Most child abuse is committed by the person the child trusts. |
நிலவைப் பார்த்து வானம் சொன்னது “என்னை தொடாதே”. வானம் இல்லாமல் நிலவும் இல்லை… நிலவு இல்லாத வானமும் இல்லை. ஆனால், பல நேரங்களில் “என்னை தொடாதே” என்ற வார்தைகளை உரக்கச் சொல்வதே நன்று.
இன்றய தேதியில் ஊழலைப் பற்றிய செய்திகளுக்கு ஈடாக வரும் செய்தி குழந்தைகள் கற்பழிப்பைப் பற்றியது. இது புது வகைக் குற்றம் இல்லை. மக்களிடையே exposure முன்பைவிட இப்போது அதிகம். ஆனால் அதே அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றதா என்றால் இல்லவே இல்லை.
வெகு நாட்களாக, எந்நாளும் என் மனதைப் பாரம் அடையச் செய்யும் விஷயம் குழந்தைகள் வன்கொடுமை – Child Abuse. பெற்றோர்கள் சராசரியாக நம்பும் விஷயம் ”நம்ம வீட்டு குழந்தைக்கு எதுவும் ஆகாது” என்பது. எவ்வளவு அபத்தம்? நீங்கள் செய்தியாக படித்த அவலத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையும் ஏதோ ஒரு வீட்டின் குழந்தைதான். அது நாளை உங்கள் வீட்டின் குழந்தையாகக்கூட இருக்கலாம். உஷார்.
வருமுன் காப்பது குழந்தைகள் வன்கொடுமையை வெகுவாக குறைக்க உதவும் அல்லவா? முந்தய தலைமுறையினர், ”வயதுக்கு வருவது” என்பதைப்பற்றிக்கூட தம் வீட்டு சிறுமிகளுடன் பேசுவதில்லை, பின்பு எப்படி வன்கொடுமை பற்றி பேசுவார்கள்? நாம் புது தலைமுறையினர் அல்லவா? நாமும் அவர்களைப்போல் இருந்தால் சமூகத்தை எப்படி காப்பாற்றுவது? நம் வீட்டுக் குழந்தைகள்தானே நாளைய சமூகம்?
உலகத்திலேயே பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடுகளில் இந்தியா நான்காம் இடம். அதைப்போல் குழந்தைகள் வன்கொடுமையிலும் இந்தியா முன்னிடத்தில் தான் இருக்கின்றது. நான் குழந்தைகள் வன்கொடுமை என்று சொல்லும்பொழுது பெண்குழந்தைகளைப் பற்றி மட்டும் சொல்லவில்லை. ஆண்குழந்தைகளும் இதிலிருந்து தப்பிப்பதில்லை.
என்னைப் பொறுத்தமட்டில், திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுதான்… ஆனால் நம் பொருட்களை பத்திரப்படுத்திவைப்பதும் நம் கடமை. நம் குழந்தைகளை எவ்வாறு பத்திரப்படுத்துவது? பயிற்றுவித்தல் தான் இதற்கான முதற்படி. நான்கு வயதிலிருந்து இருக்கும் சிறுபிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்கள் கற்றுத்தரும்போதே நல்ல தொடுதல் – தீய தொடுதல் (Good Touch and Bad Touch) பற்றிப் பேசவேண்டும், கற்றுத்தரவேண்டும்.
தீய தொடுதல் என்றால் என்ன? எந்தத் தொடுதல் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாததாக – அருவருப்பாக இருக்கிறதோ அதுதான் தீயதொடுதல். குறிப்பாக, மார்பு, பின்புறம் மற்றும் பிறப்புறுப்புப் பகுதிகளை, பெற்றோர் மற்றும் மருத்துவர் மட்டும் தான் தொட அனுமதிக்க வேண்டும். மருத்துவர் கூட, பெற்றோர் கண்பார்வையில் மட்டுமே குழந்தைகளைப் பரிசோதிக்க வேண்டும். அதைப்போல், பெற்றோரும் குழந்தைகளின் சுகாதார காரணத்துக்காக மட்டுமே அப்பகுதிகலை தொடலாம். அப்படித் தீயதொடுதல் நிகழ நேரிட்டால், உடனே அக்குழந்தை அலற வேண்டும். அதோடு நம்பகமாக எண்ணும் நபரிடம் இதைப்பற்றி உடனே தெரிவிக்கவேண்டும். இதை சிறுவர்க்குத் தவறாமல் கற்றுத்தருவது மிக்க அவசியம்.
இதுவரை கூறியதை மட்டும் கற்றுத்தந்தால் போதாது. இத்தகைய தீய தொடுதல் எவரிடம் இருந்தும் நேரிடலாம். அறிமுகம் இல்லாத ஆட்கள்தான் அவர்களுக்கு இன்னல் ஏற்படுத்துவார்கள் என்ற எண்ணத்தைக் குழந்தையிடம் திணிக்கக்கூடாது. பல சமயங்களில் மிகவும் அறிமுகமான ஆட்களாலேயே இக்கேடு சம்பவம் நிகழ்கிறது. அம்மா-அப்பா, மாமா, சித்தப்பா, ட்யூஷன் அண்ணா, பக்கத்து வீட்டு அங்கிள், எதிர் வீட்டு அக்கா, ஸ்கூல் பஸ் டிரைவர், பள்ளி ஆசிரியர் … யார் வேண்டுமானாலும் அவர்களைத் துன்புறுத்தலாம். இதை, குழந்தைகளுக்கு அவர்களைக் கலவரம் அடையச் செய்யாமல் கற்றுத்தரவேண்டும். அதேபோல், பள்ளிகளிலும் இது கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும்.
எனக்குத் தெரிந்தவரையில், மேற்கூறியவற்றைக் கற்றுத்தருவதுடன் இன்னொன்றும் சொல்லித்தரலாம். தனக்கு மட்டும் அல்லாமல், வேறு எவருக்கும் இதுபோன்ற இன்னல் நேரிட்டால் உடனடியாக நம்பகமான பெரியவரிடம் சொல்லி அவர்களைக் காப்பாற்றக் கற்றுத்தரக் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல தொடுதல் – தீய தொடுதல் அகியவற்றைச் சொல்லிக்கொடுப்பதற்கு ஒரு sample ஒளிப்படம் கீழே இருக்கிறது.
-- ஷ்ரீ
வகைகள்:
child abuse,
shree,
சமூகம்,
வன்கொடுமை
ரொம்ப அவசியமான கட்டுரை...யாரும் இது பற்றி எழுதி நான் படித்ததாக நினைவில்லை. என்னளவில் நான் ரொம்பவும் கொடுமையான விசயங்களாக நினைப்பது, தனக்கு என்ன நடக்கிறது என்பதை உணர முடியாத மனிதர்களின் - உயிரினங்களின் மேல் கட்டவிழ்த்தப்படும் வன்முறை.பெரும்பாலும் மனநிலை சமநிலையில் இல்லாதவர்கள் - குழந்தைகளே இதற்கு பலியாகின்றனர்.
பள்ளிகளில் இதுபோன்ற வகுப்புகள் இருக்கின்றவா என்று தெரியவில்லை(இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது)
vada
பல பள்ளிகளில் ஒழுங்கா கழிப்பறை வசதி கூட இல்லாதது ஞாபகம் வந்து தொலைகிறது. பள்ளிகளில் மட்டுமல்ல, வெளியிடங்களில் எங்குமே பெண்களுக்கென்று முறையான இதுபோன்ற வசதிகளை காண்பது வெகு அரிது. அதனாலேயே வேலைக்கு செல்லும் பல பேர் தண்ணீர் அதிகம் உட்கொள்வதில்லை என்று படித்திருக்கிறேன்.
அட...பதிவ படிச்ச effectல தமிழ்லயே கமெண்ட் போட்டுட்டேன்......1960களின் தமிழ் படம் பார்த்த உணர்வு......ஹி...ஹி.....
@ கொழந்த - உங்கள் பின்னூட்டங்கள், கட்டுரைக்குப் பக்கபலமாக அமைகின்றன. நீங்கள் சொன்னபடி, பள்ளிகளில் இதுபோன்ற வகுப்புகள் மிகக்குறைவு. இக்கட்டுரையை எழுதிய ஷ்ரீ என்னும் பதிவரின் பள்ளியில் இவ்வகுப்புகள் இருந்தன. ஆனால், பெற்றோர்கள், வீட்டுப்பாடமாக இதைக் கற்றுக்கொடுக்கத் தங்களுக்குக் கூச்சமாக இருந்ததாகச் சொன்னதால், அவ்வகுப்புகள் தூக்கப்பட்டன.
இந்த நிலை மாறி, எல்லாப் பள்ளிகளிலும் இதனைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
@ மணியடி முதலாளி - சாம்பார் மற்றும் சட்னியை விட்டுவிட்டீர்களே அன்பரே?
// மணியடி முதலாளி //
அன்பரே....இது போன்ற ஆபாசமான வார்த்தைகள் உபயோகிப்பதை தவிர்க்கலாமே....
மேல இருக்கும் கமென்ட்ட சீரியஸா எடுத்துகினு யாரும் பின்னூட்டம் போட்டுராதீங்க சாமிகளா.....
//பல பள்ளிகளில் ஒழுங்கா கழிப்பறை வசதி கூட இல்லாதது ஞாபகம் வந்து தொலைகிறது. பள்ளிகளில் மட்டுமல்ல, வெளியிடங்களில் எங்குமே பெண்களுக்கென்று முறையான இதுபோன்ற வசதிகளை காண்பது வெகு அரிது//தமிழக அரசு பட்ஜெட்டில் இலவச ஆடு,மடிக்கணினி இதோட சேர்த்து கிராமப்புற பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்க நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்
//பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்க நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்//
அது உண்மையாகவே நல்ல விஷயம் தான்.அதை சுயவுதவிக் குழுக்களிடம் இருந்து வாங்குனா அது இன்னும் நல்ல விஷயம்..நெறைய பேருக்கு பிரயோசனமா இருக்கும்..
---------------
எனக்கு தெரிஞ்சு, நைட் பஸ்ல - எவ்வளோ காசு குடுத்து போனாலும் பெரும்பாலும் இயற்கை உபாதைகள போக்க சரியான இடம் இருப்பதில்லை. அதான் உண்மை.உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும்
எக்ஸலண்ட் கட்டுரை. கொழந்த சொன்னதுபோல், இதை யாரும் எழுதினதில்லைன்னு நினைக்கிறேன்.
அமெரிக்காவில் இன்னொரு வசதி இருக்கு. நம் ஏரியாவில் வசிக்கும் செக்ஸ் அஃபெண்டர்ஸ் பத்தின டீடெய்லை.. இணையத்தில் பார்த்து தெரிஞ்சிக்க முடியும். பெரும்பாலான ஸ்கூல்களில் கேமரா வசதியிருக்கும்.
இதையெல்லாம் தாண்டியே இங்கே இத்தனை குற்றங்கள் நடக்கும் போது, இந்தியாவில் இது பத்தின விழிப்புணர்ச்சி நிச்சயம் தேவை.
//அமெரிக்காவில் இன்னொரு வசதி இருக்கு. நம் ஏரியாவில் வசிக்கும் செக்ஸ் அஃபெண்டர்ஸ் பத்தின டீடெய்லை.. இணையத்தில் பார்த்து தெரிஞ்சிக்க முடியும்.// அதனால தான் will heum மாதிரி ஆளுங்க இந்தியாவுக்கு வந்து தப்பு பண்ணறாங்க.child sexual abusea வச்சு நம்ம ஊர்ல அச்சமுண்டு அச்சமுண்டுனு ஒரு படம் வந்துச்சு அத எத்தன பேர் பார்தாங்கனு தெரியல:(
Child sexual abuse தவிர இன்னும் எத்தனையோ வழிகளில் அவங்களை அப்யூஸ் பண்ணிட்டுத்தான் இருக்கோம்.
கற்றுக்கொடுக்கிறோம்னு சொல்லி, நம்மோட கருத்தை அவங்க மேல் திணிப்பது கூட child abuse தான்.
இப்படி பார்த்தால், நாம அத்தனை பேரும், நம் பெற்றோர்/உறவினர்/ஆசிரியர் -ன்னு அத்தனை பேராலும் அப்யூஸ் செய்யப் பட்டவங்கதான்.
நாமும் இதை நம் குழந்தைகளுக்கு செஞ்சிட்டு இருக்கோம். குறிப்பாய் மதம்-கடவுள் பெயரில்.
ரொம்ப நல்ல கட்டுரை!
இந்த child sexual abuse என்பது பல குழந்தைகளுக்கு நடப்பது என்னவென்றே புரியாது. சில குழந்தைகள் இதனால் பாதிக்கப்பட்டு பிற்காலத்தில் இதனால் பாதிக்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. என் புரொஃபசர் ஒருவர் சொன்னது: ஒரு பெண் குழந்தைக்கு சிறிய வயதில் இப்படி நடந்துள்ளது. ஆனால் அவள் அதை வீட்டில் சொல்லவில்லை பயந்தாள். நாளடைவில் அவள் அதை மறந்து விட்டாலும் பெரியவளான பின் திருமணம் நடந்த பிறகு தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பிறகு உளவியல் நிபுணரிடம் அழைத்துச் சென்ற பின்தான் அச்சம்பவம் நடந்ததும், அது அவளறியாமலேயே ஆழ்மனதில் இன்னும் பாதித்துக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.
நிறைய பேர் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம்.
துணிஞ்சு பதிவுல போட்டதுக்கு பாராட்டுக்கள்.
//கற்றுக்கொடுக்கிறோம்னு சொல்லி, நம்மோட கருத்தை அவங்க மேல் திணிப்பது கூட child abuse தான்.
இப்படி பார்த்தால், நாம அத்தனை பேரும், நம் பெற்றோர்/உறவினர்/ஆசிரியர் -ன்னு அத்தனை பேராலும் அப்யூஸ் செய்யப் பட்டவங்கதான்.
நாமும் இதை நம் குழந்தைகளுக்கு செஞ்சிட்டு இருக்கோம். குறிப்பாய் மதம்-கடவுள் பெயரில்//
நிதர்சனமான உண்மை!!
நல்ல கட்டுரை. குட் டச், பேட் டச் பற்றி எல்லாரும் அவசியம் தெரிஞ்சுக்கனும்.
நல்ல விழிப்புணர்வு பதிவு...
குட் டச், பேட் டச் பற்றி மீடியாக்கள் நினைத்தால் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வை உண்டாகலாம்...