை கம்மூலமா குண்டு துளைக்காத உடையெல்லாம் செய்றாங்க தெரியுமா ?   ]

மயிலு தானே நமக்கு தெரிஞ்சு தோகைய ஆட்டி இணையை கவரும் , மயில் சிலந்தின்னு ஒரு வகை சிலந்தி தனது தோகையை ( தோகை மாதிரி உள்ள பட்டக்சை) ஆட்டி இணையை கவரும்
 ஏற்கனவே சொன்ன மாதிரி புலி சிங்கத்துக்கு எல்லாம் முள் குஞ்சு ( குஞ்சரமல்லர்  1  )
அதனால மேட்டர் முடிஞ்சு வெளிய எடுக்கும் போது கீரிகிட்டு வரும் , அதுனால பெண் சிங்கம் ( கலைங்கரோட பெண் சிங்கம் இல்ல ) டென்ஷன்  ஆகி சண்டைக்கு வந்துடும்.
அடுத்த தடைகள்  , அத அடுத்த பதிவுல பாப்போம்.
                                                                                                                                 - Dr. Dolittle 


இவர் மேலும் கூறுகிறார் ...

3 கலந்துரையாடல்கள்

டாக்டர் பச்சை குத்துதல்ன்னா என்ன ?
ரொம்ப எளிதா புரியணும்னா கீழ உள்ள படத்த பாருங்க

(மோசன் போற எடத்துல பேசன் ? நாடு கெட்டு  போச்சுப்பா) 
இன்னும் புரியல ?

இப்ப புரிய வைக்கிறேன்
இப்ப புரிஞ்சுதா ?( இதுக்கு மேல புரியலன்னு சொல்வீங்க ?)
ஓகே , பச்சை குத்துதல் தற்போது நாகரீகத்தின் வெளிப்பாடாக பார்க்கபடுகிறது
ஆனா history வேறு விதமா சொல்லுது .( std ன்னா வரலாறு தானே)

புராண கால tattoo –
எனக்கு தெரிஞ்சு முத முதல்ல tattoo குத்தினது இவருதான் (நோட் தி தும்பிக்கை )


 
அப்புறம் கற்காலம் :
நம்ம ஊர்லயும் இது இருந்திருக்கு பச்சை குத்துதல்,மருதாணி என்று பலவாறாக
..

இப்ப மாடர்ன் உலகத்துல இது பேசன் ஆயிடுச்சு
   
 

ஓகே , இதனால் தாங்கள் கூற விரும்பும் கருத்து:
god கடிச்சு , மனுசன கடிச்சு , கடைசில இப்ப அனிமல்சையும் கடிக்க ஆரம்பிச்சுடுச்சு இந்த tattoo    
ஒரு பெரிய பண்ணைல நிறைய மாடுங்க இருக்கும் , அவைகள அடையாளப்படுத்த tattoo குத்துவாங்க ,
அதுக்கு இப்புடி சூடு வைப்பாங்க
இல்ல இப்புடி-196 டிகிரி உள்ள திரவ நைட்ரஜன் மூலம்    ஐஸ்  வைப்பாங்க ( இதுக்கு சூடே வைக்கலாம் )


 
இல்ல ஊசி ஊசியா நம்பர் செட் பண்ணி பச்சை குத்துவாங்க

வட நாட்ல வைத்தியம் பாக்கும் போது அடிக்கடி மாட்டு உடம்புல வித்யாசமான சிம்பல்ல சூடு போட்ட தழும்பு இருந்துச்சு , என்னடா இதுன்னு கேட்டேன் , அது ஒரு வகையான வைத்தியமாம் , நம்ம ஊர்லயும் பழங்காலத்துல இத பின்பற்றி இருக்காங்க ( source  தஞ்சாவூர் சரஸ்வதி மகால்  புக்ஸ் ).

இதெல்லாம் ஓகே , ஒரு தேவைக்காக பண்றாங்க , ஆனா Vim  Delvoye ன்னு ஒரு சீனா பன்னி, இவன் பெரிய டிராயர்  ,  உண்மையான பன்னிகுட்டிங்க உடம்புல tattoo   குத்தி அது பெருசான உடனே ,பன்னிய கொன்னுட்டு  , கறிய அவன் சாப்டுடுவான் . அப்பா தோலு ? அத வித்துடுவான் .


அத போய் யாரு டாக்டர் வாங்குவா ?
நீங்கல்லாம் அத வாங்க முடியாது , ஒரு பீஸ் 10 ,௦௦௦  டாலர் குடுத்து  ( நமக்கு முருகன் டாலரே போதும் ) அத வாங்க பொழுது போகாத தொழிலதிபர்கள் இருக்காங்க ( நாட்ல இந்த தொழிலதிபர்கள் தொல்ல தாங்க முடியலப்பா ).
கேட்டா ஆர்ட்டாம்சரி பன்னியோட நிருத்துனானுவலா? , இல்லையே    , pet  tattooing  ஒரு பெரிய பேசனா வளர்ந்து வருது
நாய் பூனைக்கெல்லாம் tattoo

parrot  பிஷ்  ன்னு ஒரு மீனு , விக்காம கிடந்துச்சு , என்ன பண்ணலாம் ?குத்துடா tattoo ...கொடுமைய நீங்களே பாருங்க கலர் எறும்பு , கலர் கோழிகுஞ்சு ,கலர் ஆமகுஞ்சு …அடப்பாவிகளா…

னக்கு  தெரிஞ்சு அனிமல்சுக்கு tattoo  குத்துன முதல் ஆளு யார் தெரியுமா


ஒரு விஷயம் சொல்றேன் காத குடுங்க , நம்ம ஊரு அணிலுக்கு 3 கொடுத்தானே , ஆனா வட நாட்டு அணிலுக்கு 5 கொடு ,
 
(வடக்கு வாழ்கிறது ?) யு டூ ராமா ?

 கடைசியா ஒரு விஷயம் , நாம எல்லோரும் போட வேண்டிய tattoo எது தெரியுமா ?
……?  
இவர் மேலும் கூறுகிறார் ...

5 கலந்துரையாடல்கள்