இந்தியா..!
மக்கள் தொகையில் மட்டுமல்ல கொட்டிகிடக்கும் செல்வங்களிலும் கோடிகள் தான் இந்தியாவில் கடவுளைக் கும்பிடுவதற்கும் ,கலப்பையை தூக்குவதற்கும் உயர்ந்த எங்கள் கைகளை வெள்ளையர்களை கும்பிட சொன்னதற்கு வெகுண்ட மக்களின் கோபம் தான் சுதந்திரம்.எத்தனையோ போர்கள் நடந்திருந்தாலும் இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் "சிப்பாய் கலகம்".(இப்போ எங்க மக்கள் கோபத்தை மறந்து ரொம்ப நாளாச்சு)...
சிப்பாய் கலகம். மே 10,1857
மே 10 ,1857 இந்தியாவில் மீரட் என்ற இடத்தில ஏற்பட்ட மக்கள் புரட்சியே முதன்முதலில் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக இந்தியர்கள் திரண்ட முதல் இந்திய விடுதலை போர்.இந்தியாவில் விடுதலை வேட்கைக்கு வித்திட்ட போர்.அதன் பிறகு இந்தியர்களை ஒருங்கிணைப்பது ஒன்றும் கஷ்டமான விஷயம் அல்ல ..
சுதந்திரம் தான் எங்களுக்கு உயிர் மூச்சு மற்றதெல்லாம் வெறும் பேச்சு என்பதை மட்டும் பிறக்கும் போதே இவர்களுக்கு தெரிந்திருந்தது என்னவோ தெரியவில்லை விடுதலைக்காக உயிரைக்கூட விடுவதற்கு எப்போதும் தயாராக இருந்த "தலைவர்கள்" பிறந்தார்கள்.(இந்த வார்த்தையை இப்போது சொல்லகூடகேவலமாகஇருக்கிறது).
காந்தி,பகத்சிங்,கோகுலே,நேதாஜி,நேரு,திருப்பூர்குமரன்,வ.உ.சி,பாரதியார்,ராஜாஜி....
நம்நாட்டில் ஜனனமான தலைவர்கள் ஏராளம்.உப்புசத்தியாகிரகம்,ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் எண்ணிலடங்கா போராட்டங்கள்.ஆயிரக்கணக்கானோரின் இரத்தத்தில் உருவானது நம் தேசியக்கொடி.
அந்தக் காலத்தில் நம் மக்களை ஒன்று திரட்டுவதற்கு தன்னமில்லாத தலைவர்கள் இருந்தார்கள்.அவர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு இருந்தது (இப்போது மதிப்பு என்பது நம் தலைவர்களின் சொத்துக்களுக்கு மட்டுமே உண்டு ). ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் பொது நலம் மட்டுமே குறிக்கோள் என போராடி ,எண்ணற்ற தியாகங்களுக்கு பிறகு பெற்ற அந்த பிரசவ நாள் 15.08.1947
ஆம்.. இந்தியா சுதந்திர நாடானது.இனி நாம் சுவாசிக்கும் காற்று வெள்ளையர்கள் விடும் மூச்சுக்காற்று அல்ல..நம் இந்திய சொந்தங்கள் விடும் மூச்சுக்காற்று.
என்னடா நாம் பெற்ற சுதந்திரத்தைப் பற்றி இப்படி சுருக்கமாக எழுதிவிட்டேன் என நினைக்க வேண்டாம் .சுதந்திரம் பெற்ற கஷ்டத்தை எங்களை பெற்றவர்கள் உணர்ந்து கொண்டார்கள் .ஆனால் இனி பெறப்போகும் கஷ்டத்தை நாங்களும் ,எங்கள் வருங்காலமும் உணரவே இந்த சுருக்கம்.
இனிதான் ஆரம்பம்....
வகைகள்:
அரசியல்,
இந்திய சுதந்திரம்,
தொடர்
யாருக்கும் ஒரே பதிவா எழுத விருப்பம் இல்ல போல,நிறைய தொடர்கள் வரும் போல,இவைகளை கொஞ்சம் அட்மின் ஒழுங்கு படுத்தினால் நன்றாக இருக்கும்
டெனிம் - பள்ளி வரலாறு புத்தகம் படிச்ச மன நிலை...,
// யாருக்கும் ஒரே பதிவா எழுத விருப்பம் இல்ல போல,நிறைய தொடர்கள் வரும் போல,இவைகளை கொஞ்சம் அட்மின் ஒழுங்கு படுத்தினால் நன்றாக இருக்கும் //
ஏங்க நீங்கதான அட்மின் ??? நீங்களே செஞ்சிறலாமே..........
1806- Vellore Revolt, 1846 - 47: British - Sikh revolt,
இதெல்லாம் ஏன் வுட்டுப் போச்சு.....எழுதியவர் கொஞ்சம் கவனிக்கவும்.........contentல எனக்கு நெறைய மாற்றுக் கருத்துகள் இருக்கு. முடிஞ்சா நைட் பாப்போம்.....
ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தாலும் ,இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிக மாநிலங்களில் மக்கள் ஈடுபட்டது சிப்பாய் கலகத்தில் மட்டுமே!.அதனால் ,இப்புரட்சி முதல் இந்திய விடுதலை போர் என பெயர் பெற்றது.அதனாலதான் ,அத மட்டும் பதிவு செய்திருக்கிறேன்..கொழந்த ...
இந்திய சுதந்திரம் மட்டுமில்லை. அதன் வரலாறு கூட மறந்து போச்சி. ஆனா ‘சிப்பாய் கலகம்’தான் முதல் இந்திய சுதந்திரப்போர்=ன்னு படிச்ச நியாபகம் இருக்கு. அதுவும் இதை படிச்ச பின்னாடி.
கொழந்தக்கு ‘கலவித் தொழிற்சாலை’ மாதிரி எனக்கு இந்தத் தொடர் ஆகப்போகுது. என்ன சொல்லுறதுன்னு தெரியலை’-ன்னுதான் கமெண்ட் போடனும் போலயிருக்கு.
சுதந்திரம் பெற்றோம்னு சொல்லும் போது, ‘அடிமையாய் இருந்தோம்-ங்கற நினைவு அருவருப்பா இருக்கு.
அந்தக்காலத்துல மிராசுதார்கள், வைப்பாட்டிகள் வெச்சிருப்பாங்க.அவுங்களுக்கு வயசாயி நோய்வாய்ப்பட்டா, அவுங்க இருக்குற வீடு இதுமாதிரியான விஷயங்களை மட்டும் குடுத்து தொரத்தி விட்டுருவாங்க.....மைண்டனன்ஸ் செலவு ஜாஸ்தில....அதுமாதிரி தான் நாமளுக்கு குடுத்து சுதந்திரமும்..
வயசான வப்பாட்டிய கழட்டி வுட்ட மாதிரிதான்..........அங்க ரெண்டாம் உலகப் போருனால செம செலவு...இங்க இதுவேறயான்னு வச்சுக்கொங்கன்னு குடுத்தாங்க...1900வாக்கில் நாம சுதந்திரம் வாங்கியிருந்தா பெருமை கர்வம் கொள்ளலாம்.இந்த சுதந்திரம் பிரிட்டிஷ்ட இருந்த காங்கிரஸ்க்கு கை மாற்றப்பட்டது..அவ்வளவே..இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்சது தான..
அதுனால நம்மாளுங்க கஷ்டப்பட்டத - செஞ்ச வேளைகள கொறச்சு மதிப்பிடல..முன்னமே செஞ்சிருக்கலாம்..அதான் என் ஆதங்கம்...இந்த உங்கள் பதிவுக்கும் என் கமென்ட்டுக்கும் சம்பந்தம் இருக்கானு தெரியல....சொல்லன்னுமு தோணுச்சு
இந்த உங்கள் பதிவுக்கும் என் கமென்ட்டுக்கும் சம்பந்தம் இருக்கானு தெரியல....சொல்லன்னுமு தோணுச்சு -
இத விட தெளிவா யாராலேயும் சொல்ல முடியாது கொழந்த....,
நம்ம பள்ளி வரலாறு புத்தகங்களும் சரி கல்லூரி வரலாற்று புத்தகங்களும் சரி சுதந்திர போராட்டம்னா சிப்பாய் கழகம், ஜான்சி ராணி,காந்தி வருகை, நேதாஜி வெளியேற்றம், பகத் சிங்கின் தூக்கு, பெரியார் வெளியேற்றம், நேருவின் வருகை,ஜாலியன் வாலா பாக், தண்டி யாத்திரை, அஹிம்சை இம்சை, இப்படி ஒரு டெம்ப்ளேட்தான் வரும் அதுல ரொம்ப சிறு பகுதியாதான் இரண்டாம் உலக போர் வரும்,
உண்மையா இந்தியா சுதந்திரம் அடைஞ்ச வழிய தெரிஞ்சுக்கணும்னா இரண்டாம் உலக போரினை பற்றியும் அந்த போரினால் பிரிட்டன் அடைந்த பொருளாதார சீரழிவு அதனால் ஏற்ப்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றி படிச்சா நாம சுதந்திரம் அடைஞ்ச வழி எப்படி பட்ட வழின்னு தெரியும்,
அதுக்கா நம்ம ஆளுங்க கொஞ்சம் பேர் பட்ட உண்மையான கஷ்டத்த குறை சொல்லவில்லை....,
அதே நேரத்துல சுதந்திரம் அடைஞ்ச உடனேயே அந்த பலன உண்மையா சுதந்திரத்திற்கு பாடுபட்ட [காந்தி உட்பட] எவரும் அனுபவிக்க வில்லை...,
தபால் பெட்டிக்குள்ள தீ குச்சி கொளுத்தி போட்டவனா பெரியா ஆள் ஆனாங்க உண்மையா கஷ்ட பட்ட தாத்தாங்கனா பென்சன் கூட கிடைக்காம போய் சேர்த்தாங்க.....,
yov....keanu..
இது அப்புடியே ரொம்ப பெரிய கான்டரவர்சியலான கமென்ட்...இததான் போடவா போடவான்னு கேட்டியா........சாவடீங்க.....................
எனக்கும் இந்த டவுட் இருந்துச்சி. எப்பவும் நம்ம சுதந்திரத்தை ஒரு உணர்ச்சி வடிவமாவே பார்க்க பழக்கி வைக்கப் பட்டிருக்கோம். ஆனா இவங்க போகும் போது சுரண்டிகிட்டு போனதும், சண்டையை மூட்டினதும் நினைவில்லாம போய்டுச்சி.
இஸ்ரேல் இன்னொரு உதாரணம்.
// ஆனா இவங்க போகும் போது சுரண்டிகிட்டு போனதும், சண்டையை மூட்டினதும் நினைவில்லாம போய்டுச்சி //
பாஸ்...போகும்போது...ஒண்ணும் சொரண்டுன மாதிரி தெரியல..வுட்டுட்டு தான் போனாங்க.....அதான் அந்த வயதான வப்பாட்டி உதாரணம் (வப்பாட்டி - வார்த்தை பிரயோகத்திற்கு மன்னிக்கவும்). அதான் எல்லாத்தையும் மொதவே உறிஞ்சு எடுத்தாச்சே...
மேலும் இப்ப their r not here physically அவ்வளவே....கலாச்சார ரீதியா, மொழி ரீதியா இன்னும் தாக்கம் இருக்கு..அதுதான் சில விசயங்களில் எனக்கு ஆபத்தாபடுது. Colonial hangover.....
சுதந்திரம் தருவதுன்னு ரெண்டு மூணு வருஷம் முன்னாடியே முடிவானதும்.. அப்பவே.. பல கப்பல்களில் சுரண்டினதா படிச்சிருக்கேன். அல்லது அப்படிதான் நினைவிருக்கு.
அப்புறம் இந்த கலாச்சாரம். பிரிட்டனை பத்தி தெரியலை. ஆனா அமெரிக்காவில் இது இன்னொரு லெவல்-க்கு போகுது. இங்கே கிடைக்கும் கலப்படமான பல நாடுகளை சேர்ந்த மக்கள் வாழ்கையும் - யாரு யாரை கல்யாணம் பண்ணியிருக்கங்கன்னு தெரியாததாலும்.. இன்னும் கொஞ்ச நாள்-ல யாரு வெள்ளைகாரன், யாரு இந்தியாகாரன்னு கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்-ன்னு சொல்லுறாங்க. பழக்கத்தில் மட்டுமில்ல. உருவத்திலும்.
உதாரணத்துக்கு ஹாலிவுட் பாலாவின் ஸ்பானிஷ் தோழியோட பூர்வீகத்தை எடுத்தா.. அதுல ஸ்பானிஷ், ஜெர்மன், அரபி -ன்னு உலக நாடுகள் பூரா கலந்திருக்கும்.
பிரபல பதிவர் - இஸ்ரேல் இன்னொரு உதாரணம்////-
எதுக்கு சுதந்திரம் அடைஞ்ச உடன எப்படி இருக்கணும் அப்படிங்குரதுக்கா....?
// சுதந்திரம் தருவதுன்னு ரெண்டு மூணு வருஷம் முன்னாடியே முடிவானதும்.. அப்பவே.. பல கப்பல்களில் சுரண்டினதா படிச்சிருக்கேன //
ஒருவேள..கப்பல்களில் எடைய சமன் படுத்த முன்னாடி மண்ன பயன்படுத்திகிட்டு இருந்தாங்க..ஒருதடவ உப்ப பயன்படுத்தி அது ப்ரிட்டைன்ல பிச்சுகிட்டு வியாபராம் ஆகி - அங்கிருந்து ஏற்றுமதி ஆகி, அப்பறம் மண்ணுக்கு பதில் உப்பு உபயோகிச்சு, அத நம்மாளுங்க எடுக்க தடா போட்டு, காந்த கொதிச்சு போயி உப்பு சத்தியாகிரகம் தொடங்கி - அத சொல்றீங்களா
//டெனிம் - பள்ளி வரலாறு புத்தகம் படிச்ச மன நிலை..., //
யோவ் நல்ல பாரும் பதிவ நா எழுதலா
யோவ் பதிவ மட்டும் போட்டுட்டு எங்கயா போன ?
டெனிம் - அட்லீஸ்ட் இதுகாச்சும் ரீப்ளே பன்னுரின்களே....,
எழுதியது டெனிம் ON 19 - AUG - இதுக்கு அர்த்தம் என்னாபா?
@பிரபல பதிவர்
//சுதந்திரம் பெற்றோம்னு சொல்லும் போது, ‘அடிமையாய் இருந்தோம்-ங்கற நினைவு அருவருப்பா இருக்கு...//
அப்போ அடிமையாக இருந்தோம்னு நினைக்கும் போது அருவருப்பா இருந்ததாக சொல்லும் பிரபல பதிவரே
இப்போது அதை விட ரொம்ப அடிமையா " நம்மாளுகுகளுக்கு" இருக்கோம் .....
உங்க குழந்தையை நீங்க அடிக்கிரதுக்கும் பக்கத்துக்கு வீட்டுக்காரன் அடிக்கிரதுக்கும் இருக்கும் வித்தியாசம். ஸ்பெல்லிங் மிச்டகே வராம எப்படி இந்த கூகுள்ல அடிக்கிறது?
@கொழந்த ...
//1900வாக்கில் நாம சுதந்திரம் வாங்கியிருந்தா பெருமை கர்வம் கொள்ளலாம்.//
இந்தியா ஒன்றும் ஏழை நாடு அல்லவே ...பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டை விடுவதற்கு...(ex:பத்மநாபசாமி கோவில் )
1900 க்கு முன்னாடி நாம சுதந்திரம் வாங்கி இருந்தால் இப்போ 112 வது சுதந்திர தினம் கொண்டாடி இருப்போம் ...வேற ஒண்ணும்
நடந்திருக்காது ...
//ஒருவேள..கப்பல்களில் எடைய சமன் படுத்த முன்னாடி மண்ன பயன்படுத்திகிட்டு இருந்தாங்க.//
ஏங்க.. என்னிக்காவது படிக்கிற புக் ல என்ன எடுத்துட்டு போனங்கன்னு இன்டெக்ஸ் போட்டு பார்த்திருக்கீங்களா? 'வளங்கள்'-ன்னு தான் சொல்லுவாங்க. நாமளேதான்... அதை.. 'தங்கம், வைரம், வைடூர்யம்'ன்னு எதையாவது கற்பனை பண்ணிக்கணும். இப்படி.. மண்ணு உப்பு-ன்னு டீடெயில் கொடுத்தா எப்படி?
ச்சே.. இதுக்கு பயந்துகிட்டு தான் யாரும் கமென்ட் போடுறதே இல்லை.. :)
//எழுதியது டெனிம் ON 19 - AUG - இதுக்கு அர்த்தம் என்னாபா?//
ஏங்க பதிவுக்கு கீழ -சரவணன் ன்னு இவர் கையெழுத்து போட்டிருக்கார். அதை விட்டுட்டீங்களே.
fx கூடத்தான் கருந்தேள் எழுதுறார். லத்திகா-ன்னுதானே சொல்லுது.
@ saravana - 1900 க்கு முன்னாடி நாம சுதந்திரம் வாங்கி இருந்தால் இப்போ 112 வது சுதந்திர தினம் கொண்டாடி இருப்போம் ...வேற ஒண்ணும்
நடந்திருக்காது ...
கண்டிப்பா கொண்டாடிருப்போம் ஆனா வேற மாதிரி
1. இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ்னா ஒண்ணா இருந்துருக்கும் [ஏன்னா அப்ப சொல்லிகுற மாதிரி பெரிய தலைங்கனா யாரும் இல்ல]
2.வேற எந்த காரணமும் இல்லாம நாம போராடி 1900 வாக்குல சுதந்திரம் வாங்கிருந்தா பிரிட்டிஷ்காரனோட எந்த பிரித்தாளும் கொள்கைகளையும் மதிச்சிருக்கமாட்டோம்.
3.யாரு கண்டா ஐரோப்பா மாதிரி ஒரே நாணயத்த அடிப்படயா வச்சி வேற வேற நாடா இங்க உள்ள மாநிலங்கள் இருந்திருக்கும்.
4. வேற்றுமையில் ஒற்றுமை அப்படின்னு வெளி உலகத்துக்கு மட்டும் சொல்லிகிட்டு உள்ளுக்குள்ள அடிச்சிகிட்டு இருக்க மாட்டோம்.
5. மொழி மற்றும் புவியியல் அமைப்பு சார்ந்த அரசியல் எல்லைகள் உருவாகிருக்கும்.
இப்படி பல விஷயம் இருக்கு....,
@பிரபல பதிவர் - தல அவர[டெனிம்] சும்மா கலாய்க்கலாம்னு பார்த்தா இப்படி பண்ணிடிங்களே...,
hahaha... :)
innum thoongalayaa..?
இல்ல வீக்எண்டுல கொஞ்சம் நேரம் ஆகும்....,
இதன் அடுத்த பகுதி எப்ப வரும்?
எழுதிகிட்டு இருக்கேன் ......இன்னும் கொஞ்ச நாளில் வரும்