நாய் ஏன் கால தூக்கி சுவத்துல வச்சு ஒன்னுக்கு போவுது ?
இதுக்கு பின்னால  ஒரு சோக கதை இருக்கு


இடம் : உலகத்தில் எதோ ஒரு இடம் (most probably மூத்திர சந்து )
காலம் : ஐஸ் ஏஜ் (10000 bc )
சீசன்: மழைகாலம்  
எங்கும் பசுமை, நிலமென்னும் நங்கை பச்சை பட்டாடை உடுத்தி அவளது அழகிய அங்கங்களை மறைத்து இருந்தாள், அதை கண்டு வெட்கமடைந்த ஆதவன் கீழ்வானத்தை சிவக்க செய்து மேற்கில் மறைந்து கொண்டு இருந்தான் ( ஏய் ஸூப்பருப்பா , நீ இப்புடி எல்லாம் பேசி கேட்டதே இல்லப்பா ). ஆதவன் அனைக்க நினைத்த நிலமங்கையின் தேகத்தை வருணன் மழையால் அனைத்து ( நனைத்து) கொண்டு இருந்தான் . அந்த மயக்கும் மாலை பொழுதில் romance செய்து கொண்டிருந்தன இரண்டு Siberian husky நாய் இனத்தை சேர்ந்த ரோமியோவும் ஜூலியட்டும்  .

அப்போது,

ரோமியோ : ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு , தோ வந்துர்ரேன்

ஜூலியட் : அத்தான், என்னை விட உங்களுக்கு அப்புடி என்ன அவசரம் ?

ரோமியோ : அடியே ஆத்திரத்தை அடக்கலாம் , ஆனால் ...மூஊஊ.....

ஜூலியட் : போய் தொலைங்க .


ரோமியோ நாலு கால் பாய்ச்சலில் அரை நொடியில் மூத்திர சந்தை அடைந்தான் . மடை திறந்த வெள்ளம் போல் ஏற்கனவே நனைத்திருந்த நிலத்தை நனைத்தான் .ஏற்கனவே மழையில் நனைந்திருந்த குட்டிச்சுவர் அப்படியே ரோமியோ மீது சரிந்தது, ரோமியோ ,கடைசி சொட்டு மூதிரத்தோடு உயிரையும் சேர்த்து விட்டது . இதை கண்ணுட்ற ஜூலியட் , கற்புக்கரசி கண்ணகி போல தனது நாய் association க்கு சென்று முறையிட்டது . அப்போது நாய் தலைவர் சரத்குமார் தனது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை சொன்னது ," எலேய் , இப்ப சொல்லுதேன் தீர்ப்ப , எல்லா நாய்ங்களும் நல்லா கேட்டுக்குங்க , இனி இந்த வட்டாரத்துல எந்த நாய் மூத்திரம் போனாலும் கால தூக்கி சொவத்துல முட்டு குடுத்து கிட்டு தான் போகோணும் , இத மதிச்சு மூத்தரம் போகாதவனுன்களோட யாரும் எலும்பு துண்டு share பண்ண கூடாது , ஒட்டு உறவு முதகொண்டு உடலுறவு வரை எதுவுமே வச்சுக்க கூடாது , இது தாண்டா இந்த 'நாயா'மயோட தீர்ப்பு"ன்னு சொல்லுச்சு . அன்னையில இருந்து நாய் இப்படி தான் ஒன்னுக்கு போவுது .

 இது காலம் காலமாக நாய்கள் மத்தியில் குரைக்கப்பட்டுவரும் ஒரு myth.  But the truth is different …


வயதுக்கு வந்த ஆண் நாய்களுக்கு மட்டுமே இந்த பழக்கம் , இதற்கு பல விதமான காரணங்கள் உள்ளன ( எல்லாம் hypothesis தான் )

1 . நாயின் மூத்திர பையின் முடிவில் prostate என்று ஒரு சுரப்பி உள்ளது ,அது மூத்திரம் வரும் பாதையை press செய்வதால் நாய் காலை தூக்கி வழி ஏற்படுத்திக்கொண்டு மூத்திரம் போகிறது .( கீழ உள்ள படத்தை பாருங்கள் , ப்ளூ கலர் கொடு போட்ட பாதை urine வரும் பாதை )

 


2 . Bulbus என்று ஒரு பகுதி நாய் குஞ்சில் உள்ளது [இது தான் நாய் கலவியின் போது lock ஆவதற்கு காரணம், ஏன் லாக் ஆவுதுன்னா , நாய் விந்து நம்மலோடத போல திக்கா இருக்காது , அதுவும் பன்னி , குதிரை போல கருப்பையிலே விந்தை விடாமல் , யோனியில் விடும் , அதனால் அதனுடைய நீர்த்த விந்து வழிந்து விடாமல் இருக்க இந்த லாக் ஏற்பாடு , அப்போது ஆணின் குஞ்சும் சரி ,பெண்ணின் யோனியும் சரி இரத்ததினால் நிரம்பி பெருத்து புடைத்து இருக்கும் , அதனால் கல் கொண்டு அடிக்காதீர் , கிழிந்து விட வாய்ப்பு அதிகம் ( சின்ன வயசுல நான் அடிச்சு இருக்கேன் , நீங்களும் தான் என்று எனக்கு தெரியும் ), இதுவும் நாயின் மூத்திரம் வரும் பாதையை press செய்வதால் நாய் காலை தூக்கி வழி ஏற்படுத்திக்கொண்டு மூத்திரம் போகிறது


3. இது ஒரு முக்கியமான காரணம்... விஜய் படத்துல எல்லாம் பாததுருபீங்க ,சென்னைல 4 ரவுடிங்க இருப்பாங்க , உனக்கு வட சென்னை , எனக்கு தென் சென்னை , பான்பராக்கு ரவிக்கு மேற்கு ன்னு ஏரியா பிரிச்சு வச்சுருபானுங்க. இது போல தான் விலங்குகளிலும் , இது தனது எல்லை என அடையாளப்படுத்த அது உபயோஹிப்பது ...மூத்திரம் . (ஒரு முறை சுந்தர வனக்காடுகளின் அருகில் இருக்கும் மக்களை ஒரு கொடிய புலி தொந்தரவு குடுத்து வந்தது , என்ன பண்ணியும் வேலைக்காவல, அப்போ என்னை மாதிரி ஒரு அறிவாளி veterinarian ( இந்த கோணி தலையன் லோலாயி தாங்க முடியலடா) ஜூ ல இருந்து ஒரு புலியோட மூத்திரத்த புடிச்சு ஊருக்கு வெளிய தெளிச்சு விட்டார் , வில்லன் புலி அந்த ஸ்மெல்ல மோப்பம் பிடிச்சு , இது வேற புலியோட ஏரியா ன்னு நினச்சு ஊருக்குள வராம ஓடிடுச்சு ), அதுனால தான் நாய் தனது எல்லையை குறிப்பிட சுவர் , மரம் போன்ற vertical ஆன இடங்களில் காலை தூக்கி ஒன்னுக்கு அடிக்கிறது .

நாய் மட்டுமல்ல , பல விலங்குகளில் இந்த territory marking பழக்கம் உண்டு

 
 

ஒரு ஆண் நாய், பெண் நாய் போல உட்கார்ந்து மூத்திரம் போகிறது என்றால் , அதற்கு மூதிரப்பையில் , அல்லது பாதையில் பிரச்சனை , உடனே டாக்டரை பார்ப்பது நலம்

.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்த கோழி மேட்டர் ,

சேவலுக்கு குஞ்சு கிடையாது ,இருந்தும் எப்புடி ? ஒரு பேச்சுக்கு உங்களுக்கு குஞ்சே கிடையாது என்று வச்சுக்குவோம்,ஒரே ஒரு ஓட்டை தான் உண்டு , அதன் மூலம் கலவி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்வீர்கள் , தவிச்சு போயிட மாட்டீங்களா ? ஆனால் சேவல் சில short கட் வச்சுருக்கு,

1 ) அதன் காலில் spur என்று ஒரு ஷார்ப்பான கத்தி போன்ற அமைப்பு உண்டு ,

அதன் மூலம் இணையை கெட்டியாக பிடித்து ஒரு நல்ல பொஷிசனில் வைத்துக்கொள்ளும் .
2 ) சேவலின் பின்சிரகுகள் மேல் நோக்கி காணப்படும் , அதனால் கலவியில் எந்த இடயூரும் இல்லாமல் இருக்கும்

3 )சேவலின் விந்து திக்காகவும் நீர் கம்மியாகவும் இருக்கும் , அதனால் சிந்தாமல் , சேதாரம் இன்றி cloacal kiss மூலம் inject செய்து விடும்.

அது எல்லாம் இருக்கட்டும் டாக்டர் , அது ஏன் தலையை கொத்துது :
ஒரு சுட்டி பையன் ஓடிக்கொண்டே இருக்கான் , ஆனா அவனுக்கு ஊசி போடணும் , அப்ப என்ன செய்வீர்கள் ?மண்டைல நறுக்குன்னு ஒரு கொட்டு கொட்டி படக்சுல ஊசிய போட்டர வேண்டியது தானே ன்னு தானே சொல்றீங்க ?அத தான் கோழியும் செய்யுது , கோழி ஆட்டிகிட்டு இருந்தா குஞ்சு இல்லாத சேவல் எப்புடி கரெக்டா விந்தை செலுத்தும் ? சோ கோழியினை கொத்தி கலவி கொள்கிறது.


இந்த மண்டைய கொத்துற பழக்கம் நிறைய விலங்குகள்ல இருக்கு .

.  

உங்க சந்தேகம் தீந்துடுச்சு ,ஆனா எனக்கு ஒரு சந்தேகம் .

ஆமா cock க்கு தான் cock   இல்லையே அப்புறம் ஏன் cock  cock ன்னு சொல்றாங்க ?


டிஸ்கி : போன பதிவில்" நம்ம ஊருல பசங்க தான் பொண்ணுங்கள தேடி போய் வழிக்கு கொண்டு வருவாங்க ஆனால் .... தொடரும் ..." ன்னு சொல்லி முடிச்சு இருந்தேன் , அது என்ன மிருகம்ன்னு யாராவது கரெக்டா சொன்னா , அவங்களுக்கு சாம் ஆண்டர்சன் நடித்து ( சாரி வாழ்ந்து ) இருந்த யாருக்கு யாரோ படத்தின் திருட்டு vcd அனுப்பி வைக்க படும் .டிஸ்கி topic மற்றும் ஏராளமான மேட்டரோடு சந்திக்கிறேன்

என்னை விட்டுடுங்க , இனிமே உங்க ஒன்னுக்கு சீக்ரெட்ட வெளிய சொல்ல மாட்டேன்  .

வகைகள்:

9 பேர் சொல்றாங்க...

 1. நாஞ்சில் பிரதாப் என்ன சொல்றாருன்னா:

  ஆஹா...அற்புதம், அட்டகாசம்.... நெடுநாள் சந்தேகங்கள் தீர்ந்தன....நன்றி டாக்டர் சார்.

  இன்னும் அந்த சிட்டுக்குருவி மேட்டர் அப்படியே இருக்கே...:))

 2. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  எனக்கு ஒரு சந்தேகம் அந்த கோழியை கையில் பிடித்து கொண்டிருப்பது நீங்களா ? மற்ற படி அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தது, மிக அருமையான பதிவு டாக்டரே,

 3. எஸ்.கே என்ன சொல்றாருன்னா:

  Really Nice...

 4. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  நாஞ்சில் பிரதாப் sir முதல்ல நான் கேட்ட கேவிக்கு பதில் சொல்லுங்க
  டெனிம் சார் அது நான் இல்ல , நான் ரொம்ப சின்ன பையன்
  நன்றி எஸ்.கே சார்

 5. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

  மருத்துவர் அவர்களே... என்னைப் பொறுத்தவரை, இந்த வரிசையில் இதுவரை வந்தவற்றில் இதுவே அட்டகாசமான கட்டுரை. நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே போகிறது. அடித்து பட்டையைக் கிளப்புங்கள். !!

  பி.கு - இதற்கும், நன்றி சார் என்று கமென்ட் போட்டீர்கள் என்றால், அப்புறம் நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது ஆமாம் .

 6. வில்லனின் விநோதங்கள் என்ன சொல்றாருன்னா:

  ஜூப்பர் பாஸ்

 7. வில்லனின் விநோதங்கள் என்ன சொல்றாருன்னா:

  மிருகங்களில் எந்த மிருகம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட்ட்ட்ட்ட்ட்ட்டட நேரம் தாக்குப்பிடிக்கும் என்பதை அறிய விரும்புகிறோம் ஐயா?

  செப்புவீராக........

 8. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  நாய் தான்னு நினைகிறேன், எதுக்கும் நல்லா படிச்சுட்டு அடுத்த பதிவுல சொல்றேன் ,கருந்தேள் மற்றும் வில்லன் சார் நன்றி ( என்ன மன்னிச்சுருங்க கருந்தேள் சார் , நான் உங்களோட விசிறி , நீங்க என்ன பராற்றதுக்கு என்னால நன்றி சொல்லாம இருக்க முடியாது ).

 9. Ganesan என்ன சொல்றாருன்னா:

  sssssssssss எப்பா! முடியல! உங்க கட்டுரைய தொடர்ந்து படிச்சிட்டு வந்த, அடிக்கடி நம்ம குஞ்சு சரியா இருக்கான்னு செக் பண்ணிக்க வேண்டியிருக்கு!

Leave a Reply