24/Zecond

ஆண்டு : 1824 [ வெளங்கும் ]
நாள் : டிசம்பர் 9
இடம் : இங்கிலாந்து
நேரம் : 5.00 PM

படம் Wiki
டாக்டர் பீட்டர் மார்க் ரொஸே (Peter Mark Roget) அன்றைய அலுவலல்களை அப்பொழுதுதான் முடித்து வீடு திரும்பியிருந்தார். முகத்தில் களைப்பு. கை அலம்பியதும் காஃபி. காலையில் படிக்காமல் விட்டுப் போன செய்தித்தாளை முதல் பக்கத்தில் இருந்து மேய ஆரம்பித்தார். கண்ணில் க்ராஸ் வேர்ட் பஸில் தெரிய, மேலும் கீழும் கூட்டிக் கழித்தார். Thesaurus டிக்ஸனரியையே எழுதியவருக்கு இதெல்லாம் ஜுஜுபி.

இரவு மணி 8.00. பீட்டர் தனது இரவு உணவை அப்பொழுது முடித்திருந்தார். 9.30 மணி வரைக்கும், வீட்டுத் திண்ணையில் நண்பர்களோட அலாவினார். 10.00 மணிக்கு உறக்கம் கண்ணைச் சுழற்ற, தன் படுக்கையறைக்குள் நுழைந்தார்.

10:59:57 டிக்….
10:59:58 டிக்….
10:59:59 டிக்…

இரவு மணி 11.00. ஹும்….!!!! ஏங்க…… அடுத்தவர் படுக்கையறையை எட்டிப்பார்ப்பது அநாகரீம்ன்னு உங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லையா? அந்த நேரத்தில், பீட்டர் தூங்கிக் கொண்டிருந்திருக்கலாம். அது அவர் பர்சனல் விசயம். நமக்குத் தேவை அவர் 5.00 மணிக்கு வீட்டிற்கு வரும் முன்… கண்டுபிடித்த ஒரு விசயம் மட்டுமே!! அது……….

Short-Range Apparent Motion.
*****

ஆண்டு : 1980-கள்
நாள் : கிட்டத்தட்ட ஆண்டின் கால்வாசி நாட்கள்
இடம் : நாமக்கல் அருகேயொரு கிராமம்
நேரம் : மேட்னி / இரவு முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் நேரம்

டென்ட் கொட்டகையில், முனகிக் கொண்டிருக்கும் பாகவதர் காலத்து ப்ரொஜக்டரில் 'வ்வ்வய்ங்ங்ங்' என சப்தம் வந்தவுடன், முதல் ஆளாக வெளியே ஓடி, ஆப்பரேட்டர் வாசலில் நிற்போம். ப்ரொஜக்டரில் மாட்டிக்கொண்ட ஃபிலிம் ரோலை, தன் இஷ்டத்திற்கு உருவி [எடிட்டிங்காம்], வெட்டி.. அவர் தூக்கியெறியும் அந்த நொடி.. எங்களுக்கு மிக முக்கியம். மணமகளின் திருமணப் பூப்பந்தை எட்டிப் பிடிக்கும் தோழிகளின் செல்லச் சண்டை, நண்பர்களுக்குள் நடக்கும். நாகரிகம் கருதி இப்படி எழுதினாலும், உண்மையில் அங்கு நடப்பது நாய் சண்டைதான்.

கைக்குக் கிடைத்த ஃபிலிம் ரோலில், பெரும்பாலும் ஒரே கோணத்தில், எந்த வித அசைவும் இல்லாத படங்களே கிடைக்கும். ஒரு சில அசைவுகளோடு ஃபில்ம் ரோல் கிடைத்தவன் அன்றைய அதிர்ஷ்டசாலி. பம்பர மிட்டாய் பண்ட மாற்றுகளுக்குப் பிறகு, 'அசையும்' படச்சுருள் கைமாறும். 

வெள்ளைச் சுவற்றில், முகக் கண்ணாடி மூலம், சூரிய ஒளி பாய்ச்சப்படும். ரூபி ப்ராண்ட் காலி தீப்பெட்டியின் இடையில், பொறுக்கிய ஃபிலிம் ரோல்கள். (கஸ்டமைஸ்ட் ஸோலார் ப்ரொஜக்டர்). சக்ஸஸ்…!! சக்ஸஸ்..!! எங்கள் வீட்டு சுவற்றிலும் எம்ஜியாரும், ரஜினியும் (எங்களூரில் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் பண்டிகைக்கு மட்டுமே, மாரியம்மனும், 'காலைக் காட்சிகளும்' சிறப்பு தரிசனம் தருவார்கள் என்பதால், வீட்டுச் சுவர்களுக்கு ப்ரமீளாக்கள் பழக்கமில்லை).

ஆனால் எங்கள் யாருக்கும்… எழாத ஒரே கேள்வி? ஏன் ஒரே மாதிரியான அசைவில்லாத படங்களே சுருளில் இருந்தது? அல்லது… இந்த அசைவில்லாத படங்கள், திரையில் எப்படி அசைகின்றன? அது……


Short-Range Apparent Motion.
*****

'Motion' Picture. ஆக்ஸிமோரான் (Oxymoran) வார்த்தைக்கு அருமையான உதாரணம். அசைவே இல்லாத [அல்லது தொடர்ச்சியான] அசைவுகளை ஒவ்வொரு ஃப்ரேமிலும், கொஞ்சம் கொஞ்சமாக பதிய வைத்த…. வெறும் ஸ்டில் படங்கள் மட்டுமே கொண்ட திரைச்சுருளை நாம் கூப்பிடும் பெயர். அசைவுகளே இல்லாத படத்திற்கு 'அசையும் திரைப்படம்'. இதில் Picture மட்டுமே உண்மையான பொய். 

Motion? அது பொய்யான உண்மை. நம் கண்ணை நாமே ஏமாற்றிக் கொள்ள, மூளை செய்யும் உபயம். ஃப்ரேம் கான்ஸப்ட் இல்லாத நிஜ உலகில்..., தொடர்ச்சியாய் கிடைக்கும் ஒளியின் மூலமாக மட்டுமே உள்வாங்கும் அசைவுகளையும், எவ்வாறு நம் மூளை புரிந்து கொள்கிறதோ, கிட்டத்தட்ட அந்த விசயத்தை…,

…. அசைவற்ற சில படச்சுருள்களை, ஒரு நொடிக்கு இத்தனை முறையென்று தொடர்ச்சியாக கண்ணில் காட்டும் பொழுதும், அந்த இல்யூஷனை, உண்மையான அசைவு [அல்லது பொய்யான உண்மை] என்று உணர்ந்து கொள்கிறது. அது…..


Short-Range Apparent Motion.
*****

இந்த ஷார்ட் ரேஞ்ச் விசயமே, பின்நாளில் (1888) திரைப்படமாக உருவெடுத்தது. அதாவது ப்ரொஜக்ட்ராக!! ஆரம்பத்தில் ஆளுக்கு அஞ்சு நிமிசமென்ற கணக்கில், பயாஸ்கோப்பில் ஒவ்வொருத்தருக்காக காட்டப்பட்ட படங்கள், பின் திரையில் காண்பிக்கப் பட்டன. அப்பொழுது எடுக்கப் படங்கள் அனைத்தும், எதார்த்த மலையாள சினிமாக்களின் முன்னோடி.

ஒரு கிலோ மீட்டருக்கு அந்தப் பக்கமிருந்து வரும் ரயிலை, முக்காலி போட்ட கேமரா ஆடாமல் அசையாமல் படம் பிடித்த்த்த்த்துக் கொண்டேயிருக்கும். ஸ்டேஷனில் ரயில் நின்று, திரும்ப கிளம்பிப் போனாலும், கேமரா சப்பாணிதான். இன்ச் நகராது. இது நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. ஒரு மாறுதலுக்காக இரயிலுக்குப் பதிலாக, இப்பொழுது மக்கள் ரோட்டில் நடப்பது  காட்டப்பட்டது. 

FX Bits
ஆளுக்கொரு ஃப்ரேம் ரேட் வேகத்தில் கேமராவில் பதிவு செய்த ஊமைப் படங்களை, அதே போல ஆளுக்கொரு வேகத்தில் ப்ரொஜக்டரில் ஓட்டிக் கொண்டிருந்த பொழுதுதான், 1923-ல் சினிமாவில் ஆடியோவும் இணைக்கப்பட்டது.

அதன் பிறகு வித்தியாசமா வேகத்தில் ப்ரொஜக்டரை ஓட்ட முடியாததால், 1926-ல் இனி அத்தனை ப்ரொஜக்டர்களும், ஒரு நொடிக்கு 24 ஃப்ரேம்களில் படத்தை காட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஒரு நொடிக்கு [சுமார்] பதினாறு ஃப்ரேம்களில் எடுக்கப்பட்ட உலகின் முதல் ஊமைப்படம் தொடங்கி (இந்த டைட்டிலுக்கு எடிசனில் ஆரம்பித்து ஏகப்பட்ட அடிதடி), இருபத்து நான்கு ஃப்ரேம்களில் எடுக்கப்பட்டு, நாளை வெளியாகப் போகும் கலைஞரின் இளைஞன் வரை, நம்மை கட்டிப் போட்டிருக்கும், செல்லுலாய்ட் மேஜிக்கும், செக்ஸைப் போலவே; அலுப்பதேயில்லை! காரணம்……?

Audience of Time என்பது எந்த ஊடகத்திற்கும் பொருந்தும். அவதார் என்ற இன்றைய சரித்திரம், நாளை அரைகுறை கார்ட்டூன் போலத் தெரியலாம். ஆனால் டிஸம்பர் 2009-ல், நாம் வாய் பிளந்தது உண்மை. அதுவேதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டு முழுவதும் நடந்தது. இருபத்தொன்றிலும் அது மட்டுமே நடக்கும். மாறாத மாற்றமென்பது, நாம் சினிமாவை வாய் பிளந்து பார்ப்பது மட்டும்தான். அந்த ஆச்சரிய வாய் பிளப்பு, கொட்டாவியாக மாறும் போது…, சினிமாவின் தொழில்நுட்பம் தன்னையும், நம்மையும் அடுத்த வாய் பிளப்பிற்கு எடுத்துச் சென்றுவிடும்.

அதைதான் ஒரு தொழில்முறை மேஜிக் நிபுணர், சினிமாவிலும் முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினார். மேற்கே போகும் ரயில்களையே பார்த்து, பார்த்து சலித்துப் போன மக்கள்… கொட்டாவி விட ஆரம்பித்த பொழுதுதான்… 

செலுலாய்டின் FX வரலாறு ஆரம்பித்தது.


*****

தொடரும்.......

10 பேர் சொல்றாங்க...

  1. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    super........

  2. கொழந்த என்ன சொல்றாருன்னா:

    அதுவந்து டெஸ்ட் கமென்ட்.........

  3. அம்சவல்லி கஜக்கோல் என்ன சொல்றாருன்னா:

    ஹைய்யா எனக்கு மிகவும் பிடித்த தொடர், ஆரம்பமே அசத்தல். இந்தமுறையாவது சகுனம் நன்றாக அமைய எல்லாம் வல்ல பிதாவை வேண்டுகிறேன்!

  4. இளங்கன்று என்ன சொல்றாருன்னா:

    சக்க start. அடுத்த பதிவுக்கு, ஆர்வம் எகிறியிருகுது..

  5. எஸ்.கே என்ன சொல்றாருன்னா:

    மீண்டும் ஆர்வம்!:-)

  6. Thomas Ruban என்ன சொல்றாருன்னா:

    ஹைய்யா அசத்தலான அடுத்த தொடர்:-)))

  7. ...αηαη∂.... என்ன சொல்றாருன்னா:

    மறுபடியும் :) :) :)

  8. Katz என்ன சொல்றாருன்னா:

    rocking.

  9. மகேஷ் என்ன சொல்றாருன்னா:

    supereb!

  10. தமிழினியன் என்ன சொல்றாருன்னா:

    சரி... fx02 வுக்கு எத்தனை மாதம் காத்திருக்குறது. சீக்கிரம் வாங்க

Leave a Reply