போர்ன்மொழி
போர்னோக்ராஃபி என்பதை என்னால் விவரிக்க முடியாது. ஆனால் பார்த்தால் கண்டு பிடித்து விடுவேன்.
-ஒரு அமெரிக்க நீதிபதி, 1964

வரலாறு முக்கியம் அமைச்சரே

போர்னோக்ராஃபி : கிரேக்க மொழியில் இதன் அர்த்தம் 'விலை மாந்தர்களைப் பற்றிய இலக்கியம்' (literature of prostitutes). நாளடைவில் வளர்ந்து - சுருங்கி, அதற்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு விட்டன. இன்று எது போர்ன்'  என்பதற்கு ஏகப்பட்ட விளக்கங்களும் - குழப்பங்களும். நம்மைப் பொறுத்த வரை, போர்ன் என்பது விடியோ.  ஆனால்...

தியான நிலை
'Sexually Explicit'-ஆக கிடைக்கும் எந்த 'material'-லும் போர்னோகிராஃபி என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கம்.

அதாவது.. புகைப்படம், வீடியோ, ஆடியோ, புத்தகங்கள் மாதிரியான ஊடகங்கள் மூலமாக பார்ப்பதோ/படிப்பதோ/கேட்பதோ... இது அனைத்தும் 'போர்ன்'. நேரில் பார்க்கும் லைவ் செக்ஸ் ஷோக்களோ, ஸ்ட்ரிப்டீஸ்/காபரே மாதிரியான நடனங்களோ அல்ல.

உதாரணத்திற்கு, சாமியாரின் சல்லாபத்தை உங்களுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு கிட்டியிருந்தால்... அது போர்ன் அல்ல.  ஆனால் அதே காட்சியை, டிவியில் பார்த்திருந்தால்.. (சென்சாரில்லாமல்) யெஸ்... 'தட் ஈஸ் போர்ன்'. எனவே... மேலுள்ள அர்த்தங்களை நீங்கள் நம்பினால், 
  • புஷ்பா தங்கதுரை, பால குமாரன், அட நம்ம சாரு கூட (சாஃப்ட்) போர்ன் எழுத்தாளர் என்றாகி விடுவார்கள் (இவர் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர் இந்த கேட்டகரியில் வருவாரா?)
  • கருவிலிருக்கும் குழந்தைகளைத் தவிர 'நான் போர்ன் பார்த்ததில்லை' என யாரும் மாரோ, வயிறோ... எதையும் தட்டி சொல்ல முடியாது
அதே சமயம் 'எக்ஸ்ப்ளிசிட் மட்டும் போதாது. அது உங்களின் பாலுணர்ச்சியை தூண்ட வேண்டும்' என்கிறது இன்னொரு சப் கேட்டகரி. பிரச்சனை என்னவெனில், ஒருவரின் பாலுணர்ச்சி தூண்டப்பட 'எக்ஸ்ப்ளிசிட்'-டாக எதுவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இன்னொரு விதத்தில், எக்ஸ்ப்ளிசிட் மெடீரியல்கள் கூட நம் உணர்ச்சிகளை தூண்டமலே இருக்கவும் வாய்ப்புண்டு (இது பற்றிய இரண்டு டாக்குமெண்ட்ரிகள் பின்னொரு பொழுது). அப்படியென்றால் எது எக்ஸ்ப்ளிசிட் என்ற அடுத்த கேள்வி வரும். 

Its very tough to define, what is porn. ஒருவரது பார்வை, நிச்சயம் அடுத்தவரிடமிருந்து வேறு பட்டிருக்கும். இதன் அளவுகோல் இத்தனை வருடங்களில் எத்தனையோ முறை மாற்றியமைக்கப் பட்டு விட்டது. 1970-களில் 'ஹஸ்லர்' மேகஸினில் வெளியான புகைப்படங்களை விட, இன்றைய மலையாளப் படங்களின் போஸ்டர்கள் எக்ஸ்ப்ளிஸிடாக இருக்கும். எனவே எது போர்ன் என்பதற்கு சரியான விளக்கமில்லை என்பதே சரியான விளக்கம். If you like kinky anything...., you porn with it! 

இதே தமிழ் கூவும் பதிவுலகில், ஒரு பெரிய மகான் எழுதிய இலக்கிய கவிதை இப்பொழுது நியாபகத்திற்கு வருகிறது.
செக்ஸ் உணர்ச்சிகளும் 
அலர்ஜியைப் போல... 
சூரியனுக்குக் கீழுள்ள 
எதன் மூலமும் 
தூண்டப் படலாம்; 
சூரியன் உட்பட!
So what is porn then?

==========

எனி.. வே, எழுத வேண்டும் என நினைத்தது போர்ன் படங்களைப் பற்றியும், அதன் பின்னனிகளைப் பற்றியும். Lets stick with it.

பிள்ளையார் சுழி
மேற்கத்தியர்களின் போர்ன் படங்களின் வரலாறு ஆரம்பித்தது சுமாராக 150 வருடங்களுக்கு முன்!  ஒரு புறம் ஆங்கிலேயர்களின் கிறித்துவ ஆன்மீகம் இதை தடை செய்ய, இதன் இயல்பாகவே எழுந்த மக்களின் ஆர்வத்திற்கு, 1800-களில், கண்டு பிடிக்கப்பட்ட ஸ்டில் கேமரா, இன்றைய கலவித் தொழிற்சாலைக்கு பிள்ளையார் சுழியிட்டது. தொடர்ந்த தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்ற பாராக்களை எழுதின. அன்றிலிருந்து... இது வரை ஒளி-ஒலி ஊடகங்களை எந்த தொழிற்துறை சரியாக பயன்படுத்தியிருக்கிறதோ இல்லையோ, போர்னியவாதிகள் மட்டும் கிலுகிலுப்பையிலிருந்து கேஸியோ கடிகாரம் வரை எதையும் விட்டதில்லை.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டால், அமெரிக்கா இன்றும் 'கட்டுப்பெட்டி' நாடுதான். எத்தனைதான் 'free country, first amendment' அது இதுவென கதை விட்டாலும்... எங்கும் கன்சர்வேட்டிவ்-தனம்தான். அதிலும் செக்ஸ்? ஹ்ஹ்ஹ்ஹும்.. மூச்!!!! இப்படிப்பட்ட நாட்டில், போர்னாவது... ஒன்றாவது?! 

1920-களில் அமெரிக்கா தத்தித் தத்தி... மேற்கே போகும் ரயில்களை திரைப்படமாக எடுக்க ஆரம்பித்திருந்தது. ஆனால் ஃப்ரான்ஸ்...? இது போன்ற விசயங்களுக்கு ஃப்ரான்ஸ்தான் எப்பொழுதும் முன்னணி. 1920-களுக்கு முன்பே, Georges Méliès போன்ற ஜாம்பவான்கள் (FX- தொடரில் முதல் அத்யாயம்) ஃப்ரான்ஸின் திரையுலகை பல கட்டங்களுக்கு நகர்த்தி விட்டதில், அடுத்ததாக என்ன செய்யலாம் என யாரோ.. ரூம் போட்டு யோசிக்க...... முப்பது வருடங்களாக.. 'வெறும் ஸ்டில்லாய் உலா வந்த, 'ந்யூட் படங்களுக்கு மூவி கேமராக்கள் அறிமுகமானது. 

ஆரம்பத்தில் பாரீஸின் போர்ன் படங்கள் அதிக பட்சமாக ஆண்/பெண்கள் உடைகளை களைந்து (Striptease) உச்சா போவதைத்தான் (Squirt) காட்டிக் கொண்டிருந்தார்கள். பின் கொஞ்சம் கொஞ்சமாக குப்புறப்போட்டு செல்லமாக பின்புறம் தட்டுவது (BDSM), கிறித்துமஸ் தாத்தா கொடுக்கும் டில்டோகளை அவர் முன்பாகவே பரிசோதிப்பது (Fetish) என தங்களின் அறிவு விருத்தியையும், மக்களின் கலை ரசனையையும் வளர்த்தார்கள். அதுவும் போரடிக்க.... 

'பார்-க்கு வரும் இரண்டு பெண்களை, பார் அட்டண்டர், அட்டண்ட் செய்கிறார்' என்ற புரட்சிக் கருத்தில், 1928-ல் முதன் முதலில் ஒரு முழுமையான போர்ன் (threesome) வெளியானது. நீளம்.. 4 நிமிடங்கள். தலைப்பு Nudist Bar-ஓ என்ன எழவோ. ஆனால் நிச்சயம் வெற்றிப் படமாகத்தான் இருந்திருக்கும். 

ஃப்ரான்ஸில் போர்ன் புகைய ஆரம்பித்தது. Mr.X அதற்கு தூபம் போட ஆரம்பித்தார்.

========

இந்த Mr. X-ன் பெயர் கடைசி வரை யாருக்கும் தெரியவில்லை. இவர் யாரிடமும் சொன்னதுமில்லை. இராம நாரயணனையும் விட வேகமாக படமெடுத்தார் (5-10 நிமிடங்கள்தான் படத்தின் நீளம்). எடுத்துக் கொண்டேயிருந்தார். படத்தின் ஹீரோக்கள் அவரின் நண்பர்கள். ஹீரோயின்களாக தெரு முனையில் கொக்கி போடுபவர்கள். லொகேஷன்.... அதே தெரு முனை ஹோட்டல்கள். இவருக்கு ஒரு கெஸ்ட் ரோல் (கதவைத் தட்டும் கணவன், கண் தெரியா பாட்டி). 
இன்றைக்கும் நாம் போர்ன் படங்களில் பார்க்கும், பிட்ஸா டெலிவரி பையன், கணவனின் நண்பன், மனைவியின் தோழி, பூந்தோட்டக் காவல்காரன், போன்ற பல ஒன் லைனர்களுக்கு இவரே சொந்தக்காரர்.
திருவாளர் எக்ஸ்
இதே நேரத்தில்.. ஃப்ரான்ஸ் இன்னொரு புரட்சியையும் செய்தது. அது அமெரிக்காவில் நிறவெறி கால் விரித்தாடிய நேரம். கருப்பினத்தவர்களை தீண்டத்தாகதவர்களாக இவர்கள் ஒதுக்கி வைத்திருந்த பொழுதே.. அவர்களையும் போர்ன் படங்களில் ஃப்ரான்ஸ் அறிமுகப்படுத்தியது.

ஆனால்... அப்பொழுதிய பிரச்சனை 'ஜெஸ்ஸி ஜேனின்' முக்கல் முனகல் சத்தமில்லாமல், 16-18 ஃப்ரேம்களில் எடுக்கப்பட்டு, அதை 24 ஃப்ரேம்களுக்கு காட்டிக் கொண்டிருந்தார்கள்.  FX - ல் காந்தித் தாத்தா வேகமாக நடந்த அதே எஃபெக்ட், போர்ன் படங்களில். எங்கே.. கற்பனைக் குதிரையை கொஞ்சம் தட்டுங்கள் பார்ப்போம்!

முதல் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட பல்வேறு நாட்டவர்களின் தொடர்பும், உறவுகளும் 'இந்த' விசயத்தில் கொஞ்சமாவது அமெரிக்காவிலும், ஹாலிவுட் படங்களிலும் 'லிபரேஷனை' கொண்டு வந்தது. எரோடிக் படங்கள் மெய்ன்ஸ்ட்ரீமை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அதுவும் கூட, சைடில் நின்று கொண்டு பட்டத்து ராணிக்கு சாமரம் வீசும் நிர்வாணப் பெண் மாதிரியான மொக்கை சீன்கள் மட்டுமே. 

ஆனால் இதைக்கூட பொறுக்க முடியாத அன்றையல் கல்சர் போலீஸ்களான, சர்ச் ஃபாதர்கள், 'கடவுளின் பெயரால்' கட்டுப்படுத்த முயல... அவர்களின் அம்பாக அத்தனை பெற்றோர்களும் அரசாங்கத்தின் மீது பாய்ந்தார்கள். விளைவு.....? 

ஹாலிவுட்டிற்கும்.. அமெரிக்கர்களின் காம இச்சைகளுக்கும் பிடித்தது சனி. அவர்களின் மெய்ன்ஸ்ட்ரீம் எரோடிக் சினிமாவென்பது, ஹீரோயின் ரோடோரத்தில் முழங்கால் வரை ஸ்கர்டை தூக்கி லிஃப்ட் கேட்கும் காட்சியோடு முடிந்து போக, கலவித் தொழிற்சாலை பாதாளத்திற்குள் பதுங்கியது.

சனி....?!!

16 பேர் சொல்றாங்க...

  1. தமிழினியன் என்ன சொல்றாருன்னா:

    ஒரே நேரத்தில் இரன்டு தொடர்களை எழுதுவது இப்போ வாடிக்கையா?

    இல்லை fx-01 அங்கயே நின்னுடுமா?

  2. பாலா என்ன சொல்றாருன்னா:

    fx-04 varai kandippaa varumnu Karundhel sonnaar

  3. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    இந்த பதிவ திரும்ப திரும்ப ரெண்டு தடவ படிக்க வேண்டியிருக்கு.சிரிச்சுகிட்டே படிச்சதுனால ஒண்ணும் புரியல...........ரெண்டாவது தடவ படிச்சும்.............ஒண்ணும் முடியல..........

    இதுபோன்ற புது சமாச்சாரங்கள படிக்கும் போது என்ன மாதிரியான கமென்ட் போடுறதுன்னு தெரியல............

  4. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    // நாளடைவில் வளர்ந்து - சுருங்கி, அதற்கு பல அர்த்தங்கள் //


    இதுபோன்ற வார்த்தை விளையாட்டுகள் டெலிப்ரேட் அட்டெம்ப்ட்டா.....இல்ல.....நீங்க விகல்பம் இல்லாம எழுதுனத நாங்கதான்...தவறா புரிஞ்சிகிட்டோமா...............

  5. Unknown என்ன சொல்றாருன்னா:

    taboo ஸ்டில் பார்த்துவிட்டு ஏதோ அதைப் பற்றி எழுதி இருப்பீர்கள்ன்னு ஆர்வமா வந்தா ,அதைவிட அருமையான தகவல்கள், தபூ அந்தகாலத்தில் கண்டிப்பாக பட்டய கெளப்பி இருக்கும்,

  6. பாலா என்ன சொல்றாருன்னா:

    Hmm.. nallavanukku kaalamillai... :(

  7. Unknown என்ன சொல்றாருன்னா:

    இதையெலாம் படிக்கும் போது,நான் இனியும் எழுதணுமான்னு தோணுது,என்ன எழுத்து நடை

  8. பாலா என்ன சொல்றாருன்னா:

    Denim,

    I believe the above info are collected from that documentary [Taboo : The beginning of Erotic Cinema]. The guy who wrote this post, just ripped of from this doc without proper credit.

  9. பாலா என்ன சொல்றாருன்னா:

    Karundhel, ungalai denim thitturaar paarunga. :)

  10. Unknown என்ன சொல்றாருன்னா:

    விரைவில் குலேபகாவலியில் புது கவிதை வித்தகர்,சினிமா பாடலாசிரியர்,கலியுக புருஸ்லி தமிழ் நாட்டையே திருப்பி ,மடக்கி ,சுருட்டி ,உருட்டி ,போடுமளவுக்கு ஒரு பதிவை எழுத போகின்றார் என்ற தகவலை அவரின் அனுமதியுடன் அடியேன் கூறிக் கொள்கிறேன்

  11. பாலா என்ன சொல்றாருன்னா:

    Excellent news!!! :)

    Who is that?

  12. Unknown என்ன சொல்றாருன்னா:

    நம்ம நாட்டுல பொறந்து ஹாலிவுட்ல தொறந்து, சாரி வளர்ந்த பிரியா ராய் ,200 க்கும் மேல் போர்ன் படங்கள் நடித்து மிகப் பிரபலமாக இருக்கின்றாறேமே

  13. Unknown என்ன சொல்றாருன்னா:

    அந்த யாருக்கும் அறிமுகம் இல்லாத பிரபலம் தன பெயர வெளிய சொல்ல வேனாம்குது ,விரைவில் பதிவில் கலக்க வாழ்த்துக்கள்

  14. Unknown என்ன சொல்றாருன்னா:

    சாரு கூட (சாஃப்ட்) போர்ன் எழுத்தாளர் என்றாகி விடுவார்கள் (இவர் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பவர் இந்த கேட்டகரியில் வருவாரா?)

    ஆமாம் வருவாரா

  15. பாலா என்ன சொல்றாருன்னா:

    //நம்ம நாட்டுல பொறந்து ஹாலிவுட்ல தொறந்து, சாரி வளர்ந்த பிரியா ராய் ,200 க்கும் மேல் போர்ன் படங்கள் நடித்து மிகப் பிரபலமாக இருக்கின்றாறேமே//

    We may talk abt this in future posts.

  16. நவநீதன் என்ன சொல்றாருன்னா:

    இத்தொடரில் இந்திய போர்ன் இண்டஸ்ட்ரி பற்றி தகவல்கள் வருமா?? எஸ்பெஷலி மலையாள போர்ன் சினிமா.இது என் நண்பனுக்காக கேட்டது அவன் இந்த விஷயத்தில் ஒரு சுதேசி இந்திய போர்ன் மட்டுமே பார்பான்:).நீங்க அதை பற்றியும் எழுதுனா ரொம்ப நல்லா இருக்கும் .மேலும் ஒரு சந்தேகம் சாப்ட்கோர் ஹார்டுகோர் இவற்றுக்கு சரியான தமிழ் சொற்கள் என்ன??

Leave a Reply