முதல் பாவம்

2010 ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில், எண்டர்டெய்மெண்ட் ஏரியாவில் நடந்த சில முக்கியமான நிகழ்வுகள்:

 • iPhone, iPad மாதிரியான எலக்ட்ரானிக் சாதனங்களை, இனி அதை வாங்கியவர்கள் சட்டப்பூர்வமாக அன்லாக் செய்து கொள்ளலாம் என அமெரிக்க அரசாங்கம் அறிவித்தது. இரண்டாவது நாளே…. www.jailbreakme.com வெப்சைட் புத்துயிர் பெற்று, ஆப்பிளுக்கு ஆப்பு வைக்க, லட்சக்கணக்கான iPhone-கள் ஒரே நாளில், AT&T தொலை தொடர்பு நிறுவனத்திடமிருந்து விடுதலை பெற்றன. ஏற்கனவே கன்னாபின்னா கோபக்காரரான ஸ்டீவ் ஜாப்ஸிற்கு அன்று வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டிருக்கலாம்.

 • அடுத்த இடி சோனி மீது விழுந்தது. XBOX 360, Wii போன்ற வீடியோ கேம் கன்சோல்களை மாடிஃபை செய்து, அதில் பைரேட்டட் விளையாட்டுகளை விளையாட முடிந்தவர்களுக்கு, PS3 –ஐ மட்டும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக, வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனங்களின் செல்லப் பிள்ளையாக வலம் வந்த PS3-ஐயும் மாடிஃபை செய்யும் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் + வியாபார நோக்க ஹார்ட்வேர் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வெளியாகின.

 • ராதிகா மட்டும், 20th Century Fox நிறுவனத்தின் ஓனராக இருந்திருந்தால்… மேடை போட்டு மூக்கை சிந்த மட்டுமே நேரமிருந்திருக்கும். 20th Century Fox நிறுவனத்திற்கும், பைரசிக்கும் அப்படியொரு ராசி. சமீபத்திய கணக்குகளை மட்டுமே கவனித்தாலும், 2005-ல் Star Wars Episode III : Revenge of the Sith, 2007-ல் Stargate: The Ark of Truth, 2009-ல் X-Men: Wolverine, என வரிசை கட்டி, படங்கள் படங்கள் இணையத்தில் வெளியான பிறகுதான், தியேட்டருக்கு தலை வைக்கும்.இந்த இருபதாம் நூற்றாண்டு நரியின் லேட்டஸ்ட் மூக்கு சிந்தல்: Vampires Suck (படமும்தான்).

 • "ஈராக்கில் நடந்த என் வாழ்க்கைச் சம்பவத்தைத்தான் படமாக எடுத்தார்கள். ஆனால் அதற்க்காக என்னிடம் எந்த அனுமதியையும் பெறவுமில்லை, மற்றும் அதற்கான சன்மானத்தையும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் எனக்கு அளிக்கவில்லை". இதை சொன்னது சார்ஜண்ட் ஜெஃப்ரி சார்வர். படம்?  ஆஸ்கர் சென்ஷேசன் : The Hurt Locker.

 • "யாருடைய கதையை வேண்டுமானாலும் நாங்கள் படமெடுப்போம். அது எங்களின் முதல் அமெண்ட்மெண்ட் உரிமை" – இதை சொன்னது படத்தயாரிப்பாளர்கள். அதில் கேதரின் பிகலோவும் ஒருவர். ஆனால், இவர்களே.. The Hurt Locker படத்தை இணையத்தில் தரவிறக்கிய ஒரு லட்சம் பேரின் IP அட்ரஸை வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமா, ISP-க்களுக்கு நெருக்கடி கொடுத்து, வீட்டு முகவரியை பெற்று, அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

 • ஜூன் 30, 2010. அமெரிக்காவின் Immigration and Customs Enforcement (ICE) என்ற அரசாங்க அமைப்பு, அதிரடியாக களத்தில் குதித்தது. "Operation in Our Sites" என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்வில், பைரேடட் திரைப்படங்களை வெளியிடும், ஒன்பது இணைய தளங்கள் அரசாங்கத்தால் முடக்கப் பட்டன. இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா?

இந்த ICE, அமெரிக்காவின் Homeland Security -யின் கீழ் வரும் அமைப்பு. இதை செய்ய வைத்தது……..? அமெரிக்க திரைப்படங்களுக்கு ரேட்டிங் தரும் MPAA. MPAA-வை சொல்ல வைத்தது டிஸ்னி! சிவில் சட்டத்தின் கீழ் வரும் பைரசிக்கும், தேசிய பாதுகாப்பில் ஈடுபட வேண்டிய அமைப்பிற்கும் என்ன சம்பந்தம்?

அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும், காணாமல் போகும் மக்களின் எண்ணிக்கை பற்றியோ, மெக்ஸிகோவிலிருந்தும், தென்னமரிக்க நாடுகளில் இருந்தும் முறைகேடாக குடியேறும் மக்களைப் பற்றியோ, சட்ட விரோதிகளைப் பற்றியோ கவலைப்படாத Homeland Security, ICE, FBI போன்ற அரசாங்க அமைப்புகளுக்கு, பைரசி மேல் அப்படியென்ன அக்கறை?

சரி விடுங்க, இது போய்கிட்டே இருக்கும். அரசாங்கங்களுக்கு குண்டு வைப்பவனைப் பற்றி என்னக் கவலை?

'உலகப் பொதுமறை படப்' பிரியர்களுக்கு Private என்னும் ஐரோப்பிய போர்ன் கம்பெனி பற்றித் தெரிந்திருக்கும். அந்த கம்பெனியின் CEO பெர்த் மில்டன், கொடுத்த ஒரு பேட்டியில் சொன்னது:
"பைரசியுடனான யுத்தத்தில் வெற்றி சாத்தியமேயில்லை. உண்மையைச் சொன்னால்… நாங்கள் தோற்றுக் கொண்டிருக்கிறோம். இனி பைரசியை எதிர்ப்பதை விட்டுவிட்டு அதிலிருந்து எப்படி விளம்பரம் பெற முடியும் என்றுதான் யோசிக்க வேண்டும். எங்கள் வீடியோக்களை அதிகம் பைரேட் செய்கிறார்கள் என்றால்…. அதை நிறைய பேர் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். அது எங்களுக்குத்தான் விளம்பரம்". 
மேலே பைரசியுடன் போராடிக் கொண்டிருக்கும் பெரும்பாலான கம்பெனிகளின் சொத்து மதிப்பு பல பில்லியனில். ஆனாலும் விடுவதாயில்லை. தங்கள் பண அதிகாரத்தை பாதாளத்துக்கும் கீழ், பத்தடி பாய்ச்சி, இந்த பைரசியை தடுக்கப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் இந்த தயாரிப்பு நிறுவனங்கள் இத்தனை பணத்தை சம்பாதிக்க வழிவகுத்த ஒரு நபர், இதே பைரசி பிரச்சனையில், தன் மொத்த உழைப்பையும், சொத்துக்களையும் இழந்து, வறுமையில் இறந்தார். 

பைரசியின் முதல் பலி.

*****

இவர்
Marie-Georges-Jean Méliès. சுருக்கமாக Georges Méliès. எப்படிச் சொன்னாலும் வாயில் நுழையப் போவதில்லை என்பதால், நாம் இவரை 'இவர்' 'இவர்' என்று மட்டும் கூப்பிடலாம்.

இவர் பிறந்தது பாரீஸில். இவர் தொழில் மேஜிக் வித்தைகள்காட்டுவது. இவரின் உபத் தொழில், சினிமா இயக்குனர் + தயாரிப்பாளர். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை?? 531. எஸ் மிஸ்டர் இராம நாராயணன்; இவர் உங்களையெல்லாம் தூக்கி சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது.

ஸ்டேஜில் இவர் காட்டிய மேஜிக் வித்தைகளும், அன்றைய பத்து நிமிடப் படங்களும் இந்த 531 கணக்கில் வருமென்றாலும், இன்று ஒரு மணி நேரம் ஓடும் படங்களுக்கான தொழில்நுட்பக் கஷ்டங்கள், அந்த பத்து நிமிடத்திற்காக அவர்கள் அனுபவத்திருக்கலாம். ஆனாலும் எண்ணிக்கைகளுக்காக எண்ணப் பட்டவரில்லை இவர்.

ஸ்பெஷல் எஃபெக்ட் (FX) என்ற வார்த்தை கூட பழக்கமில்லாத பொழுதே, தனக்கு தெரிந்த மேஜிக் வித்தைகளை, மூவி கேமராவில் எப்படி பயன்படுத்த முடியும் என்ற சாத்தியத்தை சோதித்து, அதில் பெற்றவர் இவர். அந்த நாளிலேயே திரையில் ‘கலர்’ காட்டியவர்.

Double Exposure, Time-Lapse, Stop Trick போன்ற பல டெக்னாலஜிகளை 1896-லேயே தனது படங்களில், கண்டுபிடித்து, உபயோகித்த முன்னோடி. மக்கள் கொட்டாவி விட திறந்த வாயை, தனது பெரும்பாலான FX படங்களின் மூலம் ஃப்ரீஸ் செய்ய வைத்தவர். எங்க வீட்டுப் பிள்ளையில், எம்ஜியார்(கள்) ஸ்டைலாக மூக்கு சொறியும் Split Screen முறைகளை கண்டுபிடித்தவர்.

முதல் FX
இன்று பார்ப்பதற்கு மிகக் க்ரூடாகத் தெரியும், இவர் தயாரித்து இயக்கிய உலகின் முதல் சய்ன்ஸ் ஃபிக்ஷன் படமான A Trip to the Moon (1902) படத்தை இன்றும் பார்த்து வாய் பிளப்பவர்கள் ஏராளம். 1896-ல் இவர் ஆக்ஸிடண்டலாக கண்டுபிடித்து, A Trip to the Moon படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் Stop Trick ஷாட்களெல்லாம் இன்றும் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

இத்தனை தொழில்நுட்பங்களை சினிமாவில் அறிமுகப் படுத்தியவருக்கு, ஒரு தொழில்நுட்பம் மட்டும் கைகூடவில்லை. அது இவரது படத்தை, காப்பி எடுப்பதை தடுக்கும் ப்ரொட்டக்‌ஷன்.

நூற்றுகணக்கில் இவர் படங்களின் சுருள்கள் காப்பியெடுக்கப் பட, உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். படங்களை மட்டுமல்லாது, இவரது தொழில்நுட்பங்களையும் இவரின் போட்டியாளர்கள் கண்டுபிடித்து உபயோகிக்க ஆரம்பித்தனர். வரவு மட்டும், இவர் கணக்கில் வரவேயில்லை.

A Trip to the Moon படம் மட்டும், பைரேட் செய்யப்படாமல், அதை பார்த்த மக்களின் எண்ணிக்கையையும், அவர்கள் தியேட்டருக்கு கொடுத்த காசையும், இன்று வரையிலும் சினிமாவில் உபயோகிப்படும் அவரின் தொழில்நுட்ப டெக்னிக்குகளுக்கு காப்பிரைட் பணத்தையும் கணக்கிட்டால், நிச்சயம் இவர் அன்றைய பில் கேட்ஸாகவோ அல்லது Xநிதி மாறன்களாகவோ இருந்திருக்க வாய்ப்புள்ளது.

*****

ஆனால், இன்று பைரசிக்கு எதிராக இத்தனை சட்டங்கள் இருந்துமே ஒன்றும் கழற்ற இயலாத பொழுது, ட்ரேட்மார்க்/காப்பிரைட் சட்டங்கள் எதுவுமே இல்லாத அன்றைக்கு என்ன செய்திருக்க முடியும்?! கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் விழ ஆரம்பித்தவர், கடைசியில் கஞ்சிக்கும் வழியில்லாமல் போனார். 1913-ல் கம்பெனி திவாலானது.

நேரம் பார்த்து சனி சிரிக்க, வந்தது முதலாம் உலகப் போர். இருந்த கொஞ்ச நஞ்ச படச் சுருள்களையும், ப்ரெஞ்ச் – ஜெர்மன் படை வீரர்கள் சொக்கப்பனை கொளுத்திவிட……., பின்நாளில் சின்னதாக ஒரு கூட்டம் போட்டு, மானாட மயிலாட ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியதோடு சரி!! சினிமா உலகத்தின் குல வழக்கப்படி, மொத்தமாக மறக்கப்பட்டார்…, FX-ன் தந்தையான....

இவர்!

13 பேர் சொல்றாங்க...

 1. crap.. இப்பதான்... போஸ்ட் பண்ணின பின்னாடி ஒன்னு நோட் பண்ணுறேன். :(

 2. கொழந்த என்ன சொல்றாருன்னா:

  என்னாச்சு....

 3. கொழந்த என்ன சொல்றாருன்னா:

  // இப்பதான்... போஸ்ட் பண்ணின பின்னாடி ஒன்னு நோட் பண்ணுறேன் //

  2010 - ஜூலை, நிகழ்வுகளா ??

 4. புக் டிஸைன்

 5. Keanu என்ன சொல்றாருன்னா:

  @ கேப்டன் - புக் டிஸைன்////

  இதுனா ரொம்ப லேட்...., அந்த புக் ஸ்டில் இல்லைனாலும் எல்லாருக்கும் தெரியும் யாரு எழுதுறதுன்னு.....,

 6. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  இங்க இத போடலாமான்னு தெரியல,நானும் ஏதோ நமக்கு தெரிஞ்சத எழுதலாம்னு ஸ்டார்ட் பண்ணி அப்படியே நிறுத்தி வச்சு இருக்கேன்,வீட்ல அடிக்கடி சொல்லுவாங்க எதையாவது உருப்படியா செஞ்சு இருக்கியான்னு ,அது உணமைதான் போல

  http://denimmohan.blogspot.com/2010/10/vfx.html

 7. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  முதல் பாவத்திற்கும் ,தலைப்புக்கும் ஏதாவது சம்பத்தம் இருக்கா ?

 8. டெனிம் என்ன சொல்றாருன்னா:

  Jason And The Argonauts - படத்தைப் பற்றி கண்டிப்பாக எழுதிவீங்கன்னு எதிர்ப்பார்கிறேன்

 9. @க்யானு : இல்ல... தெரியுதோ. தெரியலையோ.. அந்தப் பேரை இங்க யூஸ் பண்ணக்கூடாதுன்னு நினைச்சிட்டு இருந்தேன். டிஸைனை மாத்த சோம்பேறித்தனமா இருக்கு. அடுத்ததுக்குள்ள மாத்திடுறேன்.

  @ டெனிம் : நீங்க எழுதறேன்னு சொல்லுங்க தல. உங்களை விட இதை எழுத யாருக்கு தகுதியிருக்குன்னு நினைக்கறீங்க? (அதை அப்பவே படிச்சிட்டேன்). அப்புறம்.. Jason and the Argonauts 5/6 - வந்திருக்கனும்.

  இதோட 3-பார்ட் வந்தப்ப Jason பத்தி... ஏற்கனவே இயக்குனர் சால்ஸ் எழுதியிருந்தார். நீங்களும் எழுதிட்டீங்க. அதை அப்படியே காப்பி/பேஸ்ட் பண்ணிட வேண்டியதுதான்.

  வேணும்னா ப்லாகரிஸம்-ன்னு திட்டிக்கங்க. :)

  தலைப்புக்கு சம்பந்தம் இருக்கு.. ஆனா நேரடியான அர்த்தத்தை தேடினா கிடைக்காது.

 10. கொழந்த என்ன சொல்றாருன்னா:

  // முதல் பாவத்திற்கும் ,தலைப்புக்கும் ஏதாவது சம்பத்தம் இருக்கா //

  கொடும.............இவர் கூடெல்லாம் ஒரு சேர்க்கை தேவையா ??

 11. கொழந்த என்ன சொல்றாருன்னா:

  // நிலாச் சோறு //

  மார்புக்கு ரெண்டு இன்ச் கீழ........வலி வர மாதிரி இருக்கு....என்ன அர்த்தம் அதுக்கு ?

 12. Subash என்ன சொல்றாருன்னா:

  மிக்க சந்தோஷம்

Leave a Reply