"when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth"
ஹோம்ஸின் மறக்க இயலா வசனம் இது.
எனது சிறுவயதிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று - ஆர்தர் கானன் டாயலின் ஷெர்லாக் ஹோம்ஸ்.அவரது அத்தனை கதைகளையும் படித்திருக்கிறேன் (மீண்டும் மீண்டும்). இக்கதைகளில் எதாவது ஒன்றைப் படிக்கத் தொடங்கினாலே, அந்த இருளும் பனியும் சூழ்ந்த இங்கிலாந்து நம் கண்களில் நிழலாடும்.ஒவ்வொரு முறையும் கதையின் மர்ம முடிச்சு என் கழுத்தையும் சேர்த்து இறுகப் பற்றும். நானே புத்தக பக்கங்களின் வழியாக இறங்கி லண்டன் தெருக்களில் நடக்கத் தொடங்கி விடுவேன்.ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதையும் தாண்டி ஹோம்ஸின் தாக்கம் பெருமளவில் இருக்கும்.அந்தளவிற்கு என்னை ஈர்த்த ஹோம்ஸ் - பிறந்து எங்கு ? எப்படி ?
ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், ஆர்தர் கானன் டாயலின் நண்பரான ஒரு மருத்துவரின் விளைவாக எழுதப்பட்டவை.இவரைப்பற்றி கடைசியில் காண்போம். முதன்முதலில் ஹோம்ஸ் அறிமுகமான கதை, 'எ ஸ்டடி இன் ஸ்கார்லெட்' என்ற நாவல். இக்கதை, டாக்டர் வாட்ஸன் என்ற ஒருவர், இந்தியாவிலிருந்து திரும்பி, லண்டனுக்கு வரும் சமயத்தில், அவராலேயே சொல்லப்படுகிறது. அவர், லண்டனில் தங்குவதற்கு ஒரு அறை தேடிக்கொண்டிருக்கும் வேளையில், அவரது மற்றொரு நண்பர், ஒரு இடத்தில் ஒரு வீடு காலியாக இருப்பதாகவும், ஆனால் அங்கு தங்க விரும்பும் ஒரு நபர், தன்னிடம் போதிய பணம் இல்லாத காரணத்தால், வேறு யாருடனும் அறையைப் பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் சொல்கிறார். அந்த 'நபரை' சந்திப்பதற்காக இருவரும் அவரைத்தேடி, அவர் பணிபுரியும் ஒரு லேபரட்டரிக்குச் செல்கிறார்கள். இவர்கள் உள்ளே நுழையும் வேளையில், லேபரட்டரிக்கு உள்ளிருந்து ஓடிவரும் ஒரு கெச்சலான, உயரமான நபர், வெற்றிக்களிப்புடன் வாட்ஸனின் நண்பரிடம், தான் ஒரு ரசாயனத்தைக் கண்டுபிடித்திருப்பதாகவும், ரத்தக்கறைகளை மற்ற கறைகளில் இருந்து தரம்பிரிக்க அது மிகவும் உதவும் என்றும் சொல்கிறார்.அந்த நபர் தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.வாட்ஸனும் ஷெர்லாக் ஹோம்ஸும் சந்தித்துக்கொள்கின்றனர். ஹோம்ஸுக்கு வாட்ஸனை மிகவும் பிடித்துப்போகிறது. இருவரும் அந்த வீட்டுக்குக் குடிபோகின்றனர். அந்த இல்லம்தான், இன்னும் பல லட்சக்கணக்கான வாசகர்களுக்கு நன்கு நினைவிருக்கும் ஒரு வீடு - 221 பி பேக்கர் தெரு.இங்கு குடிவந்த சில நாட்களிலேயே, வாட்ஸன் ஹோம்ஸைப் பற்றி ஒரு முடிவுக்கு வருகிறார். அதை, அவர் வாயாலேயே கேட்போம்:
"ஹோம்ஸின் உயரம் - உறுதியாக ஆறடிக்கு மேல். ஆள் படு ஒல்லியாக இருப்பதனால், இன்னும் வேறு உயரமாகத் தெரிகிறார். பல விஷயங்களில் படு கூர்மையான அறிவு உடையவரகத் தெரிகிறார். எந்த மனிதனும், தனக்கு உறுதியான ஒரு ஆதாயம் இருக்கிறது என்று தெரிந்தால் ஒழிய, சில துறைகளில் இத்தனை கூர்மையான அறிவை வளர்த்துக்கொள்ள மாட்டான்.ஆனால் அதே நேரத்தில், அவரது அறிவைப்போலவே, அவரது அறிவின்மையும் ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம். தற்கால இலக்கியத்திலோ, அரசியலிலோ அவருக்கு ஒரு சிறிய அளவு பரிச்சயம் கூட இல்லை. அவருக்கு, நம்முடைய சூரியக்குடும்பத்தைப் பற்றிக்கூடத் தெரிந்திருக்கவில்லை. கோப்பர்நிகஸ்ஸின் தியரியைப் பற்றி நான் அவரிடம் பேசியபோது, அதைப்பற்றிய சிறிய அளவு அறிவு கூட அவரிடம் இல்லாதது குறித்து, மிரண்டு போனேன். பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்ற அடிப்படை உண்மை கூடத் தெரியாத ஒரு மனிதனை நான் அன்று தான் பார்த்தேன்'.இவ்வாறு செல்கிறது அவரது ஆராய்ச்சி. மேலும், ஹோம்ஸைப்பற்றிய அவரது ஆராய்ச்சியின் முடிவை அவர் இவ்வாறு தருகிறார்.
1. இலக்கிய அறிவு - பூஜ்யம்
2. தத்துவம் - பூஜ்யம்
3. வானசாஸ்திரம் - பூஜ்யம்
4. அரசியல் - மிகக்குறைந்த அறிவு
5. தாவரவியல் - தோட்டக்கலையைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால்,
ஓபியம், விஷச்செடிகள் போன்ற விஷயங்களில், அபரிமிதமான அறிவு
உண்டு
6. மண்ணியல் - நல்ல அறிவு உண்டு. பலவிதமான இடங்களின்
மண்ணைப்பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்.
7. ரசாயனம் - பிரமிக்கத்தக்க அறிவு.
8. அனாட்டமி - கச்சிதமான அறிவு.
9. குற்றவியல் - அளவுக்கதிகமான அறிவு. நாட்டில் நடந்த அத்தனை
குற்றங்களையும் மனிதர் தெரிந்துவைத்திருக்கிறார்.
10. வயலின் நன்றாக வாசிக்கிறார்.
11. ஆசாமி ஒரு நல்ல குத்துச்சண்டை வீரர் கூட. கத்திச்சண்டையும் நன்றாகத்
தெரிகிறது.
12. பிரிட்டிஷ் சட்டத்தைப் பற்றிய கூர்மையான அறிவு உண்டு.
(இதை, ஸ்டடி இன் ஸ்கார்லெட் நாவலிலிருந்து கஷ்டப்பட்டு எழுதினேன். அப்புறம் பார்த்தால், விக்கியிலேயே இது இருக்கிறது !!)
இத்தனை ஆராய்ச்சிக்குப் பிறகும், ஹோம்ஸின் தொழில் என்ன என்று வாட்ஸனுக்குத் தெரிவதில்லை.மண்டையைப் பிய்த்துக்கொள்கிறார்.ஒரு மனிதன், இத்தனை முரண்பாடுகளின் மூட்டையாக இருப்பதை அவர் இப்போதுதான் காண்கிறார்.அந்த ஆச்சரியம் வேறு அவருக்கு.சிலநாட்களுக்குப் பிறகுதான்,ஹோம்ஸ், தன்னைப்பற்றி வாட்ஸனுக்குப் புரிய வைக்கிறார்.தான் ஒரு துப்பறிவாளர் என்றும்,தன் தொழிலே தனது திறமைகளைச் சார்ந்துதான் இருக்கிறது என்றும் உணர்த்துகிறார்.அதன்பின் ஆரம்பிப்பதுதான் இந்த நாவலின் முக்கியமான விஷயமான ஒரு கொலை.ஷெர்லாக் ஹோம்ஸின் நிழல் போல் அவர் கூடவே இருக்கும் வாட்ஸன்,எவ்வாறு ஹோம்ஸ் அத்தனை தடயங்களையும் கண்டுபிடித்து,கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார் என்பதை, படு சுவாரஸ்யமாக சொல்லும் ஒரு நாவல் இது.இக்கதையிலிருந்து, ஹோம்ஸ் பிரபலமாக ஆரம்பித்தார். மொத்தம் ஐம்பத்தி ஆறு சிறுகதைகளும், நான்கு நாவல்களும், கானன் டாயலினால் எழுதப்பட்டன.இவரது அத்தனை கதைகளும்,யாரோ ஒருவர் ஹோம்ஸை நாடி வருவதிலிருந்து தொடங்கும். அவர், தனது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தினால்,தான் மிகவும் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதை ஹோம்ஸுக்கு சொல்வார். அதனைத் தொடர்ந்து, ஹோம்ஸ் துப்பறியத் தொடங்குவார். அக்கதையின் கடைசி அத்தியாயம் வரையிலும், வாட்ஸனோடு நாமும் சேர்ந்து குழம்பிக்கொண்டிருப்போம். கடைசியில், ஹோம்ஸ், வாட்ஸனைப் பார்த்து, ஒரு கமெண்ட் அடித்துவிட்டு, ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கத் தொடங்குவார். அப்போதுதான் அவரது ஜீனியஸைப் பற்றி நாம் புரிந்து கொள்வோம். தடயம் நம் கண் முன்னர் இருக்கும். ஆனால், நாம் யோசிக்காத ஒரு புதிய கோணத்தில் அத்தடயத்தை அணுகி, அந்தக் கேஸைத் தீர்த்துவைப்பது, ஹோம்ஸின் பாணி.அதுமட்டுமல்லாமல், மாறுவேடம் பூணுவதில்,இவர் ஒரு கில்லாடி.நினைத்துப்பார்க்க முடியாத வேடங்களிலெல்லாம் சென்று, உளவறிந்துவருவது இவர் பாணி. வாட்ஸனே பல முறை இவரைப் பார்த்தும்,அடையாளம் தெரியாமல் திகைத்திருக்கிறார்.ஆனால், ஹோம்ஸுக்கும் மிகக்சில சமயங்களில் அடி சறுக்கி விடுகிறது. ஒரு கேசின் போது, ஒரு பெண் இவருக்கு வெற்றிகரமாக 'டேக்கா' கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறாள். அதிலிருந்து, எந்தப்பெண்ணையும் அலட்சியப்படுத்தும் ஹோம்ஸின் குணம் மாறுகிறது. (இந்தப்பெண்தான் ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படத்திலும் வருகிறார் என்பது கொசுறுச் செய்தி).ஹோம்ஸுடன் மோதும் வில்லனின் பெயர் மருத்துவர் மாரியாரிட்டி (அடி மோனை.. ஹி ஹி ).
ஒரு சமயம், தொடர்ந்து ஹோம்ஸ் கதைகளாக எழுதிக்கொண்டிருந்த கானன் டாயலுக்கு சலிப்பு ஏற்பட்டு, ஹோம்ஸும் மாரியாரிட்டியும் ஒரு மலையுச்சியில் சண்டை போடுவது போலும், அதில் ஹோம்ஸ் மலையிலிருந்து தள்ளப்பட்டு இறந்துவிடுவது போலும் எழுதிவிட்டார் ('தி அட்வென்சர் ஆஃப் த ஃஃபைனல் ப்ராப்ளம்'). அவ்வளவு தான்! மக்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். மிரண்டுபோன கானன் டாயல், மறுபடி ஹோம்ஸை உயிர்ப்பிக்க நேர்ந்தது ('தி அட்வென்ச்சர் ஆஃப் த எம்ப்டி ஹௌஸ்').ஹோம்ஸின் பல கதைகள், நம்மையே முடியைப் பிய்த்துக்கொள்ள வைக்கும்.ஆனால் கடைசியில் ஹோம்ஸ் விளக்கும்போது, 'அடங்கொக்கமக்கா. .இவ்ளொவ் சுளுவான மேட்டரா இது?' என்று ஒரு உணர்ச்சியும் வரும்.எனக்கு மிகவும் பிடித்த ஹோம்ஸின் கதை,'த அட்வென்ச்சர் ஆஃப் த ஸ்பெக்கிள்ட் பேண்ட்' என்பது. இக்கதையைப் படித்த எனக்கு, பாதிக்கதையில் புல்லரித்து, மயிர்க்கால்கள் குத்திட்டு விட்டன (வேறு என்ன.. பயம் தான்). விட்டால் அலறியே இருப்பேன். அதேபோல், 'த ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்' என்ற நாவலும், குறிப்பிடத்தகுந்த ஒன்று (பலபேர் இதை ஆங்கிலத் துணைப்பாடத்தில் படித்திருக்கிறோம்).எனது சிறுவயதில், பைகோ கிளாஸிக்ஸ் என்ற அருமையான படக்கதை ஒன்று வந்துகொண்டிருந்தது - பூந்தளிர் குழுமத்திலிருந்து (பூந்தளிரை மறக்க முடியுமா? அதைப்பற்றி ஒரு பதிவே எழுதலாம்!!). அதில், பல உலக இலக்கியங்கள் வரும். அருமையான சித்திரங்களோடு. டாம் சாயர், ஹக்கிள்பெரிஃபின், கிட்நாப்பெட், செண்டாவின் கைதி, ட்ரஷர் ஐலாண்ட், ரோமியோ ஜூலியட், மேன் இன் த அய(ர்)ன் மாஸ்க் ஆகிய அருமையான புத்தகங்கள் எனக்கு அறிமுகமானது அதன் மூலமாகத்தான். அதில்தான் ஹௌண்ட் ஆஃப் த பேஸ்கர்வில்லையும் படித்தேன்.அதே நேரத்தில், நமது மினி லயனில், ஷெர்லாக் ஹோம்ஸைக் கிண்டலடித்து, ஷெர்லாக் ஷோம்ஸ் என்ற ஒரு கதையும் வந்தது. அதுவும் பயங்கரக் காமெடிக் கதை.
இதுவரை ஹோம்ஸை பல பேர் நாடகங்களிலும் தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் உலாவவிட்டிருக்கிறார்கள்.1900களில் மௌன படங்களின் காலத்திலிருந்தே ஹோம்ஸ் திரையில் உலாவ ஆரம்பித்தார்.அதற்கு முன்னரே பல்வேறு மேடை நாடகங்களும் அவர் பெயரில் நடந்தேறியுள்ளன. 1960க்கு பின்னால் பெருமளவில் அவர் தொடர்கள் தொலைக்காட்சியில் வெளிவர ஆரம்பித்தன.ஆச்சரியத்தக்க வகையில் 1980களில் ரஷ்யாவில் கூட ஷெர்லாக் தொலைக்காட்சியில் நடமாடியிருக்கிறார்.ஒரு இங்கிலாந்து கதாபாத்திரம் ரஷ்யாவில்.... அப்படி இதுவரை எடுக்கப்பட்ட பல தொடர்களில் - படங்களில் இரண்டை மட்டும் இன்று வரை பிரதானமாக கொண்டாடுகின்றனர்.
Basil Rathbone Series: 1939 to 1946, 14 தொடர்கள்...
இந்த Playlistல் மொத்தம் எடுத்த 14 தொடர்களில் 8 தொடர்கள் உள்ளன.
Jeremy Brett Series: 1984 to 1994, 42 தொடர்கள்...
இதைத்தான் இன்றளவும் பெரும்பாலானவர்கள் கதையுடன் கச்சிதமாக பொருந்திப்போகும் தொடராக சொல்கின்றனர். ஹோம்ஸ் எழுதிய 60 கதைகளில் 42 கதைகளை 1984 முதல் 1994 வரை எடுத்துள்ளனர்.Granada Series என்றழைக்கப்படுவதும் இதுதான். Granada - தொடரை தயாரித்த இங்கிலாந்தின் தொலைகாட்சி நிறுவனம். இதில் நடித்த ஜெர்மி ப்ரட்தான் இதுவரை ஹோம்ஸாக நடித்தவர்களில் கச்சிதமாக அவ்வேடத்திற்க்கு பொருந்துவதாக இணையத்தில் பல பேர் கூறியிருக்கின்றனர். ஆனால் கொஞ்சம் வயதானவராகத் தெரிகிறார். இதில் மற்றொரு விஷேசம் - 1991ஆம் ஆண்டு, The Adventure of Shoscombe Old Place தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வந்த ஜூட் லா தான் தற்போதைய ஷெர்லாக் படங்களில் வாட்சனாக வருவது.
இந்த Playlistல் 40 தொடரில், 39 உள்ளது. மொத்தமாக டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
சரி....பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும், இங்கிலாந்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஷெர்லாக் ஹோம்ஸ், இருபத்தோராம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்தால் எப்படி இருக்கும்? இரண்டு வருடங்கள் முன்பு ஒரு ரயில் பயணத்தின்போது, இரண்டு மனிதர்கள் இவ்வாறு விவாதித்துக்கொண்ட நிகழ்ச்சியின் விளைவே, புதிதாக இந்த பிபிசியின் இந்த நிகழ்ச்சிக்கு வழிவகுத்தது.ஷெர்லாக் ஹோம்ஸ், உண்மையில் அறிமுகமானது, ஏற்கனவே மேலே கூறியிருந்தது போல A study in Scarlet என்ற நாவலில்தான். இந்த நாவலையே எடுத்துக்கொண்டு, அதனை அப்படியே contemporary உலகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் இதன் திரைக்கதையை எழுதிய ஸ்டீவன் மொஃப்ஃபாட் (Steven Moffat). Study in Scarlet நாவலை இன்றும் படிப்பவர்கள், அதில் உறைந்திருக்கும் மர்மத்தினால் கட்டாயம் கவரப்படுவார்கள் என்று நினைக்கிறேன். பழைய கதைகளில் ஹோம்ஸ் துப்பறிவதை, தற்போதைய உலகின் சூழலுக்கு அற்புதமாக sync செய்துள்ளனர். உதாரணமாக, இந்தக் கதையில், வாட்ஸனின் மொபைல் ஃபோனைக் கண்டவுடன், வாட்ஸனின் கதையையே ஹோம்ஸ் சொல்லுவார். அது, பழைய கதைகளில், வாட்ஸனின் கடிகாரமாக இருக்கும். அதேபோல், study in scarlet கதையில், ஒரு மோதிரத்தை வைத்துக் கொலையாளியைக் கண்டுபிடிப்பார் ஹோம்ஸ். இதில், அது மொபைல் ஃபோனாக மாறியிருக்கிறது. On a more personal note, ஹோம்ஸ் நவீன காலத்தின் உபகரணங்களை உபயோகிப்பதைக் காணுவதில், எனக்குப் பெரும் மகிழ்ச்சி.
ஷெர்லாக்கின் கதைகள் அத்தனையுமே மண்டையைப் பிய்த்துக்கொள்ள வைக்கும் புதிர்கள் நிறைந்ததாக இருக்கும். அவைகளை ஒவ்வொன்றாகக் கண்டுபிடிக்கும் ஹோம்ஸ்.இறுதியில் அத்தனை புதிர்களையும் சிரித்துக்கொண்டே அவிழ்ப்பது அவரது பாணி.இதுவரை உருவாக்கப்பட்ட அனைத்துக் கதாபாத்திரங்களிலும்,மிகச்சிறந்த ஒரு கதாபாத்திரம் ஹோம்ஸ் என்பது எனது தனிப்பட்ட கருத்து.எந்தவொரு ஷெர்லாக் ஹோம்ஸின் கதைகளிலும், நம்மை வியக்கச் செய்கிற அம்சங்கள் இல்லாமலிராது.இவற்றை எழுதிய டாயலின் ஜீனியஸ்,கதைகளில் பளிச்சிடும். ஆனால், இதனைப் படிக்கும் சிலருக்கு, கதைகள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் பழையதாக இருக்கிறதே என்ற எண்ணம் எழ வாய்ப்புண்டு. அதிலும் குறிப்பாக இன்றைய fast paced த்ரில்லர்களைப் படித்துவிட்டு, பனிமூட்டம் சூழ்ந்த லண்டனையும்,கோச்சுவண்டிகள் நடமாடும் சிறிய தெருக்களையும் பற்றிப் படித்தால், அவ்வாறு தோன்ற சகல காரணங்களும் உண்டு.அவர்களுக்காகவே இந்த சீரிஸ். கட்டாயம் பாருங்கள். அதை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
இதைத்தவிர இந்த டாகுமெண்டரி - Many faces of sherlock holmes, எப்படி கால ஓட்டத்தில் ஷெர்லாக் கையாளப்பட்டார்(1900 - 1985), எந்தெந்த ஊடகங்களில் எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தப்பட்டார், அவரது தாக்கம் எந்தளவிற்க்கு இருந்தது என்பதை குறித்தெல்லாம் புரிந்து கொள்ள உதவும்.
இன்னொரு முக்கியமான டாகுமெண்டரியும் உள்ளது. அது டாக்டர்.ஜோசப் பெல் பற்றியது.யாரிந்த டாக்டர் ? எடின்பர்க் பல்கலைகழகத்தில் மருத்துவ பேராசிரியராக பணியாற்றியவர்.தடயவியல் துறையில் ஒரு லெஜன்ட். டோயல்,1877ஆம் ஆண்டு பெல்லை சந்தித்து அவரிடம் உதவியாளராக பணியாற்றுகிறார்.அப்போது பெல்லின் அசாத்திய திறமையால் கவரப்பட்டே ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை படைக்கிறார்.அதனால் இந்த டாகுமெண்டரி மிக முக்கியமானது.
இதுதவிர புகழ் பெற்ற அமெரிக்க இயக்குனர் பில்லி வைல்டர் இயக்கிய Private life of sherlock holmes என்ற படமும் முக்கியமானது.சற்றே நகைச்சுவையுடன் கூடிய மற்றொரு ஷெர்லாக்கை முன்வைத்த படம்.முடிந்தால் அதையும் இங்கே தரவிறக்கிக் காணலாம்.
---------------------------------------------------------------------------------
இந்த பதிவு ஏற்கனவே கருந்தேளில் ராஜேஷ் எழுதிய ரெண்டு பதிவுகளின் தொகுப்பு. 99.9% வார்த்தைகள் மீள் வார்த்தைகளே. கொஞ்சம் ஒன்றிரண்டு வார்த்தைகளை சேர்த்திருக்கிறேன்.முழுமையான ஷெர்லக் பற்றிய கட்டுரை - தகவல்கள், திரைப்பட லிங்க்குகள் இப்படி அனைத்தும் ஒரே இடத்தில் இருக்கும்படி ஒரு பதிவு இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்து இதை "வெட்டி ஒட்டி தயாரித்தேன்". அனைவரிடமும் கண்டிப்பாக IDM அல்லது வேறு ஏதாவது டவுன்லோடர் நிச்சயமாக இருக்கும்.எனவே அந்தந்த லிங்குகளுக்கு சென்று,அனைவரும் சுலபமாக தரவிறக்கி கொள்வதற்காகவே playlistகளை உருவாக்கி உள்ளேன்.பயன்பாட்டால் ஓகே. கருந்தேளின் பதிவுகளை கேக்காமல் கொள்ளாமல் கண்டபடி மாற்றி உள்ளேன்.அவருக்கு நன்றி.
வகைகள்:
Sherlock Holmes,
ஆர்தர் கானன் டாயல்,
சினிமா,
புத்தகம்,
ஷெர்லாக் ஹோம்ஸ்
vada
@பெல்பாட்டம் மொதலாளி
அதுல என்னங்க உங்களுக்கு சந்தோஷம்...இந்த டெம்ப்ளேட்தனம் வேணாம்ன்னு பாத்தா வுட மாட்டிங்கிறீங்களே........என்னமோ போங்க...
அது என் உரிமை ...
அதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது !!
i did not either know arthur conandyle or sherlock holmes till my UG 2nd year...one day one of our Pharmacology Professor (Prof.MEHAR ALI)told about these n even told "every doctor should reade Sherlock holmes ; it will increase their Diagnostic acumen"
but till now i had just seen only sherlock holmes 2009 film only...
thanks for both karundhel n kolandha!!
நல்ல ரைட்டிங் பாஸு.. திரும்ப எழுதினதுக்கு மகிழ்ச்சி....
திரும்பத் திரும்ப ஆயிரம் வாட்டி சொல்லுறதுக்கும் நான் தயார். எனக்கு ரொம்பப் புடிச்ச கதைகள்+நாவல்கள் = ஷெர்லாக் ஹோம்ஸ். ஒவ்வொரு தடவை இதைப் படிக்கும்போதும், மோதல் வாட்டி படிச்ச அதே சஸ்பென்ஸ் இப்பவும் இருக்கு. முடிவுகள் தெரிஞ்சிருந்தாலும். அதேபோல், மேல மகேஷ் சொன்னமாதிரி, ஒவ்வொரு டாக்டர் மட்டுமில்லாம, ஒவ்வொரு மனிதனுமே ஹோம்சைப் படிச்சா, அவனோட observation skills சூப்பரா வளரும். யாரைப் பார்த்தாலும் சரி - அவங்களோட நடை, உடை, பாவனைகளை வைச்சி யாரு வேணாலும் அவங்களைப் பத்தின தகவல்களைக் கண்டுபுடிக்கலாம். என்ன - கொஞ்சம் கூர்மையா யோசிக்கணும். இதுக்கு ஹோம்ஸ் கதைகள் ஒரு catalyst .
ஹோம்ஸை முடிஞ்சவரைக்கும் எல்லாருமே படிங்க. கட்டாயம் அது லைஃப்ல நமக்கு ஹெல்ப் பண்ணும்.
ஹோம்ஸின் கதைகளை தமிழில் யாராவது எழுதியிருக்காங்களா?
எஸ்.கே.
இது செ.சரவணக்குமார் எழுதினது.
http://saravanakumarpages.blogspot.com/2009/11/sherlock-holmes.html
@நன்றி
மிக்க நன்றி! தாங்கள் கொடுத்த இணைப்பில் அவரும் நன்றாக எழுதியிருக்கிறார். ஆனால் நான் கேட்டது யாராவது மொழிபெயர்த்த கதைகள் உள்ளதா என்று.
எஸ்.கே,
அதில்.. ஷெர்லக் ஹோம்ஸ் கதையை பத்ரி சேஷாத்ரி மொழிபெயர்த்து ஒரு புத்தகம் வந்திருப்பதை சொல்லியிருக்கார்.
அதைத்தவிர வேறெதுவும் தமிழில் வந்ததாய் தெரியலை.
நானும் ஷெர்லக் ஹோம்ஸ்யின் ரசிகன்....
மொத்தமாக டவுன்லோட் செய்ய playlist களை கொடுத்ததுக்கு மனமார்ந்த நன்றி.
ஷெர்லக் ஹோம்ஸின் கதைகள் தமிழில் PDF லிங்க் இருந்தால் தாருங்கள்.
நன்றி:-)
ஷெர்லக் ஹோம்ஸ் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்...
நீங்க ரஷ்ய மொழியில வந்த தொலைக்காட்சிதொடர பாருங்க....எனக்கென்னமோ அதுதான் இதுவரைக்கும் வந்ததுலயே சிறப்பானதா தோணுது...அதுல முதல் மூணுமே செமயா இருக்கும்...அதுல வர்ற ஹோம்ஸும் வாட்சனும்தான் என்னோட ஃபேவரிட்...இதோ டோரென்ட் லிங்க்....
http://torrentz.eu/8ab57ac88fb77c12a415e923e7466bd9ec8319b4
ஹோம்ஸின் கதை தமிழில்...
http://www.scribd.com/doc/53673291/Oru-Mothiram-Iru-Kolaigal-Tamil-Novel-Sherlock-Holmes