நான் நாலு வருஷமா பலரோட பதிவுகள தொடர்ந்து படிச்சுட்டு வர்றேன் ஆனா அதிகமா யாருக்கும் கமெண்டேதும்  போட்டதில்ல .எனக்கு புத்தகங்கள் அதிகமா படிக்கும் பழக்கம் எல்லாம் கிடையாது ஆனா பதிவுலகம் மூலமா நான் தெரிஞ்சுகிட்டது ஏராளம் நான் சின்ன வயசுல இருந்தே  தீவிரமான சினிமா ரசிகன் தமிழ் படங்கள் நெறைய பார்ப்பேன் அதுக்குப்பிறகு தியேட்டர் போற வயசு வந்ததும் நிறைய ஆங்கில படங்கள் பாக்க ஆரம்பிச்சேன்.

ஆனா மதுரை மாதிரி ஊர்ல ரிலீஸ் ஆகுற ஆங்கில படங்கள் எல்லாமே பொதுவா மசாலா ரகமாத்தான் இருக்கும் நானும் அந்த மாதிரி படங்கள் தான் பாத்துட்டு வந்தேன் நான் பத்தாவது படிக்கும் போதே மலேனா பார்த்துட்டேன்(நன்றி:ஜீ ஸ்டுடியோ  )ஆனா அப்ப நான் பார்த்தப்ப அத ஒரு பிட்டு படம் ரேஞ்சுக்கு தான் நெனச்சுட்டு இருந்தேன்.விகடன்ல உலக சினிமா பத்தி வந்தப்பகூட அந்த வயசுல அதெல்லாம் மொக்கையாபட்டது அதுனால அத படிச்சதில்லை.ஆனா எனக்கு முதல் முதலா உலக சினிமாவ அறிமுகப்படுத்தினது பதிவுலகம் தான்.எனக்கு கொரிய த்ரில்லர்கள அறிமுகப்படுத்தினது பதிவுலகம் தான் கிம் கி டுக்க அறிமுகப்படுத்தினது பதிவுலகம் தான். சென்னை போன்ற பெருநகரங்கள்ல உலக சினிமா பத்தின விழிப்புணர்வு அதிகமா இருக்கலாம் அங்க நெறையா டிவிடி கடைகள்ள உலக சினிமா கிடைகுதுங்கறதே எனக்கு ஆச்சர்யமான விஷயம் பதிவுலகம் மூலமாத்தான் அது தெரியும்  .இங்க மதுரைல அதுக்கான வாய்ப்புகள் எனக்கு தெரிஞ்சு குறைவே.இங்க டிவிடி கடைகள்ள நாம  ஏதாவது வாங்க போனா BF வேணுமா சார்னு நெறையா கடைகள்ள கேப்பாங்க என்னை மாதிரி ஆளுங்களுக்கு உலக சினிமாவ அறிமுகப்படுத்தியதுக்கு பதிவுலகிற்கு நன்றி.
                                                           
நானும் பல தடவ கவனிச்சுருக்கேன் பதிவுலகுல அப்பப்ப கேங் வார் வரும் நிஜமாவே அது தமிழ் சினிமாவையே மிஞ்சும் ரகமா இருக்கும் ரெண்டு  தரப்புல இருந்தும்  அடுத்து என்ன ஆக்ஷன் வரும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கு பாருங்க ச சான்சே இல்ல போங்க.ஆனா பல சமயங்கள்ல   விமர்சனம் என்கிற பேர்ல ரொம்ப கீழ்தரமா போய் அனானி பின்னூட்டம் போடறதெல்லாம் வருத்தமாத்தான் இருக்கும்.இந்த புது முயற்சி நல்ல முயற்சியா அமையனும் ஆனா இதுவும் எக்காரணம் கொண்டோ கேங் வாருக்கான களமா அமையாம பார்த்துக்கணும்.நான் இது வர ஒரே ஒரு பதிவுக்கு தான் கமெண்டே போட்ருக்கேன் ஆனா என்னையும் இவ்ளோ பெருசா எழுத வச்சதுல தான் உங்களோட வெற்றியே.இந்த பதிவு ரொம்ப அமசுரிஷா இருக்கலாம் சாரிங்க நான் இதுக்கு முன்னாடி இவ்ளோ பெருசா எழுதுனதேயில்ல.இந்த நல்ல முயற்ச்சிக்கு எனது  வாழ்த்துக்கள்.


பி.கு. நான் ஹாலிவுட் பாலா அண்ணனோட பதிவெல்லாம் தொடர்ந்து படிச்சுட்டு வந்தேன் ஆனா என்ன காரணம்னு தெரியல அவர் திடீர்னு பதிவு போடறத நிறுத்திட்டாரு அவர் இங்க மீண்டும் பதிவு எழுத ஆரம்பிச்சா நல்லா இருக்கும்.வாசகர் விருப்பம்!!

வகைகள்:

6 பேர் சொல்றாங்க...

 1. Lathika says:

  இதுயாரென்று தெரியவில்லை.Draftக்கு வந்தது. எவ்வித மாறுதலுக்கும் உட்படுத்தாமல் வெளியிடுகிறோம்.

  மொத மொத..ஒருத்தர் எப்புடி எழுதியிருக்கார்.நன்றி பாஸ்......சூப்பர்..எல்லாரும்...அடுத்தடுத்து இப்புடி எழுதித் தள்ளுங்க....

 2. பவர் ஸ்டார் என்ன சொல்றாருன்னா:
  This comment has been removed by the author.
 3. மகேஷ் என்ன சொல்றாருன்னா:

  the admins wish has / is coming true..
  welcome folks!!!!
  congrats to admins !!

 4. இந்திரா என்ன சொல்றாருன்னா:

  முதல் பதிவே அமர்க்களமா இருக்கு.
  தொடர வாழ்த்துக்கள்.

 5. Lathika says:

  @மகேஷ்
  பாஸ்..........கொஞ்சநாள்ல எல்லாருமே admins தான்...பொறுத்திருந்து பாருங்கள்.

  @இந்திரா
  வாழ்த்துக்களுக்கு நன்றி.


  எதுனா எழுதி எல்லாரும் அனுப்புங்க.........

 6. Lathika says:

  // இந்த புது முயற்சி நல்ல முயற்சியா அமையனும் ஆனா இதுவும் எக்காரணம் கொண்டோ கேங் வாருக்கான களமா அமையாம பார்த்துக்கணும். //

  எப்பா.யாருப்பா நீ...........பேர சொல்லாம எழுதி அனுப்பிருக்க.........ரைட்டு.................பேராமுக்கியம்...

  அப்பறம்..Gang war...வெங்கடேஷ் நடிச்ச தெலுங்கு படம் தான.....ஹி.......ஹி.....அதெல்லாம் இங்க ஒண்ணும் வராது.கவலையேபடாதீங்க...

  அடுத்த தடவ நீங்க எழுதி அனுபபுறதுல "வாசகர்" என்ற வார்த்தை இருந்தா, அப்பதிவு பிரசுரிக்க படமாட்டாது..............ஆமா.......

Leave a Reply