நண்பேன்டா

நான் பதிவு எழுதுவது என் நண்பர்களுக்கு கூட தெரியாது . என் நெருங்கிய நண்பன் ஒருவனிடம் ," மச்சி நம்ம சுப்ஜெக்ட் பத்தி ஒருத்தன் interesting ஆ (?) எழுதி இருக்கான் பாரேன் " ன்னு சொன்னேன் , படிச்சு பாத்துட்டு ,நல்லாருக்கு மச்சி(?), இத எழுதுனன்னு நீ தானே சொன்னான், சத்தியமா இல்ல மச்சி ன்னு சொன்னேன், அதுக்கு அவன் ," உன் சத்தியத்துல சாணிய கரைச்சு ஊத்து , உன்னோட slang தான் இந்த கட்டுரைல அப்பிடியே தெரியுதேடா , ஆனா என்னைக்கு உன்னோட அண்ணன் கைல சிக்குரியோ அன்னைக்கு இருக்குடா உனக்கு ஆப்பு', அப்புடின்னு சொன்னான் { எங்க அண்ணன் ஒரு பிரபல blogger (அப்பிடினு அவனே சொல்லிக்குவான் )}. அதுனால நானும் இனிமே டீசன்ட்டா பதிவு எழுதலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன் ( அது எல்லாம் உன்னால முடியாது நாயே ) .

இந்திய blog வரலாற்றிலேயே முதல் முறையாக ,மெகா பவர் ஸ்டார் Dr .Dolittle (இது வேறயா ?) மேட்டர் பத்தி எழுதாத Decent பதிவு உங்கள் குலேபகாவலியில் மட்டும் , இது durex வழங்கும் விளம்பரதாரர் நிகழ்ச்சி ( ஆமா டாக்டர் அனிமல்சுக்கு காண்டம் இருக்கா - அது குஞ்சரமல்லர்கள் பார்ட் 4 ல வரும் , இது Decent பதிவு ஆமா சொல்லிபுட்டேன் ) .

__________________________________________________________________________________


விலங்குகளின் நட்பு மற்றும் தாய் பாசம் போன்றவற்றின் முன்பு மனிதர்களாகிய நாம் பிச்சை வாங்க வேண்டும் , இவற்றை பற்றி ஆயிரம் பதிவுகள் போடலாம் .முதலில் நடுப்புகாக ..

.

நண்பேன்டா 1 :

கோபியும் இறாலும்

கோபி என்றவுடன் நம்ம ஊர் கோபியை நினைகாதீர்கள் , இது ஒரு வகை மீன் இனம் watchmen or prawn gobies என்று இவற்றுல் ஒரு வகை மீன் இனம் உண்டு , பையனுக்கு பார்வைத்திறன் அதிகம் , ஆனால் கைவசம் ஒரு வித்தையும் இல்லை, சொந்தமாக ஒரு குடிசை கூட கிடையாது , எதிரி யாரவது வந்தால் எதிர்த்து சண்டை போட தெரியாது , மொத்தத்தில் இவன் ஒரு care of platform . pistol shrimp என்று ஒரு வகை இறால் , இவன் ஒரு கடும் உழைப்பாளி , நல்ல body , ஆனால் பாவம் இவனுக்கு பகலிலேயே பசு மாடு தெரியாது , வடிவேலுவை பார்த்தால்"தம்பி நீங்க MGR மாதிரி தக தக ன்னு மின்னுரீங்கன்னு " சொல்லற டைப்.

நம்ம சங்க கால இரட்டை புலவர்களை பற்றி இவன்கள் கேள்விபட்டிருபார்கள் போல , இவன்களும் அவர்களைப்போல ஒரு காவிய நடப்புக்கு எடுதுக்காட்டகிவிட்டார்கள் , இந்த இறால் பையன் ,கோபிக்கும் இவனுக்கும் சேர்த்து ஒரு அழகான + பாதுகாப்பான பதுங்கு குழியை அமைத்து குடுப்பான் , இந்த கோபி பையன் வாசலில் watchman போல தேவுடு காத்து இருப்பான் .இவன்கள் தங்களுக்குலேயே தொடுதல் மூலம் ஒரு பாஷையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் ,

யாரவது எதிரி வந்தால் இந்த கோபி பையன் தனது துடுப்பு மூலம் இறால் பையனின் உணர்கொம்புகளில் தட்டி " தம்பி உஷாரு " என்று அலெர்ட் செய்வான் . 

பின்னர் இருவரும் குழிக்குள் சென்று பதுங்கி கொள்வார்கள் .இறால் இரை தேடுகிறேன் பேர்வழி என்று வழி தவறி விட்டால் கூட , நம்ம கோபி போய் பத்திரமா வீட்டுக்கு கூடியாந்துடுவான்


.

ஆனால் வாட்ச்மனுக்கு எப்பவுமே ஆபத்து அதிகம் , அதுனால அந்த கோபி அதுக்கு என்ன செஞ்சான் தெரியுமா ?

Evalution மூலமா ஒரு peculiar ஆன உடலமைப்ப உருவாக்கக்கிட்டான். மேல உள்ள படத்துல இருக்குற கோபிய நல்லா பாத்தீங்கன்னா அவன் கண்ண ஒரு கொடு மூலமா மறைச்சுருக்குறது தெரியும் , முதுகு மேல உள்ள துடுப்புல ஒரு பொய் கண்ண வசுருக்குறதும் தெரியும் .

எதிரிங்க எப்பவுமே தலைய தான் அடிக்கும் ,தூரத்துல இருந்து பாக்குற எதிரிங்களுக்கு இந்த false eye spot அ பாத்து தலைன்னு நினச்சு துடுப்ப அடிக்கும் , அதுக்குள்ள நம்ம கோபி உடனே சுதாரிச்சு (தெரிச்சு) உள்ள ஓடிடுவான் .

இந்த டெக்னிக்க பல பயலுக follow பண்றானுவ.

இவனுங்க எல்லாம் butterfly மீன்கள் . இவன் படக்சுல பொய் கண்ண வச்சுருக்கான், உண்மையான கண்ண கொடு போட்டு மறைச்சு வச்சுருக்கான். இவன் catterpillar (கூட்டுப்புழு) இது இவனோட உண்மையான கண்ணு கிடையாது படக்சுல இருக்குற பொய் கண்ணு .

இது பரவா இல்ல , இந்த பட்டாம் பூச்சி பய இருக்கானே இவன் படக்சுல ஒரு பொய் தலையயே வச்சு இருக்கான் பாருங்க.

இவன் கூட பரவாஇல்ல இந்த moth பையன் ஆந்தை கண்ணு மாதிரி ரெக்கைய வச்சு ஆக்டிங் குடுக்குறத பாருங்க
 ...

எல்லாம் ஓகே டாக்டர் , அது எப்புடி அதுக்கு படக்சுல கண்ணு வந்துச்சு ?(படக்சுல ஆய் தானே வரணும் )

ஞாயம் தான்…ok, உங்க பக்கத்துக்கு வீட்ல ஒரு அழகான பாப்பா இருக்கு , அத பாக்கலாமுன்னு காம்பவுண்டு சுவர எட்டி பாக்குறீங்க , ஆனா சுவர் உயரமா இருக்கு , இருந்தாலும் விடா முயற்சியோடு வருஷக்கணக்காக எட்டிப்பாக்குறீங்க , உங்களுக்கபுறம் உங்க பையன்( அவனுமா ?? ), அவன் பேரன்னு பரம்பரபரம்பரயா எட்டி பாக்குறீங்க ( த்தூ ... இதெல்லாம் ஒரு பொழப்பு ) . ஒரு கட்டத்துல evalution மூலம் உங்க கழுத்து கொஞ்ச கொஞ்சமா வளந்து சுவர விட நீளமாயிடும்(!).


ய்ய்ய்.... இவள பாக்கவா பரம்பரபரம்பரயா காத்து இருந்தோம்

அது போல தான் , இந்த பெடக்சுல கண்ணு matter( இன்னும் நிறைய அதிசயங்கள் இது போல இருக்கு , வேறு ஒரு தொடர் மூலம் ( எத்தன ? ) அதை பற்றி அப்புறம் பார்ப்போம் ) ஒரு உயிரினத்தின் உயிரை/சந்ததியை எதிரியிடம் இருந்து காத்து கொள்ள or அதன் சந்ததி தழைத்தோங்க evalution மூலம் அது தனது உருவத்தில் மாற்றத்தை கொண்டு வருகிறது .

ஒரு "முடி"யும் புரியல டாக்டர்,

Freeஆ விடுங்க ,

உங்களுக்கு mutation மூலமாவோ அல்லது வேறு எதன் மூலமாவோ கைல கண்ணு ( gun இல்ல )வருதுன்னு வச்சுக்குவோம் , அது உங்க இனத்தோட survival லுக்கு துணையா இருந்துச்சுனா அதை இயற்கை சந்ததி சந்ததி யா வர அனுமதிக்கும் ( அது உங்களுக்கு சற்றே தீங்கு விளைவித்தாலும் ) . எடுத்துக்காட்டு - sickle cell anemia in African population (இது ஒரு பெரிய கதை , நல்லா இருக்காது , அதுனால விட்ருவோம் ).

கைல கண்ணு இருந்தா எப்புடி டாக்டர் நன்மை பயக்கும் ,

பயக்கும் .... கைல கண்ணு இருந்தா …

1.தலைய திருப்பாம பரீட்சை ஹால்ல கைய நீட்டி காப்பி அடிக்கலாம்

2.முதுகு அரிச்சா கையா நீட்டி ஏன் அரிக்குதுன்னு பாத்துக்கலாம்

3.போர்க்களத்துல பதுங்கு குழியில எதிரியின் வருகையை கைய நீட்டி பாத்துக்கலாம்

4.சந்துல காசு விழுந்தா கைய நீட்டி கண்டுபிடிக்கலாம்

5.(நீங்க ரொம்ப மோசமா யோசிச்சீங்களே அத கூட செய்யலாம், ஆனா நான் நல்ல பையன்)

இன்னும் புரியலையா ? அப்ப போடு வேற ஒரு பதிவை (நண்பேன்டாவுல ஆரம்பிச்சு evalutionla போய் முடிஞ்சிருச்சு , நான் இப்பிடி தான் எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ கொண்டு போய்டுவேன் , இருந்தாலும் பொறுத்துகிட்டு படிங்க).போதும் இத்தோட நிறுத்திக்க…

அடுத்த பதிவில் வேறு ஒரு நண்பேன்டா வோடு சந்திப்போம் evolution in நண்பேன்டா?

true natpu 

வகைகள்:

12 பேர் சொல்றாங்க...

 1. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  வாரே வா ......... உங்கள மாதிரி ஆள்தான் தேடிகிட்டு இருந்தோம்....... அருமை டாக்டர்..... தொடருக்கு தொடர் மெருகேறுது..........

 2. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  // { எங்க அண்ணன் ஒரு பிரபல blogger (அப்பிடினு அவனே சொல்லிக்குவான் //

  ???????????????????????

 3. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  கைல கண்ணு மேட்டர் சூப்பர் ...... நினைத்து பார்க்கவே கிளிகிளுப்பாக இருக்கு......

 4. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  யோவ் அட்மின்...... பதிவுக்கு வலது பக்கம் ..... பல கிரௌண்ட் காலியா கெடக்கு..... போஸ்ட் பாடியா(Body Of the post-width) கொஞ்சம் பெருசாக்குங்க......

 5. எஸ்.கே என்ன சொல்றாருன்னா:

  ரொம்ப நல்லாருக்கு இந்த மாதிரி நட்புடன் ஒருத்தருக்கொருத்தர் உதவிடும் விலங்கினங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் கொஞ்சம் உதாரணங்கள் சொல்லியிருக்கலாமே!
  அந்த பொய்க் கண் விசயம் ரொம்பவே சுவாரசியம்!

 6. க ரா என்ன சொல்றாருன்னா:

  யாரிந்த கட்டுரையின் ஆசிரியர்...

 7. Dr.Dolittle என்ன சொல்றாருன்னா:

  எஸ்.கே சார் ,அடுத்த பதிவுல நிறைய நண்பேன்டாs பத்தி சொல்றேன் , டெனிம் சார் எங்க அண்ணன் உண்மையிலேயே நல்லா எழுதுவான் , இருந்தாலும் அவன் ப்ளொக்ல ஈ ஓட்டிகிட்டு தான் இருக்கான் ,க ரா சார் ,இத நான் தான் எழுதுனேன் , நான் ஒரு walking doctor (கால்நடை மருத்துவர் )

 8. Ganesan என்ன சொல்றாருன்னா:

  நண்பன்டா! (இன்றிலிருந்து நான் உங்களுக்கு!) நீங்கள் மிகச் சிறந்த மருத்துவ ஆசிரியராக வேண்டும் என்பது என் ஆசை! உங்களைப் போன்ற ஒருவரிடம் மருத்துவம் பயிலவும் ஆசை!(இந்த ஜென்மத்துல முடியாது). கொன்னுட்டீங்க பாஸ்!!!I Love U

 9. வால்பையன் என்ன சொல்றாருன்னா:

  வாவ்!

 10. சமுத்ரா என்ன சொல்றாருன்னா:

  அருமை

 11. chandru என்ன சொல்றாருன்னா:

  பட்டுப்பூச்சி மேட்டர் நானும் எழுதியிருக்கேன் படிச்சுப்பாருங்கள். http://chandroosblog.blogspot.in/2011/03/11.html

 12. DR என்ன சொல்றாருன்னா:

  Semma matter pa...

Leave a Reply