-                                   கேள்வி பதில் (பகுதி 2)


                                                                    

"யாரு பராக்கா..சொல்லுங்க ரொம்ப நாளா Phone பண்ணவே இல்ல..மிச்சல் சௌக்கியமா...ஒயிட் ஹவுஸ் மழை பெஞ்சா ஒழுகுதுனு சொன்னீங்களே சரி பண்ணிடீங்களா??"

" "


"ம்..நா நல்லா இருக்கேன்...வேறென்ன விசேசம்.."


" "

"என்னது..நம்ம ப்ளாக்ல வர்ற கேள்வி பதில ஒங்க ஊர் பாடதிட்டத்துல சேக்கனுமா..அங்கெல்லாம் சமச்சீர் கல்வி கெடையாதா..."


"  "

"ஓ அப்டியா..இருங்க எதுக்கும் நா நம்ம மன்மோகன்ட்ட கேட்டு சொல்றேன்..."


" "

"இல்ல இல்ல ..அவர் பார்லிமென்ட்ல தான் பேச மாட்டாரு ..என்கூடலாம் நல்லா பேசுவாரு..தங்கமான ஆளுங்க..."

***********************************************************************************

மேற்கொண்டு எதுவும் பேசத்தேவையில்லை. நேரா கேள்வி பதிலுக்கு போயிருவோம்.

1) அது ஏன் கைது செய்பவர்கள் எல்லோரையும் திகார் ஜெயிலில் அடைக்கிறார்கள்???     (பாண்டி,பாளையங்கோட்டை) 
  ம்..அங்க புதுசா நூறு போதி மரம் நட்டிருக்காங்கலாம். எல்லா பய புள்ளைகளும் ரிலீஸ் ஆகுரப்போ புத்தராகி வந்திருவாய்ங்களாம். அதான்.


2) கடந்த ஆட்சி காலத்தில் செத்தவர்களின் சாவு செல்லாது என அம்மா அறிவிக்கப்போகிறாராமே???   (சித்தன், உன்னயேநீஎண்ணிபாருபட்டி)
  இதுக்கே இப்டி சொல்றீங்க கண்ணகி சிலைய Hongkongக்கு அனுப்பப் போறதாக் கூட ஒரு நியூஸ் இருக்கு..என்ன செய்றது...


3) உங்கள் ப்ளாக்ஐ தொடர்ச்சியாய் படித்துவந்தால் எயிட்ஸினால் சாவில்லை என விளம்பரம் கொடுத்துள்ளீர்களே இது எந்த வகையில் நியாயம்????  (புள்ளிராஜா ,கில்மாபுரம்)
 யோவ் நம்ம ப்ளாக்க தொடர்ச்சியா படிச்சா ரத்தம் கக்கி அவனே செத்திருவான். அப்புறம் எப்டி எயிட்ஸினால சாவான். கரக்ட் தானே ...


4) என் மகன் எவ்வளவு திட்டினாலும் தலையாட்டிக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம அப்டியே உட்காந்திருக்கான்..என்ன செய்வது ???  (நல்லதங்காள்,நாராயணபுரம்)
ரொம்ப சந்தோசமான விஷயம்மா இது. உங்க புள்ளைக்கு பிரதமர் ஆகுற எல்லாத்தகுதியும் வந்திருச்சு.ஜமாய்ங்க..


5) அந்த மாதிரி சர்வே ஒன்னு சொல்லுங்களேன்...ப்ளீஸ் ??  (காஞ்சவன்,வேலூர்.)
டேய் ஒன்னத்தாண்டா ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்...எங்கள பாத்தா ஒனக்கு எப்டிடா தெரியுது...இல்ல இதுக்கு முன்னாடி நாங்க அந்த வேல பாத்திட்டு இருந்தோமா...இவரு பெரிய கலெக்டர்... இவருக்கு சர்வே எடுத்து குடுப்பாங்களாம்...


6) அமேசான் காட்டில் வாழும் "அரபகிமோ"ங்கிற இனப்பறவை தன் வாழ் நாள் முழுக்க கக்காவே போகாதாமே??   (அறிவழகன், அணைப்பட்டி.)
இந்த நாத்தம் பிடிச்ச கேள்விய கேட்ட பாரு ஒனக்கும் ஒரு வாரத்துக்கு போகாதுடா... தைரியமான ஆளா இருந்தா அடுத்த தடவ முழு அட்ரஸ் எழுதி இந்தமாதிரி கேள்வி கேளுடா...


7) ச்சே இப்படி விம்பிள்டன் இறுதி போட்டில ரபால் நடால் தோத்துட்டாரே??    (சார்லஸ்,பக்கிங்காம்) 
ஏன் செய்ச்சிருந்தா ஒம்பொண்ண கட்டிக்குடித்திருப்பியா?? அவனே வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு ஜகஜம்னு போயிட்டான்.ஒனக்கென்ன ஒப்பாரி??


8) ஒரு நாள் டிஸ்கவரி சேனல்ல வர நிகழ்ச்சில கரடிகள் பேசும்னு சொன்னாங்க...இது எந்த அளவு உண்மை??  (வீரப்பன்,சத்தியமங்களம் )
நூறு சதவீதம் உண்மை. டான்செல்லாம் கூட ஆடும். வீராசாமி படம் பாக்கலையா...


9) நம் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகிறதே இதை கண்டு உங்களுக்கு ரத்தம் கொதிக்கவில்லையா???( மனோகரன்,பராசக்திபுரம்) 
அத விடு. ஒரு நூறு ரூபா தள்ளுனேன்னா இந்த கேள்விய முதல் கேள்வியா போட்டிரலாம்..என்ன சொல்ற ...


10) "தமிழர்களே நான் கடலில் போட்டாலும் கட்டுமரமா மிதப்பேன்"ங்கிற  கலைஞர் டிவி விளம்பரம் எப்படி?    (வீராசாமி, ஆற்காடு)
   அதுல போனா மட்டும் நம்ம தமிழக மீனவன சுடாம இருப்பாய்ங்களா....


                                                            
11) நடந்து முடிந்த தேர்தலில் உங்களுக்கு பிடிபட்ட உண்மை என்ன??      (அரிச்சந்திரன், அரண்மனைப்புதூர் )
  வடிவேலுவின் நகைச்சுவையை மக்கள் வெகுவாக ரசிக்கிறார்கள்.


12) ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித் பற்றி என்ன சொல்றீங்க ??     (தீனா, அத்திப்பட்டி )
 உங்காத்தாவ முதல்ல பாரு 
  மங்காத்தவ பிறகு பாத்துக்களாம்ங்கிறாரு...நல்ல விஷயம் தானே 


இவண் 
சிவன்
ivansivan@gmail.com
3 பேர் சொல்றாங்க...

 1. எஸ்.கே என்ன சொல்றாருன்னா:

  //ஒரு நூறு ரூபா தள்ளுனேன்னா இந்த கேள்விய முதல் கேள்வியா போட்டிரலாம்//

  :-))

 2. கருந்தேள் கண்ணாயிரம் என்ன சொல்றாருன்னா:

  மறுபடியும் அட்டகாசம் :-) . ... சூப்பரப்பு

 3. வில்லனின் விநோதங்கள் என்ன சொல்றாருன்னா:

  இதுலயும் எழுதியது லத்திகானு மேலே இருக்கு.

  கீழே இவண் சிவன்னு இருக்கு...

  என்னமோ போங்க...


  //ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித் பற்றி என்ன சொல்றீங்க ?? (தீனா, அத்திப்பட்டி )
  உங்காத்தாவ முதல்ல பாரு
  மங்காத்தவ பிறகு பாத்துக்களாம்ங்கிறாரு...நல்ல விஷயம் தானே ///

  நல்ல வேளை அஜித்தை கிண்டல் செய்யலை, செஞ்சிருந்தா நான் எதாச்சும் செஞ்சிருப்பேன்...

Leave a Reply