Prequeal
1970, பிப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை. அதிகாலை 3.42 மணி. Fayetteville, NC, Fort Bragg (ஒரு ராணுவ அமைப்பு). ஒரு ஃபோன்கால் வருகிறது. தடுமாற்றத்துடன் ஒரு குரல்…..
"நான் கேப்டன் மெக்டோனால்ட் பேசறேன். கத்தியால குத்திட்டாங்க. உதவி 544, Castle Drive உடனே வாங்க…" சில ஆர்மி ஆஃபிசர்கள் உடனே அந்த முகவரிக்குச் செல்கின்றனர். அங்கே… பெட்ரூமில் 26 வயது கலோட்டி கொடூரமான முறையில் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்தார். அருகில் அவரது கணவர் ஆர்மி ஆஃபிசரும் மருத்துவருமான ஜெஃப்ரி மெக்டொனால்ட் உடம்பில் காயங்களுடன் நெஞ்சில் ஆழமான கத்திக் குத்துடனும் இருந்தார். ஆனால் உயிர் இருந்தது. "என் குழந்தைங்களுக்கு என்னாச்சுனு போய் பாருங்க என கதறினார்." மற்ற அறைகளில் 5 வயது கிம்பர்லியும் 2 வயது கிர்ஸ்டனும் கொடூரமான முறையில் குத்தப்பட்டு இறந்திருந்தனர்.
ஜெஃப்ரி மெக்டானலட் |
"அன்னைக்கு நைட் டிவி பார்த்துட்டு படுக்கப் போனேன். என் குழந்தை என் படுக்கை ஈரமாக்கியிருந்தாள். சரி என்று நான் ஹாலில் சோபாவில் படுத்திட்டேன். திடீரென யாரோ அலறும் சத்தம் கேட்டு எந்திரிச்சேன். அப்போ ஒரு ஆள் என்னை கடுமையா தாக்கினான். இன்னொரு ஆள் என் உடையாலேயே என்னை தடுத்து இன்னும் தாக்கினான். ஒரு பெண் தூரத்தில நின்னுகிட்டு அந்த பன்றிகளை கொல்லுன்னு கத்திகிட்டு இருந்தா அவங்க பார்க்க ஹிப்பிக்கள் மாதிரி இருந்தாங்க. என்னை தலைல அடிச்சதில மயக்கமாயிட்டேன் அப்புறம் எந்திரிச்சப்ப அவங்க இல்ல என் மனைவி குழந்தைகளை காப்பாத்த முயற்சி செஞ்சேன் முடியல"
வீடு முழுவதும் ஆராய்ந்த போது போலீஸின் கண்ணில் அது பட்டது. படுக்கையின் ஹெட்போர்டில் ரத்தத்தால் "PIG" என எழுதப்பட்டிருந்தது…..
A Flashback
August 8, 1969. ஹாலிவுட் இயக்குநர் ரோமன் போலன்ஸ்கியின் வீடு. போலன்ஸ்கி படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்தார். இங்கே அவர் மனைவி ஷாரோன் டேட்டும், அவரது நான்கு குடும்ப நண்பர்களும் தங்கியிருந்தனர்.
அன்றிரவு ஹிப்பி தோற்றமுடைய மூன்று பெண்களும் ஒரு ஆணும் அந்த வீட்டில் நுழைந்தனர். வீட்டில் இருந்த அனைவரையும் கொடூரமான முறையில் கொலை செய்தனர் எட்டரை மாத கர்ப்பமாக இருந்த ஷாரோன் டேட்டையும் சேர்த்து. போகும்பொழுது ரத்தத்தில் "PIG" என எழுதி வைத்துவிட்டுச் சென்றனர்.
Become Natural Born Killers
Pico Rivera, ஜூலை 21, 2000. அதிகாலை. எட்டு உறுப்பினர்களுடைய அந்த குடும்பத்தில் மூத்த மகள் 18 வயது எஸ்பரன்சோ ஏதோ சத்தம் கேட்டு விழித்து தன் பெற்றோரின் அறைக்குச் செல்ல…அங்கே இரத்த வெள்ளத்தில் தாயும் தந்தையும். தாய் அவசர உதவிக்கு ஃபோன் செய்யுமாறு முனக, அவளோ பயத்தில் அலறிக் கொண்டு பக்கத்து வீட்டிற்கு ஓடினாள். பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீஸுக்கு ஃபோன் செய்தனர்.
போலீஸ் வந்து பார்த்த போது ரிச்சர்ட் ஃப்ளோர்ஸ் சீனியர்(42 வயது), ரிச்சர்ட் ஜூனியர்(17வயது), சில்வியா ஜூனியர்(13 வயது), மேத்யூ (10 வயது) நான்கு பேரும் இறந்திருந்தனர். திருமதி சில்வியா ஃப்ளோர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார். மற்ற மகள்களான எஸ்பரன்சாவும், லாராவும் தாக்கப்படவில்லை, மேலும் இன்னொரு மகளான மோனிகாவும்.
மோனிகா டயாஸ் தற்செயலாக பாத்ரூமுக்கு சென்றிருந்தாள். அப்போது சத்தம் கேட்டு பயத்திலேயே அங்கேயே இருந்து விட்டாள்.
வீட்டின் பின்புறத்தில் ஒரு ரத்தம் தோய்ந்த கத்தி கிடைத்த்து. காவல்துறை விசாரித்ததில் ரிச்சர்ட் மிகவும் கண்டிப்பானவர், ஆனால் மிகவும் அன்பானவர் அதனால்தான் தன் மனைவியின் சகோதரியின் மகள்களான மோனிகா மற்றும் லாராவை தத்தெடுத்துள்ளார் என தெரிய வந்தது. வீட்டில் பலவந்தமாக நுழைந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை. போலீஸார் சந்தேகம் மோனிகா மீது திரும்பியது. அவள் ஒளிந்திருந்திருந்ததாக சொல்லப்பட்ட பாத்ரூமில் 3 கத்திகள் இருந்தன. அவை அங்கே எப்படி வந்த்து என எனக்கு தெரியாது என மோனிகா சொன்னாள். ஆனால் அவளுக்கு அவை எந்த மாதிரியான கத்திகள் என அடையாளம் காண முடிந்தது. அவளிடம் அதைப்போல ROTC பயிற்சிக்காக ஒரு கத்தி இருந்தது.
அடுத்த நாள் சம்பவத்தில் உயிர்பிழைத்த மகள்கள் மூவரும் ஷெரீஃப் அலுவலத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். மோனிகா தன் காதலனான 17 வயது மைக்கேல் நரன்ஜோவை அழைத்துச் சென்றாள். போலீஸ் மைக்கேலின் கையில் ஒரு கட்டுப் போடப்பட்டிருந்ததை கவனித்து அது எப்படி ஏற்பட்டது என கேட்டனர். பள்ளியில் விளையாடும்போது கண்ணாடி கீறி விட்டதாக சொன்னான். கண்ணாடியால் கீறிய காயம் இப்படி இருக்காதே என கேட்டபோது அது ரேசரால் ஏற்பட்ட வெட்டு என மாற்றிச் சொன்னான். சந்தேகம் இப்போது மைக்கேல் மேலும் மோனிகா மேல் வலுவாகவும் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த ஆறு நாட்களுக்கு பின் மோனிகாவும் மைக்கேலும் கைது செய்யப்பட்டனர். மைக்கேலின் கைரேகை கொலைக்கான கத்தி, duct tape, டார்ச் லைட் போன்றவற்றில் உள்ள ரேகைகளுடன் ஒத்துப்போனது. மைக்கேலின் வீட்டில் பல கத்திகளும், சீரியல் கில்லர்கள் சம்பந்தமான புத்தங்களும், STALK TO KILL என்கிற புத்தகமும் கண்டறியப்பட்டது. மைக்கேலின் சைக்கிளில் ரத்தம் காணப்பட்டது.
மைக்கேல், மோனிகா இருவரும் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்கள். ரிச்சர்ட் ஃப்ளோர்ஸ் கொஞ்சம் கண்டிப்பானவர். அவருக்கு மைக்கேலின் உடை, பழக்கவழக்கங்கள் பிடிக்கவில்லை. சிலசமயங்களில் மோனிகாவுடன் பழகும் சிலரை தடுத்திருக்கிறார். ஒரு பொறுப்புள்ள தகப்பனாக நிறையவே கண்டிப்புடன் இருந்தது தெரிய வந்தது. மோனிகா ஜுலையில் மைக்கேலுடன் வெளியே செல்ல அனுமதி கேட்டபோது ரிச்சர்ட் மறுத்திறுக்கிறார்.
மைக்கேலும் மோனிகாவும் ஆரம்பத்தில் கொலைகளை மறுத்தே வந்தனர். சில மாதங்களுக்கு பின் மைக்கேல் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு எழுதித் தந்தான். மைக்கேலும் மோனிக்காவும் இதுவரை எந்த குற்றமும் செய்ததில்லை. எந்த வன்முறையிலும் ஈடுபட்டதிலை. அவர்கள் கொடுரமான கொலைகளை செய்பவர்கள் என்பதற்கான எந்த அறிகுறிகளும் அதுவரை இருந்ததில்லை. மைக்கேல் கொலைக்கு இரு நாட்கள் முன்பு வரை கத்தியை முறையாக கையாண்டதே இல்லை. புத்தகங்கள் மூலம் ஒரு சில நாட்களில் எல்லாவற்றையும் கற்றான்.
அவர்கள் திட்டம் இதுதான்: மோனிகா பாத்ரூமில் காத்திருப்பாள், மைக்கேல் இளைய சகோதரி சில்வியாவை கொன்று அவளை மோனிகாவை அழைத்து வந்து காட்ட வேண்டும் பின்பு ஒரு கொள்ளையை செய்ய வேண்டும். ஆனால் மைக்கேலின் திட்டம் வேறாக இருந்தது. அவளின் மூத்த சகோதரிகளை கொலை செய்துவிட்டால் அவள் சந்தோசப்படுவாள் என நினைத்தான். சில்வியாவையும் மேத்யூ ரிச்சர்டையும் கொலை செய்துவிட்டு ஒரு அறையில் நுழைந்தான். ஆனால் அவன் நுழைந்தது அவளின் பெற்றோர் அறை. அவர்கள் அவனை பார்த்து விட்டதால் அவர்களையும் கொலை செய்ய முயற்சித்தான். அவள் அம்மா அதிகம் சத்தப் போட கத்திகளை பாத்ரூமில் இருந்த சில்வியாவிடம் தந்துவிட்டு சென்று விட்டான். மோனிகா எஸ்பரென்சோ பக்கத்து வீட்டிற்கு சென்றது வெளியே வந்திருக்கிறாள்.
மோனிகா தான் எதுவும் செய்யவில்லை எல்லாம் மைக்கேல் மட்டுமே காரணம் என்று கோர்ட்டில் கூறினாள். ஆனால் மோனிகா மைக்கேலிற்கு எழுதிய கடிதங்கள் மூலம் மோனிகாவும் மனிதர்களை கொல்வதில் ஆர்வமாய் இருக்கிறாள் என்பதும், Natural Born Killers படத்தில் வருவது போன்ற கொலைகாரர்களாய் ஆக வேண்டும் என்ற மைக்கேலின் விருப்பத்தை அவள் வெகுவாக ஊக்கப்படுத்தியது தெரியவந்தது.
கொலையாளிகள் குற்றம் நடந்தபோது மைனர்களாய் இருந்ததால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்கவில்லை. பதிலாக மைக்கேலுக்கு 5 ஆயுள்தண்டனையும், மோனிகாவிற்கு 4 ஆயுள் தண்டனையும் கிடைத்தது.
Epilogue
ஜெஃப்ரி மெக்டொனால்ட்டிற்கு தன் மனைவி குழந்தைகளை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். ஆதாரங்கள் அவருக்கு எதிரானதாகவே இருந்தன. அவர் ஒரு டாக்டர் என்பதால் தன் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் காயமேற்படுத்திக் கொண்டார் என்பதும் அவரின் அறையில் 1969ல் நடந்த மான்சூன் கொலைகள் பற்றிய மேகசீன் சரியாக அதே பக்கத்தில் திறந்து வைக்கப்பட்டிருந்தது முக்கியமான வாதமாக இருந்தது. அவருக்கு தண்டனை கிடைத்தாலும் பின்னாளில் அவர் குற்றவாளி இல்லை என்பது போல சில ஆதாரங்கள் கிடைத்தன. ஆனால் குற்றவாளி இல்லை என முழுமையாக எதுவும் நிரூபிக்கவில்லை.
ச்சால்ஸ் மேன்ஸன் |
Conclusion:
வெறும் சுவாரசியத்திற்காக இந்த கொலைகளை பற்றி எழுதவில்லை. ஒரு குடும்பத்தையோ குழுவையோ மொத்தமாக கொல்லும் மனிதனின் மனம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும்? மோனிகா சம்பவத்தில் அவர்கள் இருவரும் டீன் ஏஜ் வயதினர். ஜெஃப்ரியோ ஒரு மிலிட்டிரி ஆஃபிசர் மற்றும் டாக்டர். இருந்தும் மனிதனின் மனம் எப்போது பிறழ ஆரம்பிக்கின்றது இவ்வளவு கொடூரமாக. உளவியாலளர்கள் ஒவ்வொருவரையும் ஆராய்ந்து எத்தனையோ காரணங்களை சொல்லலாம். ஆனால் இச்சம்பவங்கள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன….. இனிவரும் பதிவுகளில் forensic psychology, பழங்கால மர்மங்கள் போன்றவையும் கலந்து எழுதலாம் என உள்ளேன். தங்கள் கருத்துக்களை கூறவும்.
- Pluto
வகைகள்:
உண்மை சம்பவங்கள்,
உளவியல்,
க்ரைம்,
தொடர்.
இதை எழுதிய அன்பர் யாராக இருந்தாலும் மீண்டும் மெயிலில் மெசஜிலேயே படங்களை இன்சர்ட் செய்து அனுப்பவும்....
இமேஜ் நேமை வச்சி... நான் இண்டர்னெட்டில் தேடி.. இந்தப் படங்களை போட்டிருக்கேன்.
எனக்கு எப்பவும் இதுமாதிரியான சைக்கோ கொலைகள்/கொலையாளிகளின் கதைகளில் ரொம்ப விருப்பம். இதுக்காக என்னையும் சைக்கோன்னு சொல்லிடாதீங்க.
மேலும் பல சுவாரசியமான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
யாரப்பா நம்ம டைப் போல ,ரொம்ப நல்லா இருக்கு ,தொடர்ந்து எழுதுங்க
நம்ம ஹாய் மதன் எழுதுன 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' தொடர்ல இந்தக் கொலைகளைப் பத்தியும், அதன் காரணங்களையும் பத்தி டீட்டெயிலா படிச்சிருக்கேன். மறுபடியும் அதே தகவல்களை இங்க பார்க்கும்போது, இதை எழுதியவர் அதோட ரசிகரோன்னு தோணுது.
சீரியல் கில்லர்ஸ் கதை / நாவல் வாசிக்கும்போது... சீரியல் கொலையை கொலையாளி பார்வையில் சரியானதுபோலத்தான் எழுதிருப்பாங்க. அந்த கேரக்டர் இன்ஸ்பிரேஷனா வந்திருக்கும்போல...
அந்த ஷரோன் டேட் படத்த எடுக்க முடியாதா ???? கலங்குது.....
கன்ஸ் அன் ரோசஸ் - அக்சில் ரோஸ் சார்லஸ் மேன்சன் படம் போட்ட டி-ஷர்ட் போட்டா அது பெரிய ரகளையானது ஞாபகம் வருது.......
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும். மெயிலில் படங்களை அட்டாச் செய்து அனுப்பிவிட்டேன். அடுத்தமுறை தாங்கள் சொன்னது போல் செய்துவிடுகிறேன்.
நானும் இதுபோன்ற கில்லர் கதைகளுக்கு ரசிகன்தான். இந்த தொடரில் வெறும் கில்லர் கதைகள் மட்டுமின்றி இன்னும் வேறுமாதிரியான த்ரில்லர்களையும் சொல்ல முயல்கிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி!