மேட்டர் நமக்கு ஒரு ஜாலியான   மேட்டர் , ஆனா மிருகங்களுக்கு மேட்டர் is a luxurious  மேட்டர்  . நீங்க எளிதாக கதவை  சாத்திட்டு , லைட்ட நிறுத்திட்டு ( இல்லநிறுத்தாம ) ஜாலியா கில்மேடிக்ஸ் பண்ணுவீங்க , ஆனா மிருகங்களுக்கு அதுஒரு adventure மாதிரி . நினைச்சு பாருங்க போர்களத்துல  எதிரிகள் சூழ்ந்த இடத்துக்கு நடுவே உங்கள மேட்டர் பண்ண சொன்னா உங்களுக்கு எப்படி   இருக்கும்   ? அப்புடி ஒரு உறுப்பு இருக்குறதே உங்களுக்கு மறந்து போய்விடாது  ?
 
ஆனா தடைகளைத் தாண்டி ,வெற்றி கொடி நாட்டினா  (!) தானே ஒரு பெருமிதம்?
அப்புடி என்ன டாக்டர் தடைகள் இருக்கு ?ஒன்னு இல்ல ரெண்டு இல்ல, பல தடைகள்.
முதல் தடை :  

வேற யாரும் இல்ல , இணையிடம் இருந்து வரும் தடை சூப்பர் figure ,கிட்ட போய் தொட்டா , கத்தியால் குத்திடுவா ,... அவளோட நீங்க கூடுவீங்களா ?ஆனா தன்னோட சந்ததி நல்லா இருக்கணும்னு , உயிரை "முடி" யா நினைச்சு ,கூடுற தியாகிகளை என்னனு சொல்றது ?

 

படிக்க … தயிர் சிலுப்பி மற்றும் சிலந்தி மேட்டர்
அதுவும் சில வகை சிலந்திகளில் உருவத்தில்  பெரிதாக இருக்கும் பெண் சிலந்தி , தனது வலையில் எது வந்தாலும் சரி ருசித்து சாப்பிட்டு விடும் , அதுவும் உருவத்தில் சிறிய ஆண் சிலந்தி வந்தாலும் அதுக்கு உடல் பசியை விட வயிற்று பசி தான் பெரிதாகத்  தெரியும் , ஆனா ஆண்களுக்கு அப்புடி இல்லை , எப்படியாவது ( செத்தாலும் ) மேட்டர் பண்ணிவிட வேண்டும் என்ற துடிப்புஅதுனால " முனியம்மா நான் தான் கபாலி வந்துருக்கேன் " என்கிற ரீதியில் முதலில் பெண் சிலந்தி வலையை வெளியில் இருந்து லைட்டா ஆட்டி விடும் , சிலர் இன்னும் புத்திசாலி தனமாக கையோடு ஒரு இரையை கொண்டு போய் பெண்களுக்கு gift ஆ கொடுப்பாணுவ , ( அப்ப தானே பெண் சிலந்தியோட வாய் பிஸியா இருக்கும் , அந்த நேரத்துல பையனும் பிஸியா வேலைய காட்ட முடியும் ) ,( பாருங்க மக்களே பொண்ணுங்களுக்கு gift  குடுக்குற பழக்கம் எப்புடி ஆரம்பிசுருக்குனு )இன்னும் சில அப்பாடக்கருங்க ( Crab  spider ) என்ன பண்ணுவானுங்கனா...  நம்ம spider  man மாதிரி கம் விட்டு பெண்கள கட்டி போட்டுடுவானுங்க , அப்புறம் ?
"போட்டுடுவானுங்க" . 
[எனக்கு ஒரு சந்தேகம் , spider man னுக்கு எப்புடி   கைலேர்ந்து கம் வருது ? பட்டக்ஸ்லேருந்து தானே வரணும்  , ஏன்னா சிலந்திக்கு பின்னாடி இருந்து தானே கம் வருது? - ஆனா சிலந்தி கம் ஒரு ஸ்பெஷல் ஆன வஸ்து , சில வகை கம்மூலமா குண்டு துளைக்காத உடையெல்லாம் செய்றாங்க தெரியுமா ?   ]

மயிலு தானே நமக்கு தெரிஞ்சு தோகைய ஆட்டி இணையை கவரும் , மயில் சிலந்தின்னு ஒரு வகை சிலந்தி தனது தோகையை ( தோகை மாதிரி உள்ள பட்டக்சை) ஆட்டி இணையை கவரும்
 ஏற்கனவே சொன்ன மாதிரி புலி சிங்கத்துக்கு எல்லாம் முள் குஞ்சு ( குஞ்சரமல்லர்  1  )
அதனால மேட்டர் முடிஞ்சு வெளிய எடுக்கும் போது கீரிகிட்டு வரும் , அதுனால பெண் சிங்கம் ( கலைங்கரோட பெண் சிங்கம் இல்ல ) டென்ஷன்  ஆகி சண்டைக்கு வந்துடும்.
அடுத்த தடைகள்  , அத அடுத்த பதிவுல பாப்போம்.
                                                                                                                                 - Dr. Dolittle 


3 பேர் சொல்றாங்க...

  1. Ganesan என்ன சொல்றாருன்னா:

    இந்த சிலந்திங்க பண்ற அலப்பற தாங்க முடியலையே! இருங்கடா இருங்க அடுத்த தடவ உங்கள எங்கே பார்த்தாலும் பாத்தா எடத்துலயே வெட்டி புதைச்சிர்றேன்! (இந்த கட்டுரையை என் மனைவியோடு சேர்ந்து படித்தேன்! அந்த கிப்ட் விஷயம் படித்ததும் என்னை முறைத்தால்! அதான் இந்த கோபம்!!)

  2. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

    Ganesan அண்ணே :இனிமே அப்புடி நடக்காம பாத்துகுரேன்னு அண்ணி கிட்ட சொல்லிடுங்க அண்ணே

  3. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

    Wish u a happy new yearrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

Leave a Reply